முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் தவெக கூட்ட நெரிசல் மக்கள் பலி வழக்கு சிபிஐக்கு மாற்றமாகிறது உச்சநீதிமன்றம் உத்தரவு

கரூர் தவெக கூட்ட நெரிசல் மக்கள் பலி வழக்கு சிபிஐக்கு மாற்றமாகிறது. 




சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காரணம் தன்னுடைய அதிகார வரம்பிற்குள் வராத வழக்கை எவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.           கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின், தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரப்  பயணக் கூட்டத்துக்கு வந்த கூட்டத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நியமித்தது.




இதற்கிடையே, வழக்கு தொடர்பான கரூர் காவல்துறை விசாரணைக்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜியான, அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. அதன்பின்



அஸ்ரா கார்க்கும் கரூருக்குச் சென்று, உயிர் பலிக்குக் காரணம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் , உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. 'சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது தவறு என்றும் நடந்த சம்பவத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும்' எனவும் அதில் முறையிட்டனர்.






உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏனென்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 'இந்த விஷயத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவும் முரண்பட்டிருக்கின்றன.




'இதில் நீதிமன்ற நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் கருத்துத் தெரிவித்து, அரசு சார்பாக பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யும் படி வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வெளியானது.  அதன்படி சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில் விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.  அதில் இரண்டு ஐபிஎஸ் உயர் அலுவலர்கள் இடம்பெற வேண்டும். அவர்கள் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.






இது எப்படி கிரிமினல் ரிட் மனுவாக  உயர் நீதிமன்றம் மூலம் பதிவு செய்யப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கையளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். 




பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் உண்மையில் அவர்களால் தாக்கல் செய்யவில்லை என்று வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அதற்கு நீதிபதி மகேஸ்வரி, அது உண்மை எனில் நாங்கள் அதை கவனத்தில் கொள்வோம். (அது பார் கௌன்சில் கவனிக்க வேண்டிய தகவல் என்ற போதும்) சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்பாடுகள் பற்றி தீவிரமாகக் கவனித்தோம்.




கரூர் மாவட்டம்  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் வரம்பிற்கு உட்பட்டதாக எல்லை இருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எப்படி அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியின் முடிவை நீதிபதி கடுமையாகவே விமர்சித்தார்.


இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்கக் கோரிய மனுவானது, எவ்வாறு கிரிமினல் வழக்கின் வரம்பிற்கு உட்பட்டதாக இருக்குமென்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்க வேண்டும். இதனால் தான், நாங்கள் நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென் விரும்புகிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவில் 2 ஐபிஎஸ் உயர் அலுவலர்கள் தமிழ்நாடு கேடராக இருக்கலாம்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது: நீதிபதிகள்






அரசியல் கட்சிகளுக்கு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கில், எப்படி கிரிமினல் வழக்கின் வரம்பிற்குள் தனி நீதிபதி விசாரித்தார் என விளக்கம் கேட்டுள்ளோம்: நீதிபதிகள்


எந்த ஆவணங்களையும் பரிசீலிக்காமல், தன்னிச்சையாக தனிநீதிபதி SIT விசாரணைக்கு உத்தரவிட்டது எப்படி எனவும் விளக்கம் கோரப்பட்டுள்ளது: நீதிபதிகள்

SIT விசாரணைக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பல கேள்விகள் எழுவதால், நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம் என நீதிபதிகள் கருத்து.  நீதிபதி அஜய் ரஸ்தோகி, பி.காம்., எல்.எல்.பி., முடித்து 

1958 ஆம் ஆண்டில் பிறந்தார். 1982 ஆம் ஆண்டில்  வழக்கறிஞராகப் பதிவுசெய்து இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அரசியலமைப்பு, சிவில் சர்வீஸ் மற்றும் தொழிலாளர் விஷயங்களில் பயிற்சி பெற்றவரது சிறப்புத் துறை சேவை மற்றும் தொழிலாளர் சட்டம். பயிற்சி பெற்றவர் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி , 2004 ஆம் ஆண்டு அன்று இராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், மே மாதம் 29 ஆம் தேதி , 2006 ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். மார்ச் மாதம் 1ஆம் தேதி , 2018 ஆம் ஆண்டில் திரிபுரா மாநிலத்தில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நவம்பர் மாதம் 2 ஆம் தேதி, 2018 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 17 ஆம் தேதி , 2023 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

