விசாரணை நீதிமன்றத்தில் இ பைலிங் சுற்றறிக்கை உடனடி அமல்! வழக்கறிஞர்களின் போராட்டம் தற்காலிக தீர்வா? இல்லை நிரந்தரமா
தமிழ்நாட்டில் அனைத்து விசாரணை நீதிமன்றங்களிலும் ஆன்லைன் இ-பைலிங் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை நீதிமன்றங்களில் ஆன்லைன் இ-பைலிங் எனும் மின்னணு முறையில் மனு தாக்கல் செய்யும் நடைமுறையை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் அறிவிப்பாணையை வெளியிட்டதை எதிர்த்து வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சங்கங்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆன்லைன் இ-பைலிங் முறை கட்டாயத்தை எதிர்த்து அறிவிப்பாணையை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் வழக்கறிஞர்களின் பல சங்கங்களின் சார்பில் அதன் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமாரும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு.
அது தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது. மனுதாரர் மற்றும் சங்கங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞரும் பார் கௌன்சில் நபருமான எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் வாதிடும்போது, ஆன்லைன் இ-பைலிங் நடைமுறையால் வழக்கமாக மனு தாக்கல் செய்யப்படும் நடைமுறைக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது. இ-பைலிங் நடைமுறையோடு நேரடியாக மனு தாக்கல் செய்யும் முறையும் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த பிரச்சினை குறித்து தைப் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு உரிய முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்து வழக்கு விசாரணை தள்ளிவைத்த நிலையில் ஆன்லைன் இ-பைலிங் முறையை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி நிறுத்தி வைத்து அறிவிப்பு ஆணை வெளியிட்டார்.தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை ஆன்லைன் இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைக்கு எதிராக JAAC அமைப்பினர் 07.01.2026 அன்று சென்னை உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தார்ர்கள். இப்போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ன என்பது குறித்து இதுவரை விவாதம் எதுவும் வந்ததாகத் தரவுகள் இல்லை, வழக்கு விசாரணை முடிவில் தான் தெரியும். இந்த நிலையில் தற்போது வழக்குரைஞர்கள் நடத்திய போராட்டம் தோல்வியா வெற்றி யா? என அறிய முற்படவே R.O.C. No.42577A/2024/Comp.3 தேதி : 08.01.2026 வந்துள்ளது.
மூலம் : பதிவாளர் (IT-cum-Statistics), மெட்ராஸ் உயர்நீதிமன்றம், சென்னை – 104.
பெறுநர் : தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் / மாவட்ட நீதிபதிகள், மற்றும் சென்னை நகர சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி, மற்றும்பு துச்சேரி யூனியன் பிரதேச தலைமை நீதிபதி.
பொருள் : e-Courts திட்டம் – மாவட்ட நீதித்துறையில் அனைத்து வகை வழக்குகளுக்கும் e-Filing கட்டாயம் – திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது,
மாவட்ட நீதித்துறையில் உள்ள அனைத்து வகை வழக்குகளுக்கும் e-Filing கட்டாயம் என மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 06.01.2026 அன்று அறிவிப்பு எண் 7/2026 மூலம் திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட அறிவிப்பு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
10.12.2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 327/2025 ன் வழிகாட்டுதல்கள் மேலும் உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, இதற்கு முந்தைய அறிவிப்புகளில் உள்ள வழிகாட்டுதல்கள் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
எனவே, கீழ்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்:
1.திருத்தப்பட்ட அறிவிப்பை அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் இணையதளங்களில் வெளியிடுதல்
2.e-Filing முறையை வழக்கறிஞர்களிடையே விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,அந்தந்த வழக்கறிஞர் சங்கங்களின் மூலம்..
3.e-Filing நடைமுறையில் உள்ள வழக்குகளுக்கு Physical Filing (காகித தாக்கல்) கட்டாயம் என வற்புறுத்தக் கூடாது..
