சிறப்புச் செய்திகள்:- ரங்கநாதன் திருப்பதி:- மதகுபட்டியில் ஒரு சித்தர் பீடம் ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் 9 ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா சிறப்பாக நடந்தது.
ஜனவரி மாதம் 17, 2025 ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் 8-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா
விஷுவவசு வருடம் தை மாதம் 3-ஆம் தேதி சனிக்கிழமை 17 ஜனவரி 2025 மஹா குருவின் பூராடம் நட்சத்திரத்தில், சித்த யோகம் கூடிய சுபதினத்தில் ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின்
9-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா சிவகங்கை மாவட்டம்
மதகுபட்டியில் பாகனேரி சாலையில் அமைந்துள்ள சித்தர் பீடத்தில்
நடைபெற்றது மேற்கண்ட நிகழ்வில் மஹாகுருவின் சீடர்கள். சிவனடியார்கள், ஆன்மீக மெய்யன்பர்கள்,
பக்த கோடிப் பெருமக்கள் திரளாக வருகை தந்து குருவருளும், திருவருளும் பெற்றுச்சென்ற நிகழ்வில், ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் அருளாசி பெற்றுச் சென்றனர் பீடத்தின் நிர்வாக அறங்காவலர் இராமலிங்கம்
ஆலயத்தில் குருபூஜை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினார்
ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரிகிரி சுவாமிகள் ஆசியுடன்.
காலை 6.00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்கி,
சிங்கப்பூர், மலேசியா புகழ்பெற்ற நாதஸ்வர குழுவினரின் நாதஸ்வர கச்சேரி
தை மாதம் 3 ஆம் தேதி 17 ஜனவரி 2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி,இரவு 7.00 மணி, இரவு 8.00 மணிக்கு விளக்கு பூஜையும். பின்னர் இரவு உணவும்.
சுவாமிகளின் அற்புதங்களைப் பகிர்ந்து கொள்ளும் பக்தர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றது
தை மாதம் 4 ஆம் தேதி 18 ஜனவரி 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு
யாக வேள்வி பூஜைகள் ஆரம்பமாகி தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்றது.
காலை 8.40 மணி பக்தர்களுக்கு
காலை உணவும் பூர்ணாகுதியும் தொடர்ந்து சுவாமிக்கு தீபதூப ஆராதனைகள் நடைபெற்றது,
காலை 10.00 மணிக்கு தேவாரம், திருவாசகம். முற்றோதலுடன்
காலை 10.30 மணிக்கு பாராயணமும்.
காலை 10.50 மணிக்கு அன்னக்கொடி ஏற்றுதலும், நண்பகல் 11.00 மணிக்கு சன்யாசிகள், துறவிகள் கலந்து கொண்ட சிவனது அருளாசியால் மகேஸ்வர பூஜையும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, பீடத்தில் சர்வசாதகம் மயில்ராயன் கோட்டை நாட்டுக் குருக்கள் வடவன்பட்டி G.சிவசுப்ரமணியக் குருக்கள் நடத்தி வைக்க பக்தர்கள் மற்றும் மெய்யன்பர்கள் வந்து கலந்து கொண்டு வழிபட்டு ஆசி பெற்றுச் சென்றனர் விழா ஏற்பாடுகளை கவணிக்கும் நிர்வாக தலைமை அறங்காவலர் திருப்புத்தூர் இராமலிங்கம் சேர்வை தெரிவித்தார்.













கருத்துகள்