கரூர் கூட்ட நெரிசல் பலியான வழக்கு தொடர்பான சிறப்பு புலானாய்வு குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள்,
மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உள்ளிட்ட 5 வழக்குகளில் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று 10.10.2024 ல் நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் விமலா உள்ளிட்டவர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
அதன்படி ஐ.ஜி. அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலரும் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, ஆகியோரை அமர்த்தி திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்ளவை உறுப்பினர் வில்சன்,குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தரன் என நான்கு வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். அதே சமயம் விஜய் சார்பாக தாமா சேஷாத்ரி, கோபால் சுப்பிரமணியம் சங்கர் நாராயணன் ஆரிமா சுந்தரம் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். அதன்படி த.வெ.க. தரப்பில் வாதிடுகையில், “கரூரில் நடந்த சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்புப் புலனாய்வுக் குழுவான (SIT) அமைத்து விசாரணை நடக்கட்டும். அதனை முன்னாள் நீதிபதி மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத தவெக தலைவர் விஜய்யை உயர்நீதிமன்ற விசாரணை நீதிபதி தேவையில்லாமல் விமர்சித்துள்ளார். விஜய் குறித்து பல்வேறு கருத்துகளை சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
எங்கள் தரப்பின் விளக்கமே கேட்காமல் உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது. சம்பவம் நடந்ததும் கரூரில் இருந்து விஜய் மறைந்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை செய்த கட்டாயத்திலேயே விஜய் வெளியேறினார். அதாவது காவல்துறையின் பாதுகாப்புடன் தான் விஜய் கரூரில் இருந்து வெளியேறினார். பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “வழிகாட்டு நெறிமுறைகளை விசாரிக்கும் வழக்கு என்றால் இதனை சென்னை உயர்நீதிமன்றத்நின் மதுரை கிளையே விசாரித்திருக்கலாமே?. இந்த வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் விசாரணையின் வரம்பிற்கு உட்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் ஏன் தனிநீதிபதி விசாரணைக்கு எடுத்தது என விளக்கம் கொடுங்கள்” எனத் தெரிவித்தனர்."சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணை வரம்பிற்குள் உள்ள ஒரு வழக்கை, சென்னையில் உள்ள முதன்மைக் கிளை எப்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது என்பதை விளக்க வேண்டும்." - உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி மகேஸ்வரி வினா? எழுப்பிய நிலையில் எஸ் ஐ டி விசாரணையில் நம்பிக்கை இல்லை
கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை நடத்தும் விசாரணையில் நம்பிக்கை இல்லை
உண்மையை வெளிக்கொணர வேண்டுமென்றால் உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என வாதிட்ட நிலையில் விஜய் ஏன் பாதிக்கப் பட்டவர்களை பார்க்க வில்லை என்ற வினா தேவையற்றது எனவும்
கரூர் கூட்ட நெரிசலில் தனது மகனை இழந்த பன்னீர்செல்வம் பிச்சைமுத்து சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேஷாத்ரி நாயுடு, இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய காவல்துறை பாதுகாப்பு இல்லை எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வாதம் முடிந்து சிபிஐ விசாரணை கேட்ட மனுக்கள் மதியம் இரண்டு மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தன் கடந்த 7ம் தேதி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அதன்படி த.வெ.க. தரப்பில் வாதிடுகையில், “கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணை நடக்கட்டும். அதனை முன்னாள் நீதிபதி மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத விஜய்யை உயர்நீதிமன்ற விசாரணை நீதிபதி விமர்சித்துள்ளார். விஜய் குறித்து பல்வேறு கருத்துகளை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எங்கள் தரப்பின் விளக்கமே கேட்காமல் உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது. சம்பவம் நடந்ததும் கரூரில் இருந்து விஜய் மறைந்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை கட்டாயத்திலேயே தவெக தலைவர் விஜய் வெளியேறினார். அதாவது காவல்துறையின் பாதுகாப்புடன் தான் விஜய் கரூரில் இருந்து வெளியேறினார். பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “வழிகாட்டு நெறிமுறைகளை விசாரிக்கும் வழக்கு என்றால் இதனை உயர்நீதிமன்ற கிளையே விசாரித்திருக்கலாமே?. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணையின் வரம்பிற்கு உட்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் ஏன் விசாரணைக்கு எடுத்தது என விளக்கம் கொடுங்கள்” எனத் தெரிவித்தனர்.தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம், "உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தவெக இணைக்கப்படவேயில்லை. எங்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறவிட்டதாக உயர் நீதிமன்றம் எங்கள் மீது குற்றம் சாட்டியது. தவெக தலைவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டதாகவும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அக்.3-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, கூட்டத்தைக் கட்டுப்படுத்த நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்கக் கோரும் மனுவை அடிப்படையாகக் கொண்டது" என வாதிட்டார். தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.உச்சநீதிமன்றத்தில் மேலும் நடக்கும் வாதப் பிரதிவாதங்களில்
கூட்டம் அமைதியாக இருந்த போதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர் - கூட்டநெரிசலில் சகோதரியை இழந்தவர் தரப்பு வாதம் முன்வைத்தது
கூட்ட நெரிசல் ஏற்படப்போகிறது என காவலரைத் தவிர அங்கிருந்த அனைவரும் அறிந்திருந்தனர்..
