மாடுபிடிப்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என முதல்வர் அறிவிப்பு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
மாடுபிடிப்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என முதல்வர் அறிவிப்பு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு மாடுபிடிப்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். அவரது அறிக்கையில்;
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆஹா தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் அவர்களுக்கு கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடிப்பவர்களான வீரமானவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஏற்கனவே, ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ரூபாய். 60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை. இப்படித் தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என முதல்வர் எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.'
முதல்வருக்கு பிடித்த 'பேரு பெத்த பேரு, தாக நீலு லேது' என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும். என அண்ணாமலை அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதில் பொது நீதி யாதெனில் : படித்து அறிவார்ந்தவர்கள் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் நிலையில், எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என்ற நிலை தற்போதுள்ளது, மேலும் பணியில் இருக்கும் போது பலர் மரணமடைந்து அந்த வாரிசுகள் கருணை அடிப்படையில் வழங்க வேண்டிய வேலை இதுவரை பலருக்கு வழங்காமல் நீதிமன்றம் மூலம் உத்தரவிடடும் அதை இழுத்தடிப்பு நடத்தி காலம் கடத்தும் மாநில அரசு படிப்பறிவு இல்லாத வெட்டிக் கூடடமான உழைக்காத பல மாடுபிடிகாரர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மக்கள் மத்தியில் கேலிக்கூத்தெனப் பேசப்படுகிறது.



கருத்துகள்