சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட
பிள்ளையார்பட்டி சாலையில் விவேனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகே, காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற TN 39 N 0198 அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற TN 63 N 1776 அரசுப் பேருந்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளானதில், பேருந்துகளில் பயணம் செய்தவர்களில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், தற்போது வரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 34 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனை, மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், நாச்சியாபுரம் திருப்பத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெறும் நிலை காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்தில் டிரைவர் உட்பட 8 பேர் பலியான நிலையில் படுகாயம் அடைந்த 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இதனால் இந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகியது. இந்த கோர விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.
சமீபத்தில் தென்காசியில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் காட்டாம்பூர் அருகில் அரசு பேரூந்தின் மோசமான முன் டயர் வெடித்து பயணிகள் ஓட்டுநர் திறமை காரணமாக தப்பிய நிகழ்வும் உண்டு. அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் பலியாகி பலர் படுகாயமடைந்த நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் பாதிக்கப்பட்டவளைச் சந்தித்த பின் !
வினா:- தொடர்ந்து அரசு பேருந்துகள் விபத்து ஏற்படுவதற்குக் காரணம் திமுக அரசின் அலட்சியம் தான் காரணம் என்று எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பர் குற்றம்சாட்டுறார்களேஃ?பதில்:- உரிய அனுபவமுள்ள, தகுதியான ஓட்டுநர்கள் தான். அரசு பேருந்துகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். எதிர்க்கட்சிகள் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றம் சாட்டுகிறார்கள்.
பேரூந்துகளை சரியாக பராமரிப்பு செய்யாமல் ஊழல் காரணமாக லாப நோக்கம் மற்றும் பேக்குவரத்துத் துறை தனியார் வாகனங்கள் மீது காட்டும் அக்கறை அரசு பேரூந்துகள மீது காடடுவதில்லை மேலும் தரமற்ற உதிரி பாகங்கள் உடன் பேருந்து முழுவதும் விளம்பரம் கூட லாப நோக்கில் நெய் விளம்பர வண்டி போல விரைவு வண்டி...
கமிஷன் கரப்ஷன் இது குறையாத வரை இது தடுக்க முடியாது.





































கருத்துகள்