கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்த போது வேப்பூரை அருகில் அரியநாச்சி கிராமத்தில் சிவக்குமாருக்குச் சொந்தமான நிலத்தில் அவரின் மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்ட பல பெண்கள் மக்காச்சோளம் களையெடுத்தனர்.
அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் மிகுந்த ஒளி மின்னல் வந்து பின் இடி தாக்கியதால்ஆரம்பித்தது. இந்தச் சூழலில் அங்கு வேலை செய்தவர்கள் அலறியடித்து ஓடினர். மாலை சுமார் 4.30 மணிக்கு ஊர்க்காரர்களுக்கு போன் செய்த தவமணி என்ற பெண், `சிவக்குமார் நிலத்தில் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி இடித்தது அப்போ து நாங்கள் மயங்கி விழுந்துவிட்டோம். நான் இப்போதுதான் கண் விழித்தேன் மற்றவர்கள் மயக்கத்திலேயே கிடக்கிறார்கள்' எனக் கூறியுள்ளார். அதன்பிறகு ஊர்க்காரர்களும், பக்கத்து நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் தவமணி சொன்ன இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தனர். அப்போதுப் களையெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நில உரிமையாளர் சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி, கழுதூர் கிராமத்தை சேர்ந்த கனிதா, பாரிஜாதம், சின்னபொண்ணு என்கிற ராஜேஸ்வரி உள்ளிட்ட நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர்.அதையடுத்து தவமணியை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்கள், வேப்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதேபோல மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கும் தகவல் அளித்தனர் நான்குபேரின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வு சோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தவமணி, `வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி. அவ்வளவு வெளிச்சத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை' என மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். தவமணியின் நிலை குறித்துப் பேசிய மருத்துவர்கள், `தவமணி தற்போது அதிர்ச்சியில் இருக்கிறார். மின்னல் தாக்கியதில் அவரது கண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை சதவிகிதம் பார்வை திரும்பவும் வரும் என்பதை இப்போது உறுதியாகக் கூற முடியாது" என்கின்றனர்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ரூபாய்.5 லட்சம் நிதியுதவி அவர்களின் குடும்ப வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்குக்கு அவரது முதல்வருக்கான சொந்த நிதியில்
50.000 வழங்கிய நிலையில்இடி தாக்கி உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு
ரூ.5 லட்சம் மட்டும் தானா? ரூ. 25 லட்சம் இழப்பீடு
அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்! ன பாட்டாளி மக்கள் கட்சி யின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார், அவரது பதிவில் :-
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது இடி தாக்கியதில் கனிதா, பாரிஜாதம், சின்னப்பொண்ணு, ராஜேஸ்வரி ஆகிய 4 பெண்கள் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடி தாக்கி உயிரிழந்த வேளாண் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், கரூரில் அரசியல் கட்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும் தலா ரூபாய்.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசு, உணவு படைக்கும் கடவுள்களான இந்தப் பெண் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூபாய்.5 லட்சம் மட்டும் வழங்குவதை ஏற்க முடியாது. அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய்.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இடி தாக்கிய இந்த விபத்தில் பார்வையை இழந்திருக்கும் தவமணி என்ற பெண்மணிக்கு தரமான மருத்துவம் அளிப்பதுடன், அவருக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவியும் வழங்க வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.கள்ள விஷச்சாராயம் குடித்து செத்தால் பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி கொடுப்பது அநியாயம் என அறிவிப்பு வெளியான போது பலர் பேசிய நிலையில்
அரசு பேருந்துகளை நம்பி ஏறிப் போய் அதில் விபத்தில் சிக்கி பலியானால் கூட இந்த அளவு நிவாரணம் தருவதில்லை.
என மக்கள் உணர்ச்சிவசப்படலாம் அரசு உணர்ச்சிவசப்படக் கூடாது எனச் சொன்ன தலைவர்கள் உண்டு.
பின்னாளில் வெவ்வேறு விஷயங்களுக்கு குறைவான நிவாரண நிதி அறிவிக்கும் போது மக்கள் யோசிப்பாவார்கள் என்ற ஆளும் கட்சி நபர்களும் உண்டு
அதன் பிறகு அப்பாவி மக்கள் பரிதாபகரமான முறையில் அகால மரணத்திற்கு ஆளாகி அரசு குறைவான நிவாரண நிதி அறிவிக்க,
கள்ளச்சாராய நிவாரண நிதியை சுட்டிக்காட்டி சுட்டிக்காட்டி திமுக அரசை பல்வேறு தரப்பினரும் கடுமையாகவே விமர்சிக்கின்றனர்.
இப்போது விவசாயம் பார்க்கச் சென்று வயல்வெளியில் மின்னல் தாக்கி நான்கு பேர் பலியான சம்பவத்தில் மீண்டும் அரசு மீது அவர்கள் விமர்சனம்.
ஆனா ஒன்று, அந்த பத்து லட்சம் கொடுக்கலாம் என இந்த நடைமுறை கள்ள விஷ சாராயம் குடித்து இறந்தவர்கள் விஷயத்தில் அதிகம் தான் என்பது தான் நடுநிலையாளர்கள் கருத்து.




கருத்துகள்