உச்ச நீதிமன்றத்தில் தனது பதவிக் காலத்தில், அஜய் ரஸ்தோகி 158 தீர்ப்புகளை எழுதினார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நடைமுறைக்கு எதிரான சவால்கள், மற்றும் விபச்சாரத்தை குற்றமற்றதாக்குதல் மற்றும் கருணைக்கொலைக்கான உரிமை குறித்த வாதங்களைக் கேட்ட அமர்வுகளில் ரஸ்தோகி உறுப்பினராவார். என்பது கூடுதல் தகவல்.

தற்போது அரசியல் களத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு இப்போது 'அட்டென்ஷன்' மற்றும் தலைவர் மக்கள் மத்தியில் தேர்தல் அங்கீகாரம் கிடைக்கும் காலம் வரும் நிலையை உணரந்து அக் கட்சியினர் தயாராகி விட்ட நிலையில்



"மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை" என்பதைப் போல அவரது அரசியல் வருகையை திமுகவின் கூட்டணிக் கட்சிகள் மாத்திரம் எதிர்க்கும் நிலையைத் தான் காண்கிறோம்.

அதைப் போல நடிகர் விஜய் சும்மா இருந்தாலும், அவர் மீது நாளும் பொழுதும் ஆளாளுக்கு பாய்ந்து, பாய்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்துத் தான் தாக்குகிறார்கள்

ஆனால், நாள் தோறும் என்று சொல்வதைவிட நாளும், பொழுதும் நடிகர் விஜய் தான் இங்கு பேசு பொருளாகிறார். இதற்கு உபயம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே என்ற விமர்சனம் எழாமல் இல்லை! அவர்கள் தரப்பு ஐ.டி விங்க் ஒரு பக்கம்  பறக்கிறது. முக்கிய மெயின்ஸ்டீர்ம் மீடியாக்கள் கூட நடிகர் விஜய்யை வறுத்தெடுக்கின்றன. 

இது போதாதென்று எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள் என ஆஞ்சநேயர் வால் நீளத்தை விட அதிகமான அளவில் கூட்டறிக்கை வெளியிட்டு நடிகர் விஜய்யை வெளுத்து வாங்குகிறார்கள்! ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஆதரவு குறையவில்லை. காரணம் வாக்கு அரசியல் தான் கூடும் கூட்டம் தான். புலியை பார்த்து பூனை சூடுபோட்ட கதைபோல கமலஹசன் மற்றும் பல கூட்டம் வராத சில நடிகர்கள் புலம்பல் ஒருபக்கம்.

போதாக்குறைக்கு காவல்துறை உயர்பணி அலுவலர்கள் வருவாய்த் துறை உயர் பணி அலுவலர்கள் வேறு விலாவாரியாக பேட்டி தந்து விஜய் மீது தான் தவறுள்ளது என எஸ்டாபிளீஸ்மெண்ட்  செய்கிறார்கள்.

திமுக கூட்டணிக் கட்சிகளோ தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி உறவை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக நடிகர் விஜய்யை விளாசித் தள்ளுகிறார்கள்.

இதில திருமாவளவன் தான் முதல்வர் வியக்கிற மாதிரி பேசி அதிகமாக ஸ்கோர் பண்ணிட்டாருன்னு சொல்லலாம். ஒரு வகையில் முதல்வர் மு. க.ஸ்டாலினின் மனசாட்சியாக அவர் தன் விசுவாசத்தை காட்ட நினைத்தாரோ என்னவோ.?

