முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சதுப்பு நிலச் சமவெளியில் ஊழல் அடுக்கு மாடி கட்டும் அரக்கர்கள்

மத்திய அரசின் நகரமைப்பு அங்கீகாரமான 'ராம் சார்' அறிவிக்கையில் இடம் பெற்ற பெரும்பாக்கம், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில்


கட்டிடம் கட்ட, 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி சுற்றுச்சூழல் மற்றும் கட்டிட அனுமதி வழங்கியுள்ளதாக, அறப்போர் இயக்கம் சார்பில் ஏற்கனவே புகார் தெரிவித்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமன சீமான் அது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.  பள்ளிக்கரணை: 'சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதியில் கைமாறிய கோடிகள் எவ்வளவு?' -





என சீமான் தமிழ்நாடு அரசை  விமர்சித்து வினா எழுப்பியுள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்து ரூபாய் 2,000 கோடி ஊழல் நடந்துள்ளது. தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 14.7 ஏக்கர் நிலப்பரப்பில் புலங்களின் அளவை எண்கள். 453, 495, 496, 497, 498 ஆகியவை பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் பெயரில் 1,250 ஆடம்பரக் குடியிருப்புகள் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) போன்ற துறைகள் சட்டத்தையும்,  அரசாணையையும், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி அனுமதி வழங்கியது தெரியவந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலங்களில், ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017 ன் படி, எந்தவொரு நிரந்தரக் கட்டுமானமும் கட்டுவதற்கு உறுதியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.





இந்த அடிப்படை விதியைத் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் கண்மூடித்தனமாகப் புறக்கணித்துள்ளனர். இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற விண்ணப்பித்த நிறுவனம், தங்கள் நிலம் சதுப்பு நிலத்திலிருந்து 1.2 கி.மீ. தொலைவில் இருப்பதாகக் கூறியுள்ளது.ஆனால், அந்த நிலம் சதுப்பு நிலத்தின் உள்ளேயே இருப்பதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) மற்றும் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (SEAC) ஆகியவை, பொதுமக்களின் பார்வைக்கு இருக்கக்கூடிய வரைபடங்களைக் கூடப் புறக்கணித்து, இந்த நிலம் ராம்சார் தளத்தின் "அருகில்" இருப்பதாகக் கூறி அனுமதி வழங்கியிருப்பது ஊயர் அலுவலர்களின் கூட்டு ஊழல் சதியைத் தெளிவாகவே உணர்த்துகிறது.






ஒருபுறம், மாநில அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் 2,000 கோடி ரூபாய் முதலீட்டுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) போடுகிறார்கள். மறுபுறம், குடிமைப் பணி (IAS) அதிகாரிகளோ சட்டத்தை மீறி அனுமதி கொடுக்கிறார்கள். இதன் பின்னணியில் இன்னும் எத்தனை கோடி ரூபாய் கையூட்டு கைமாறியது? இது வெறும் நிர்வாகச் சீர்கேடா அல்லது திமுக அமைச்சர்களின் நேரடித் தலையீடா? இத்தனைக் கேள்விகள் எழுப்பப்பட்ட பிறகும் முதலமைச்சர் அமைதிக்காப்பது பேரவலமாகும் . பிரிகேட் மார்கன் திட்டத்தின் நில புல அளவை எண்கள் 453, 495, 496, 496, 498 ஆகியவை ராம்சார் தளத்திற்கு உள்ளேயே வருகிறது என்று தமிழ்நாடு அரசுக்கும் நில நிர்வாகத் துறைக்கும் நன்றாகவே தெரியும்.




சட்டப்படி ராம்சார் நிலத்திற்குள் எந்தக் கட்டுமானத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான சுற்றுச்சூழல் துறை, பிரிகேட் நிறுவனத்திற்கு 15 ஏக்கர் அளவில் 1250 அடுக்குமாடிகள் கொண்ட வீடுகளைக் கட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதியும், அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டுமான அனுமதியும் கொடுத்துள்ளது. மேலும் அப்போதைய அமைச்சர் பொன்முடி  தலைமையிலான வனத்துறை, இந்த ராம்சார் தளத்தைப் பாதுகாக்காமல் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. ராம்சார் தளத்தை அறிவித்து விட்டு மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் சுற்றுச்சூழல் துறை இந்த ஊழலை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

"சதுப்பு நிலங்களைக் காப்போம்" என்று ஒருபுறம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதிமொழி எடுக்கிறார்; ஆனால், அதே வேளையில், அவரது ஆட்சியின் கீழ் இயங்கும் துறைகளோ 2,000 கோடி ரூபாய் மதிப்பிலானக் கட்டுமானத் திட்டத்திற்கு அனுமதியளித்து, ராம்சார் தளத்தை அழிப்பதற்குப் பாதை வகுக்கின்றன. சென்னையின் நுரையீரல் என்றும், வெள்ளத்தைத் தாங்கி நிற்கும் பாதுகாப்பு அரண் என்றும் போற்றப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, வெறும் பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்காகப் பலி கொடுக்க இந்த அரசு துணிந்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கே இழைக்கப்பட்டிருக்கும் துரோகமாகும்.

பிரிகேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற்று, அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மீட்டெடுக்க வேண்டும்.அறப்போர் இயக்கம் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஈடுபாடு குறித்தும் எந்தப் பாகுபாடுமின்றி ஆய்வுசெய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் இந்த சட்டவிரோத அனுமதிகளுக்குக் காரணமான அனைத்து அதிகாரிகள், அஅலுவலர்கள் மீதும் துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மத்திய பாரதிய ஜனதா கட்சி  மற்றும் மாநில திமுக அரசுகளை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். 2000 கோடி மதிப்பிலான கட்டுமானத்தை நிறுவ, பள்ளிக்கரணை ராம்சார் நிலத்தை 'பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தாரைவார்த்துள்ளது  தமிழ்நாடு அரசு. என்பது தெளிவாகிறது பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளைப் புறந்தள்ளி சட்ட விரோதமாக இந்த நிலத்தை தாரை வார்க்க தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறதென சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்த நிலையில் மேலும். அறப்போர் இயக்கமும், ஆதாரபூர்வமாக இது குறித்த விவரங்களைத் தொகுத்து வழங்கிய போதிலும், இது வரை மாநில அரசிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை என்பது  திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கை உணர்த்துகிறது எனவும். மாநில மதிப்பீட்டுக்குழு, சுற்றுச்சூழல் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் என பல்வேறு துறைகள் போட்டி போட்டுக்கொண்டு இந்த அனுமதியை வழங்குவதற்கு உதவியிருக்கிறது. இந்தக் கட்டிடம் அங்கு கட்டப்பட்டால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மழை, வெள்ளக்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிந்தும் சட்ட விரோதமாக அனுமதி வழங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெற்று ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தில் வழக்கு மூலம் வரும் விளைவுகளை தமிழ்நாடு அரசு சந்திக்கும் என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் 

நாராயணன் திருப்பதியும் தெரிவித்துள்ளார்.

2000 கோடி ரியல் எஸ்டேட் செய்ய பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் நிலத்தில் அனுமதி! 

பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் தளத்திற்குள் எந்தெந்த சர்வே எண்கள் வருகிறது என்பதை அறப்போர் இயக்கம் இதுவரை வெளியிடவில்லை. ராம்சார் நிலத்தை பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கீழ் வரும் தமிழ்நாடு ஈரநில ஆணையம் தான் வெளியிட்டுள்ளது . அதையே 

 பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் துறை கட்டுமான அனுமதி கொடுக்கிறது, வனத்துறை பொய்யான அறிக்கையை கொடுப்பது மட்டுமில்லாமல் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரநில ஆணையம் ராம்சார் நிலத்தை பாதுகாக்காமல் மக்களுக்கு துரோகம் செய்கிறது. 

இது அனைத்திற்கும் ஒரே காரணம் லஞ்சம் மற்றும் ஊழல் ! மக்கள் வெள்ளத்தில் எப்படி பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. கொள்ளையடிப்பது மட்டுமே எங்கள் கொள்கை என்று தமிழ்நாடு திமுக அரசு இருப்பதால் தான். 

ஒரு பக்கம் முதலமைச்சர்  ராம்சார் நிலத்தை பாதுகாப்பேன் என்று சொல்வார். மறுபக்கம் ராம்சார் நிலத்திலேயே 2000 கோடி முதலீடு என்று அவரும் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவும் பிரிகேட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 

இத்தனை துறைகள் சம்பந்தப்பட்ட இந்த ஊழலில் இந்தத் துறைகளில் இருக்கும் யாராவது ஒரு ஐஏஎஸ் அதிகாரியோ ஒரு அமைச்சரோ நினைத்திருந்தால் கூட இந்த ஊழலைத் தடுத்திருக்கலாம். அந்த ஒருவர் கூட அரசில் இல்லாதது தான் கொடுமை! 

