ஹெய்சாலர்களின் பேரரசன் மூன்றாம் வீர வல்லாளனையும் காடவராயர்களையும் இணைக்கும் வரலாற்றுத் தழுவல் இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் இயக்கத்தில்
நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த திரௌபதி -2 திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று முன்தினம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த மகாமுனி அம்பலகாரர் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளை அமா்வில் தாக்கல் செய்த மனு:
பொது ஆண்டு 14 -ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை இரண்டாம் தலைநகராகக் கொண்டு மூன்றாம் வீர வல்லாளத் தேவன் ஆட்சி செய்தாா். அவர் சேந்தமங்கலம் காடவராயர்களுடன் சம்பந்தம் செய்த உறவு வாழ்க்கை வரலாறு சிவனே மகனாக வந்த அருணாசல புராணம் ஏழாவது சருக்கம் அடிப்படையில் திரௌபதி - 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக படக் குழு அறிவித்தது. கர்நாடக ஹெய்சால மன்னர் மூன்றாம் வீர வல்லாளத் தேவன் கள்ளா் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்கு பல கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் உள்ளதாகவும் . திரெளபதி -2 திரைப்படத்தில் வீர வல்லாளத் தேவனை வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவராக இயக்குநா் மோகன் கார்த்திகேயன் சித்தரித்துள்ளாா் எனவும்,
திரைப்படத்தின் சுவரொட்டிகளில் வீர வல்லாளத் தேவன் என்பதை வீர வல்லாளன் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனா். இது உள்நோக்கம் கொண்டது. இது கள்ளா் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். இதைக் கண்டித்து, மதுரை மாவட்டம் மேலூர் பகுதி அ. வல்லாளபட்டி மற்றும் அழகர் கோவில் பகுதியில் பல போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், திரௌபதி - 2 திரைப்படத்துக்கு அவசரமாக U/A சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியது. அந்தச் சான்றிதழைத் திரும்பப் பெறுமாறு தணிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திரௌபதி - 2 திரைப்படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்ய வேண்டும். திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்றுப் பிழைகளைத் திருத்தம் செய்யும் வரை இந்தத் திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு உயா்நீரிமன்ற நீதியரசர் ஆா். விஜயகுமாா் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், திரௌபதி -2 திரைப்படத்துக்கு 2025 டிசம்பர் 31 ஆம் தேதியில் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது என்றாா்.
இதையடுத்து பிறப்பித்த உத்தரவில்:-
திரௌபதி - 2 திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது. தனியாக கதை நூல் எழுத்தாளர் மீது பொதுநல வழக்குத் தொடுக்க உரிமை வழங்கப்படுகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.படம் இன்று வெளியாகும் நிலையில் நேற்று சிறப்புக் காட்சி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது இயக்குனர் மோகன் ஜி
பேசியதில் "என்னை விட இயக்குநர் ரஞ்சித்துக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதுன்னு சொல்லுறாங்க. ஆனா எனக்குக் கிடைக்கக்கூடிய பல வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கிறதில்லை" நான் கோவிலுக்குப் போனால் என்னை கைபுடிச்சு VIP வரிசையில் அழைச்சிட்டு போவாங்க.
தென் தமிழ்நாட்டுக்கு போனால், அங்கு இருக்கிற மக்கள் என்னை அவங்க வீட்டுல உக்கார வைச்சு ஒரு பிள்ளை மாதிரி சாப்பிட வைப்பாங்க. இதெல்லாம் ரஞ்சித்துக்கு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல"னு சொன்னதை பலரும் வேறு விதமாக விவாதம்
இந்த பேச்சு வெளியான உடன், சமூக ஊடகங்களில் இரண்டாகப் பிரிந்த விவாதம் ஆரம்பிச்சுட்டது. "மோகன் ஜி தன் அனுபவத்தை தான் சொல்கிறார், அதில தவறில்லைன்னு ஒரு தரப்பு ஆதரவு தெரிவிக்க, "இது தேவையில்லாத ஒப்பீடு, மற்ற இயக்குநர்களை குறைத்துப் பேசுகிற மாதிரி இருக்குனு இன்னொரு தரப்பு விமர்சிக்க ஆரம்பிச்சது.
மோகன் ஜி இதுவரை இயக்கிய 'பழையனூர் மாவீரன்', 'திரெளபதி', 'ருத்ர தாண்டவம்' போன்ற திரைப்படங்கள் சமூகக் கருத்துகளை மையமாகக் கொண்டு உருவானவை. குறிப்பாக 'திரெளபதி' படம் பெரிய அளவில் வசூலையும், அரசியல் சமூக ரீதியான சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்தப் படத்திற்காக அவருக்கு சில சமூக அமைப்புகளிடம் பாராட்டுகளும், மேடைகளில் கௌரவங்களும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், இரண்டு இயக்குநர்களின் பயணத்தையும் ஒப்பிட்டு மோகன் ஜி பேசிய விதம் தான் இப்போது இது வெறும் தனிப்பட்ட அனுபவப் பகிர்வா, இல்லை மறைமுகத் தாக்குதலா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
மொத்தமாகச் சொல்லப்போனால், 'திரெளபதி 2' படம் ரிலீஸ்க்கு முன்னாடியே, மோகன் ஜியின் பேச்சு சினிமாவைத் தாண்டி அரசியல்-சமூக விவாதமா மாறியிருக்கிறது. படம் வெளியான பிறகு இந்த சர்ச்சை எந்த திசையில் போகப்போகுது என்பதையும், அதற்கு மோகன் ஜி மீண்டும் விளக்கம் தருவாரா என்பதையும் ரசிகர்களை படம் பார்க்க வைக்க நடத்தும் விளம்பர யுத்தி ன்பதை மக்கள் ஆர்வமாகவே கவனிச்சுக்கிட்டிருக்காங்க.










கருத்துகள்