இதில் எதிபாக்காதவர் திக தலைவர் கி வீரமணிதன். அவர் வயதுக்கும், அனுபவத்திற்கும் நடிகர் விஜய்யைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், ஏதோ ஒரு பெரிய எதிரியிடம் மோதுவதைப் போல உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். ஈ வே.ரா பற்றி நாம்தமிழர் சீமான் பேசிய போது கூட இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருப்பாரா? என்பது தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல  நீதிபதியே விஜய்யை தாக்குகிறார். அவர் வகிக்கும் மிக உயர்ந்த பொறுப்புக்கு முன் நடிகர் விஜய் மக்கள் செல்வாக்கு உள்ள நபர் மட்டுமே வேறு ஒன்றுமில்லை. வழக்கில் விசாரணையை நடத்திச் சொல்லும் தீர்ப்பின் வாசகத்தில் நீதியை நிலை நாட்டி நீதிபதி பிரகாசிக்க வேண்டுமேயன்றி, வரம்பு மீறிக் கருத்துக்கள், அபிப்ராயங்களை அள்ளி வீசுவது அவரது மாண்புக்கு அழகல்ல என்பதே பலரது கருத்து.

நடிகர் விஜய்க்கு இளையோர் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு வட்டம் இருந்தாலும், அரசு லஞ்சம் ஊழல் பாதிப்புகள் காரணமாக பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு வருகிறது இது வரைக்குமான நடிகர் விஜய் அரசியலை பலரும் அனுமானித்த வகையில் அவர் பொது வாழ்க்கைக்கான மனிதராக இதுவரை உருவாகவில்லை. ஒரு தேர்தலுக்கு பிறகு, நடிகர் விஜய் அரசியலில் தொடர்வாரா? என்பதும்  பலருக்கு சந்தேகமாகவே உள்ளது.

அவர் ஒரு நிழல் ஹீரோ மட்டும் தானேயன்றி, நிஜ ஹீரோவல்ல. உண்மையில் நிஜ ஹீரோவாக இருந்திருந்தால், நடந்த அசம்பாவித சூழலை நன்கு கையாண்டு தன்னை நிரூபித்திருப்பார்.

 தவெக தலைவர் நடிகர் விஜய் விஷயத்தில் அவரை  ஆட்சியாளர்கள். அதிகமாக பேசுபடு பொருளாக்கி, பெரிய ஆளாக  அவருக்கு அனுதாப அலையை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது.

இது வேலியில் போகிற ஓணானை எடுத்து உள் சட்டைக்குள் போட்ட கதை தானே.

இப்படித்தான் பல ஆண்டு முன் அரசியலிலிருந்தே விலகுகிறேன் என்ற ஒரு கடிதத்தை செல்வி ஜெ.ஜெயலலிதா எழுதி பத்திரிக்கைகளுக்கு தந்தார். அதை மோப்பம் பிடித்து முனைவர் ம.நடராஜன் அந்த கடிதத்தை வழியிலேயே கொண்டு சென்றவரிடமிருந்து கைப்பற்றி ரகசியமாக ஒளித்து வைத்தார். இதை உளவுத் துறை மூலம் கேள்விப்பட்ட கலைஞர் மு. கருணாநிதி காவல்துறையை அனுப்பி, அதை முனைவர் ம.நடராஜன் வீட்டில் கைப்பற்றி ஊடகங்களில் வெளிப்படுத்தினார். விளைவு, எதிர்பாராத வகையில் மீண்டும் செல்வி ஜெ.ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டது.

அதைப் போலத் தான் முதல்வர் மு. க.ஸ்டாலின், நடிகர் விஜய் விவகாரத்தில் பதற்றப்பட்டு தன்னை சுற்றிலும் உள்ளவர்களை 'அலர்ட்' செய்து 'ஓவர் ரியாக்ஷன்' செய்ய வைக்கிறார். நிகழ்வதை அதன் போக்கில் இயல்பாக அணுகாமல் வலிந்து விஜய்யை பலவீனப்படுத்த முயல ஆனால் அது இயற்கையின் விதிப்படி  எதிர்வினையாற்றி விடும் நிலை தான் உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும்  அக்கட்சிப் பிரமுகர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் "பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க கரூர் எல்லையில் காத்திருந்தோம்,

