இந்தியாவின் உயரிய 5 'பத்ம விருதுகள் தமிழ்நாட்டுக்கு
2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று அறிவித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு: தமிழ்நாட்டில் பத்ம பூஷன் விருது பெற்றவர்கள்:
கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி -மருத்துவம் (கே.பி.ஆர்)
எஸ் கே எம் மயிலானந்தன் -சமூகப்பணி
தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்:
காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன் (இரட்டை) -கலை
டாக்டர் எச்.வி.ஹண்டே - மருத்துவம்
கே ராமசாமி - அறிவியல் மற்றும் பொறியியல்
கே விஜய் குமார் - சிவில் சர்வீஸ் ரிட்டெட் ஐபிஎஸ் அதிகாரி
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் - கலை
டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன் - மருத்துவம்
ஆர் கிருஷ்ணன் (மரணத்திற்குப் பின்) - கலை
ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் - கலை ஆகியவை மேலும் இந்த ஆண்டில்
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க மத்திய அரசின் அறிவிப்பு விரைவில் வரலாம்.











கருத்துகள்