காவல்துறை அலட்சியத்தால் கோர சம்பவம் நிகழ்ந்தது; இந்த வழக்கை காவல்துறை விசாரிக்கக் கூடாது..
நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது..
அந்த ஆம்புலன்சில் செந்தில் பாலாஜியின் படம் பொறித்த ஸ்டிக்கர் இருந்தது..
கூட்ட நெரிசலுக்கு விஜய் தான் காரணம் என தகவல்களை பரப்பினர்..
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் தமிழக அரசின் மீது தவறில்லை என அரசு பணி மூத்த அலுவலர்கள் பேட்டி அளித்தனர்..
சம்பவம் நடந்த ஒரே நாளில் இரவில் 30 உடல்களுக்கு கூராய்வு செய்துள்ளனர்; அதிகாலை 4 மணிக்கு உடல்கள் அவசர அவசரபாக எரிக்கப்பட்டுள்ளன...
30 உடல்களுக்கு கூராய்வு செய்ய திடீரென மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்?..
அரசாணை வெளிவரும் முன்பே விசாரணை ஆணையம் அதன் விசாரணையைத் தொடங்கியது..
கூட்டநெரிசல் ஏற்படும் என அ.தி.மு.க.விற்கு தர மறுத்த இடத்தை த.வெ.க.விற்கு காவல்துறையினர் கொடுத்தனர் - சகோதரியை இழந்தவர் தரப்பு
உச்சநீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியுடன் உடற்கூறு ஆய்வு இரவில் நடத்தலாம் - நீதிபதிகள்
சிறப்பு அனுமதி அல்லது உத்தரவுகள் அடிப்படையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவது வழக்கம் தான்..
கூட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை கணிக்க காவல் உளவுத்துறை தவறிவிட்டது - சகோதரியை இழந்தவர் தரப்பு
பிரச்சாரக் கூட்டத்திற்கு நெறிமுறைகள் வகுக்குமாறு மனுதாரர் கேட்டார்; அவர் கேட்டது ஒன்று உயர்நீதிமன்றம் கொடுத்தது வேறு ஒன்று - உச்சநீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை புரிந்து கொள்ள முடியவில்லை..
கூட்டத்திற்கு அனுமதி கேட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கவலை அளிக்கிறது - உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களில் யாருக்கும் கேட்காத நியாயங்கள் உச்சநீதிமன்றத்தில் தற்போது கேட்கிறது இந்த நிலையில்
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழ்நாடு அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதித்து மனுதாரர்களும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தள்ளி வைத்த உச்சநீதிமன்றம். இந்த நிலையில்
"அங்கே சிரிப்பவர்கள்சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு..
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு....
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது!...அன்று சிரிப்பது யார்?
அழுவது யார்? தெரியும் அப்போது.! .............................
தோட்டம் காக்கப்போட்ட வேலி பயிரைத் தின்பதோ?
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ?
நானொரு கை பார்க்கிறேன்! நேரம் வரும் கேட்கிறேன்!
பூனை அல்ல புலிதானென்று போகப் போகக் காட்டுகிறேன்,!"" என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் குரல் இனி ஓங்கி ஒலிக்கட்டும் பின் நல்ல கூட்டனி மூலம் ஜொலிக்கட்டும். ஊழல் ஆட்சியை முடிக்கட்டும் என தவெக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வரவேற்றுள்ளனர்



















கருத்துகள்