இரவில் மகளிரணி நிர்வாகி வீட்டிற்குச் சென்ற நாமக்கல் த.வெ.க., மாவட்டச் செயலாளரின் பொறுப்பு பறிப்பு
த.வெ.க., நாமக்கல் (கிழக்கு) மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் , நள்ளிரவில் கட்சியின் மகளிரணி நிர்வாகியின் வீட்டிற்குச் சென்ற காணொளிக் காட்சி பரவியதன் காரணமாக அவரது மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரம், கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிரா பானு. த.வெ.க.,நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராவார். த.வெ.க., நாமக்கல் (கிழக்கு) மாவட்டச் செயலாளராக இராசிபுரம் செந்தில்நாதன் உள்ளார்.
டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி நள்ளிரவு, மகளிரணி அமைப்பாளர் முனிரா பானு வீட்டிற்கு செந்தில்நாதன் வந்துள்ளார்.
அவரது காரைப் பார்த்த முனிராவின் உறவினர்கள், அதிரடியாக அவரது வீட்டிற்குள் சென்று, 'நள்ளிரவில் எதற்காக இங்கு வருகிறீர்கள்' எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
அன்று இரவு முதல், மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை, பல்வேறு கட்சி நிர்வாகிகள் வந்து சமரசம் பேசிய பின்னர், செந்தில்நாதனை அவர்கள் விடுவித்துள்ளனர்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர் அது வைரலாகியது. இந்தப் பரபரப்பான சூழலில், த.வெ.க., தலைமையிலிருந்து செந்தில்நாதனை நேற்று காலை சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, த.வெ.க., மகளிரணி நிர்வாகி வீட்டில் அத்துமீறி நுழைந்த, த.வெ.க., நாமக்கல் (கிழக்கு) மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனின் பொறுப்பு பறிக்கப்பட்டதாக, அக்கட்சி சார்பில் நேற்று மாலை அறிக்கை வெளியானது. ஏற்கனவே, திருச்செங்கோடு வேட்பாளராக த.வெ.க., மாநிலக் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும் முன்னால் வருமாணவரித்துறை அலுவலருமான அருண்ராஜ் அறிவிக்கப்பட்டதாக வதந்தி பரவிய நிலையில், தற்போது, அவருக்கு நாமக்கல் (கிழக்கு) மாவட்டச் செயலாளர் பதவியும் கூடுதலாக வழங்கப்படும் என, அக்கட்சியினர் கூறி வருகின்றனர், இந்த நிலையில்
த.வெ.க., மகளிரணி நிர்வாகி முனிரா பானு, 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளதில், அவர்: "தி.மு.க., அரசு என் பெயரைக் கெடுக்க, தவறான வீடியோவை சித்தரித்து வெளியிட்டுள்ளது. ஒரு பெண் குறித்து பேசும் முன், என்ன நடந்தது என்பதைத் தெரிந்து பேச வேண்டும். இங்கு ஒரு தவறு நடக்க இருந்ததை, என் குடும்பத்தினரிடம் நான் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள், தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், வீடியோ எடுத்து, தவறாகச் சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இதை, த.வெ.க., தலைமையிடம் தெரிவித்துள்ளேன்.
இதை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திப்போம். நடந்த சம்பவத்துக்கும், தவெக கட்சிக்கும் தலைவர் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தி.மு.க.,வினர் இது போன்ற இழிவான அரசியல் செய்ய வேண்டாம்." என அவர் அதில் கூறியுள்ளார்.














கருத்துகள்