நிலுவையிலுள்ள பணிகளை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு இயக்கம் 5.0-ல் புவியியல் அறிவியல் அமைச்சகத்தின் முன்னேற்றங்கள்
அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலுவைப் பணிகளைக் களையும் சிறப்பு இயக்கம் 5.0-ன் கீழ், புவி அறிவியல் அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தூய்மையைப் பேணுதல், ஆவண மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் நிலுவைப் பணிகளை உரிய காலத்தில் முடித்தல் ஆகியவற்றை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமரின் தூய்மை இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, புவி அறிவியல் அமைச்சகம் இதுவரை 54 தூய்மைப் பணிகளை மேற்கொண்டது. மேலும், 500 கோப்புகளை ஆய்வு செய்து, அவற்றில் 192 கோப்புகள் களையப்பட்டன. மேலும், 9 பொது மக்களின் குறைகள், 3 பிரதமர் அலுவலகக் குறிப்புகள் மற்றும் பிற முக்கியக் குறிப்புகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
பழைய பொருட்கள் மற்றும் மின்னணுக் கழிவுகளை விற்று ரூ. 33.23 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டதுடன், சுமார் 8,750 சதுர அடி அலுவலக இடமும் தூய்மைபடுத்தபட்டுள்ளது. இந்த இயக்கம், நிர்வாகத் திறனை நவீனமயமாக்குவதற்கும், வெளிப்படையான பொதுச் சேவையை வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.


கருத்துகள்