சுற்றுச்சூழல் பற்றி தினமும் ட்வீட் போடும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாகு IAS இந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வாரா? தனக்குத்தானே அப்பழுக்கற்ற அதிகாரி என்று சான்றிதழ் கொடுத்துக்கொண்ட CMDA செயலாளர் பிரகாஷ் IAS கட்டுமான அனுமதியை ரத்து செய்வாரா? என்பதே பல அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் புவியியல் அறிஞர்கள் எழுப்பும் வினா, விடைகாணக் காத்திருக்கிறது.ராம்சார் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் மோசடியாக ஊழல் செய்து விதிகளை மீறி பிரிகேட் நிறுவனத்திற்கு 1250 வீடுகள் கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் கட்டிட அனுமதி பற்றிய அறப்போர் புகார் மற்றும் ஆதாரங்கள் குறித்து ஆங்கில நாளேடுகள் பேசும் நிலையில்! வரும் தகவல்பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டுவதற்கு  தமிழ்நாடு அரசிடம் அனுமதி வாங்கியவர் ஆடிட்டர் குருமூர்த்தி, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு நெருக்கமான ரிலையன்ஸ் பாலு என்பது சிறப்புத் தகவல்

மௌனமாக இதைக் கடந்து விடலாம் என முதல்வரோ, அமைச்சர்களோ நினைக்காமல் பதில் சொல்லி வேண்டிய நிலை நீதிமன்றம் உறுவாக்கும்.ராம்சர் நிலங்களைத்  தேடுதலில் மார்ச் மாதம் 2025 ல் வெளியான அதிர்ச்சி செய்தி இது 

தமிழ்நாட்டில் 20 சதுப்பு நிலப் பகுதிகள் (ராம்சர்) உள்ள நிலையில், அதன் பாதுகாப்பிற்காக மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதியைப் பெற தமிழ்நாடு அரசு தவறி விட்டது.

சதுப்பு நிலப்பாதுகாப்பிற்காக மத்திய அரசு 44.84 கோடி ஒதுங்கியிருந்த நிலையில், கடைசியாக தமிழ்நாடு 1.37 கோடி நிதியை 2019-20 ல் பெற்றிருந்தது. 

2022 வரை தமிழ்நாட்டில் ஒரே ஒரு சதுப்பு (ராம்சர்) நிலக்காடு தான் என்றாலும், 2022 ஆம் ஆண்டு முதல் கோரப் படவேண்டிய நிதியை கூட அரசு கேட்டுப் பெறவில்லை. 

ஒடிசா, மிசோரமில் 1ம் , ஜம்மு-காஷ்மீரில் 5 ம் , உத்தரபிரதேசத்தில் 10 ம், எனக் குறைந்த ராம்சார் சதுப்பு நிலங்கள் கொண்ட மாநிலங்கள் கூட, மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இதில் பொதுநீதி யாதெனில் :-  "ஊழலால் திருட்டுப் போன உரிமைத் தீவுகளை  தீராத ஆவேசப் புயல் கொண்டு உருட்டி உடன் மீட்ட உலைக் களமாக  அறப்போர் இயக்கம்.                     கால் வைத்தால் புதைந்தே போகும் சேறுள்ள சதுப்பு நிலங்களில் மிருகங்கள்  அல்லது மனிதன் வாழ முடியாத பகுதியாகும், பறவைகளுக்கு மட்டுமே அது வாழ்விடம் ஈரப்பதத்துடனிருக்கும் இந்த நிலத்தில், நீரில் வாழும் அல்லது அதிகப்படியான ஈரப்பதத்தைத் தாங்கும் தாவரங்கள் மட்டுமே வளரும். உதாரணமாக, அலையாத்திக் காடுகளைக் குறிப்பிடலாம்.

இந்த சதுப்பு நிலங்கள் நன்னீர், உப்புநீர் என இருவகையாக இருக்கும். சிதம்பரம் அருகில் பிச்சாவரம், சுந்தரவனம் போன்றவை உப்புநீர் சதுப்பு நிலம். பள்ளிக்கரணை, வேடந்தாங்கள் போன்றவை நன்னீர் சதுப்பு நிலமாகிறது. ஆண்டு முழுவதும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு நீர் நிரம்பியோ அல்லது நீர் தோய்ந்தோ இருக்கும் நிலத்தை, நிலம் என்றும் நீர்நிலம் என்றும் திட்டவட்டமாக சொல்ல முடியாது. அதனை ‘சதுப்புநிலம்’ எனப்படுகிறது.

அதாவது, நிலமும் நீரும் இணையும் இடைப்பட்ட பகுதி. சகதி நிறைந்த, ஆழம் குறைந்த நீர்பிடிப்புப் நீய்நிலை பகுதியாக இது விளங்கும்.

அன்றொரு நாள் ..காலச் சதியின் கதவுகள் திறந்து கொள்ள ஊழித் துரோகத் தீ உட்புகுந்து உள்வாங்கி உமிழ்ந்து செல்ல

சேறு மீந்திருக்கும் சதுப்பு நிலச் சமவெளியாய் இன்று சலனமற்ற சமுத்திரச் சமாதியின் மேல் சரித்திரம் மறந்து சரிந்து கிடக்கின்றன. சதுப்புச் சேற்றில் வாழக் காத்திருக்கும் அடுத்த தலைமுறைக்கு அனுதாபங்கள் தான் மிஞ்சும் இந்த அசுர அரக்கர்களின் செயலால்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...