4.e-Filing மூலம் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை தாமதமின்றி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அனைத்து நீதித்துறை அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்குதல். இச்சுற்றறிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது.நீதித்துறையின் டிஜிட்டல் அமைப்புகளின் நிலை குறித்த பொதுவான விபரங்கள் குறித்துப் பார்த்தால் அதில்
உலகளவில் உள்ள பல டிஜிட்டல் தளங்களைப் போலவே, நீதிமன்றங்களின் அமைப்புகளும் எப்போதாவது தொழில்நுட்ப இடையூறுகளுக்கு ஆளாகின்றன என்பதை நீதித்துறை பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது. eFiling அமைப்பும் அதனுடன் தொடர்புடைய சேவைகளும் சிக்கலான டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்குள் செயல்படுகின்றன, மேலும் அவ்வப்போது குறுக்கீடுகளைச் சந்திக்கலாம். நீதித்துறையில் அவ்வப்போது சவால்கள் இருந்தபோதிலும் அமைப்புகளின் நேரத்தை உறுதி செய்ய முயற்சிக்கிறது, அவற்றில் பெரும்பாலானவை உடனடியாகத் தீர்க்கப்பட்டுள்ளன.
eFiling அமைப்பு மற்றும் காரணப் பட்டியல் போர்டல் உள்ளிட்ட நீதித்துறையின் பொது மக்கள் எதிர்கொள்ளும் தளங்கள், நெட்வொர்க் சேவைகளை தற்காலிகமாக சீர்குலைத்த சில வெளிப்புறக் குறுக்கீடுகளின் காரணமாக இடைவிடாத அணுகல் சிக்கல்களை சந்திக்க சர்வர்கள் குறைபாடு இல்லாத நிலை வரவேண்டும். தொழில்நுட்பக் குழு விரைவாகப் பதிலளித்து, சேவையை சரியாகத் தொடங்கும் செயல்முறையைத் துவங்க வேண்டும், அது இன்னும் நடந்து கொண்டிருப்பதாகவே வழக்குறைஞர்கள் பெரும்பாலும் கூறும் நிலையில் . உலக அளவில் ஆன்லைன் இ பைலிங் சீரமைப்பு அடையப்பட்டாலும், கூடுதல் தொழில்நுட்ப சவால்கள் ஏற்படுவது தடுக்க வேண்டும்.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், நீதித்துறையால் வழங்கப்படும் மாற்று வழிகள் மூலம் நீதித்துறை சேவைகளை அணுக முடியும். குறிப்பாக, 282 விண்ணப்பங்கள் அவசரச் சான்றிதழ்கள் மற்றும் காலக்கெடுவுக்கான சான்றிதழின் கீழ் அதிகாரப்பூர்வ நீதிமன்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலம் சம்மன் மற்றும் பிடி வாரண்டுகள், பெறப்பட்டு தற்போது செயலாக்கத்தில் வரவேண்டும், அதுவே நீதிகேட்கும் மக்கள் விருபபம் மேலும், இதே காலகட்டத்தில் பல கிரிமினல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு செயலாக்கப்பட்டுள்ளன.
eFiling சேவைகள் படிப்படியாக மீட்டமைக்கப்படுவதால், தாக்கல் செய்யும் செயல்முறையில் பயனர்களுக்கு வழிகாட்டுவதற்காக நீதிமன்றம் மூலம் பொது அறிவிப்பு முன்பே வெளியிடப்பட்டது. அனைத்து பயனர்களும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சமீபத்திய அறிவிப்பின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு சவாலாக இருந்தாலோ சரி செய்து மக்கள் பாதிப்பு இன்றி உடனடி நீதி பரிபாலனங்கள் கிடைக்க மற்றும்
நீதித்துறை தடையின்றி நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளதை மற்றும் அனைத்து நீதிமன்ப்ற பயனர்களின் பொறுமை, ஒத்துழைப்பு மற்றும் புரிதலுக்கு உட்பட வேண்டும்.
நீதித்துறையின் உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் கடிதம் விரைவில் சேவை துவங்கும் என்பதே.










கருத்துகள்