தமிழ்நாட்டில்150 வட்டாரப் போக்குவரத்து அலுவலக யூனிட் அலுவலகங்கள் இயங்குகின்றன. இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்கள் தினமும், 8,000 வரை புதிதாக பதிவு செய்யப்படுகின்றன
இவற்றில், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டுமே, 3,000 முதல் 4,000 வரை பதிவு செய்யப்படடுகின்றன.
புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அந்த வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இதுவரை இருக்கிறது.
அதனால், அந்த வாகனத்தின் உரிமையாளரோ அல்லது விற்பனைப் பிரதிநிதியோ, ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயமுள்ளது.
தற்போது, மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின்படி, 'சொந்தப் பயன்பாட்டு வாகனங்கள் பதிவின்போது, அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரத் தேவையில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படாமலேயே இருந்தது.
இது தொடர்பாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், 'மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின் படி, சொந்த பயன்பாட்டுக்கான புதிய வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வருவதில் விலக்கு அளிக்க வேண்டும்' என, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனால், சொந்த பயன்பாட்டிற்கான புதிய வாகனங்களை பதிவு செய்ய, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரத் தேவையில்லை.
இந்த புதிய உத்தரவு டிசம்பர் மாதம் முதல் தேதி அமல்படுத்த வேண்டுமென, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையர் கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, போக்குவரத்துத் துறை ஆணையரக அலுவலர்கள் தரப்பில் கூறியதாவது,, "சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்களை பதிவு செய்யும்போது, சம்பந்தப்பட்ட டீலர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அவற்றை எடுத்து வருவர். இதற்காக, வாடிக்கையாளர்களிடம் தனியக கட்டணம் (லஞ்சம் சேர்த்து) வசூலிப்பார்கள்.
சொந்தப் பயன்பாட்டு வாகனங்களில், 70 சதவீதம் இருசக்கர வாகனங்களாகவே இருக்கும். புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி, மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட சொந்த பயன்பாட்டு வாகனங்களை இனிமேல் கொண்டு வரத தேவையில்லை.
இருப்பினும், வணிக பயன்பாட்டிற்கான வாகனப் பதிவின்போது, கட்டாயம் அந்த வாகனங்களை ஓட்டி வர வேண்டும். எனக் கூறினர்
“சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்களை விட அதிகமாகக் லஞ்சம் வாஙகிக் கொள்ளையடிப்பது வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) தான்” என 2015 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதன் பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை போக்குவரத்துத் துறையில் கொண்டு வந்து புதிய சட்டங்களை இயற்ற உறுதுணையாக இருந்தார். குறிப்பாக புதிய வாகனங்கள் பதிவு செய்ய RTO அலுவலகங்களுக்கு வாகனங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சட்டத்தை நீக்கி, வாகனங்கள் விற்கப்படும் நேரத்திலேயே அதற்கான பதிவு எண் அளிக்கப்பட்டு விடும் எனவும், இனி வாகன உரிமையாளரோ, வாகன முகவர்களோ புதிய வாகனங்களை எடுத்து செல்ல வேண்டியதில்லை என்ற நல்ல அறிவிப்பை வெளியிட்டு RTO அலுவலகங்களின் அட்சய பாத்திரமாக விளங்கிக்கொண்டிருந்த அந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லஞ்சம், ஊழல் நடைபெற்று வந்ததையடுத்தே இம்முடிவை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆனாலும், போக்குவரத்துச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டிய மாநில அரசுகள் சில அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், நாளை முதல் தமிழ்நட்டில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இனி தனியார்களின் புதிய வாகனங்களை பதிவு செய்ய போக்குவரத்துத்துறை அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இடைத் தரகர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்களின் பெரும் ஊழல் கட்டுப்படுத்தப்படும். புதிய வாகனங்கள் வாங்கப்படும் போதே அதற்கான உரிய கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டு, பதிவு எண் தானியங்கி முறையில் வழங்கப்படும். இது குறித்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த போதும். ஆனால், இதை கடுமையாக எதிர்த்தது கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன் தொழிற் சங்கங்களும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய லஞ்ச, ஊழல் தடுப்பு நடவடிகையை சாத்தியமாக்கிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் நீதிமன்றமும் தான் இந்த நடவடிக்கை வரக் காரணம் பத்து ஆண்டுகள் நம் காத்திருப்பு நாளையுடன் நிறைவடைகிறது.




கருத்துகள்