2026 குடியரசு தின அணிவகுப்பில், ஸ்வமித்வா அலங்கார ஊர்தி அடித்தள நிலையிலான மக்களுக்கு அதிகாரமளித்தலை எடுத்துக்காட்டுகிறது; மைகவ் வாக்கெடுப்பு மூலம் தங்களுக்குப் பிடித்தமான அலங்கார ஊர்தியை மக்கள் தேர்ந்தெடுக்கலாம்
புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற 77-வது குடியரசு தின அணிவகுப்பில், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 450 பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இது அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. கடமைப் பாதையில் அணிவகுத்த 30 அலங்கார ஊர்திகளில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் "ஸ்வமித்வா திட்டம்: தற்சார்பு பஞ்சாயத்து மூலம் வளமான, தற்சார்பு இந்தியா" என்ற கருப்பொருளின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது. கிராமப்புற குடியிருப்புச் சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமை, குடிமக்களுக்கு எவ்வாறு அதிகாரமளிக்கிறது, பஞ்சாயத்துக்களை வலுப்படுத்துகிறது என்பதை இது எடுத்துரைத்தது. இன்றுவரை, 1.84 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் ஏறத்தாழ மூன்று கோடி சொத்து அட்டைகளை வழங்க ஸ்வமித்வா திட்டம் உதவியுள்ளது. இது நிலத் தகராறுகளைக் குறைத்து, திட்டமிட்ட கிராமப்புற வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
தகவலறிந்த மக்கள் பங்கேற்புக்கான ஒரு முயற்சியாக, குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளுக்கான மைகவ் பொது வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் “ஸ்வமித்வா” திட்டத்தின் மீதான அணிவகுப்பு ஊர்திக்கு ஆதரவளிக்க, ஜனவரி 26, 2026 அன்று இரவு 11:45 மணி (இந்திய நேரம்) வரை மைகவ் தளத்தில் வாக்களிக்கலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து “MYGOVPOLL 365936,6” என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் வாக்களிக்கலாம்.குடியரசு தின விழாவில் கௌரவிக்கப்பட்ட ஆழ்கடல் இயக்க விஞ்ஞானிகளை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்
இந்தியாவின் முன்னோடித் திட்டமான ஆழ்கடல் இயக்கத்தில் தொடர்புடைய, அர்ப்பணிப்புமிக்க விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் சிறப்புப் பாராட்டு விழாவைப் புவி அறிவியல் துறைக்கான மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பிருத்வி பவனில் நடத்தினார். நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறமைக்கு இவர்கள் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக பிரமாண்டமான 2026 குடியரசு தின அணிவகுப்பைக் காண சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசால் அழைக்கப்பட்டனர்.
ஆழ்கடல் இயக்கத்தின் சாதனையைக் கொண்டாடும் வகையில், புவி அறிவியல் அமைச்சகம் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அழைத்து, அமைச்சகத்தில் மதிய விருந்து அளித்தது. கூடியிருந்தோரிடையே கலந்துரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஆழ்கடல் ஆய்வில் இந்தியாவை முன்னணியில் நிலைநிறுத்திய விஞ்ஞானிகளின் அறிவு மற்றும் புத்தாக்கத்தில் இடைவிடாத முயற்சியைப் பாராட்டினார். ஆழ்கடல் இயக்கத்தின் சாதனை குறித்து, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் விடுத்த செய்தியில், அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்த கௌரவத்திற்கு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்ததுடன், இந்தப் பணியின் நோக்கங்களை அடைய தங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிசெய்தனர். இந்த நிகழ்வில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா மற்றும் பிற பிரமுகர்கள், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, அணுசக்தி மற்றும் புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.தேசிய போர் நினைவிடத்தில், வீரத் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரை ஈந்த வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“தேசிய போர் நினைவிடத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.”.
















கருத்துகள்