ஆனால் காவல்துறை வரவேண்டாம் எனக் கூறியதால் கரூர் செல்லவில்லை, 

ஒரு வாரம் விடுமுறை என்பதால் நீதிமன்றத்தை உடனடியாக அணுக

முடியாத வகையில் சதி நடந்தது ,

காவல்துறை அழுத்தம் காரணமாகவே கரூர் வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்தோம்,

கரூர் நெரிசலுக்கு தவெக தான் காரணம் என ஒருதலைபட்சமாக தகவல்கள் வதந்தி பரப்பப்பட்டன,

வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கரூரில் மட்டுமே காவல்துறை எங்களை வரவேற்றது,

தவெகவை அமைதியாக்க சதி நடைபெற்றது,

தவெக தான் தவறுக்குக் காரணம் என்னும் தோற்றம் உருவாக்கப்பட்டது,

எங்களின் கருத்தைக் கேட்காமலேயே எங்களைக் குற்றவாளியாக்கினர்,

போலியான மனுக்களுக்கும் தவெகவிற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை,

தவெக சார்பில் நான் மட்டுமே உச்சநீதிமன்றத்தை நாடினேன்,

கரூர் நெரிசலுக்குக் காரணம் யார் என உண்மை வெளிவரும், கரூரில் நெரிசலில் உயிரிழந்தவர்களின் 41 பேரின் குடும்பத்தையும் விஜய் தத்தெடுக்கவுள்ளார், வாழ்நாள் முழுவதும் அந்தக் குடும்பத்திற்கு தேவையானதை அவர் செய்வார்" எனத் தெரிவித்தார். இந்த நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜயும் கருத்து தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலுவான காரணமாக அமைந்தது காவல்துறை மூத்த உயர் அதிகாரிகள் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்புத் தான்

காவல்துறை மூத்த உயர் அதிகாரிகள் அடுத்தடுத்த பத்திரிகையாளர்களை சந்திப்பை நடத்தி அனுமதி கொடுத்த காவல்துறை அதிகாரிகள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறியதை உச்ச நீதிமன்றம் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்த்துள்ளது


அதனால உச்சநீதிமன்றத்தின் 25 பக்கத்தில் வந்த தீர்ப்பை முழுவதும் படித்தால் இது தெளிவாகவே புரியும்..சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு மற்றும் தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் என இரண்டையும் ரத்து செய்துள்ளது உச்சநீதிமன்றம். 



திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஒரு நபர் கமிஷன், சிறப்பு புலனாய்வு குழு தொடரும் என்கிறார், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாறாக இருக்கிறதே. இந்த நிலையில்கரூர் நகர் காவல் நிலையத்தின் வழக்கு ஆவணங்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர், தனி நீதிபதியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஆகியவை, FIR மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட மற்ற அனைத்து ஆவணங்கள், டிஜிட்டல் அல்லது பிற ஆதாரங்களை, மேலும் விசாரணைக்காக உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.விசாரணையை எடுத்துக் கொள்வதற்காக, CBI இயக்குநர் உடனடியாக ஒரு மூத்த அதிகாரியையும் அவருக்கு உதவியாக மற்ற அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும்.விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பதற்கான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதாவது, அவை செயல்பட வேண்டியதில்லை. தமிழ்நாடு அரசு இந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உத்தரவிடப்படுகிறது. மேலும், தேவைப்பட்டால், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கரூர் டவுன் காவல் நிலையத்தின் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர், தனி நீதிபதியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மற்றும் மாண்புமிகு முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஆகியவை, FIR மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட மற்ற அனைத்து ஆவணங்கள், டிஜிட்டல் அல்லது பிற ஆதாரங்களை, மேலும் விசாரணைக்காக உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.விசாரணையை எடுத்துக் கொள்வதற்காக, CBI இயக்குநர் உடனடியாக ஒரு மூத்த அதிகாரியையும் அவருக்கு உதவியாக மற்ற அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும்.விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பதற்கான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதாவது, அவை செயல்பட வேண்டியதில்லை.தமிழ்நாடு அரசு இந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உத்தரவிடப்படுகிறது. மேலும், தேவைப்பட்டால், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...