விசிகவை உலுக்கும் உலங்கு வானூர்தி மாமூல் ஊழல் குற்றச்சாட்டு,
கோவளம் பகுதியில் செயல்படும் ஏரோ டான் சுற்றுலா உலங்கு வானூர்தி நிறுவனத்திடம் மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த திருப்போரூர் விசிகட்சி ச ம உ வைத் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி சபாநாயகர் பி. எஸ் அப்பாவுவிடம் அதன் தலைமை நிர்வாக அலுவலர் நிசா புகார். கோவளம் உலங்கு வானூர்தி சேவையை மீண்டும் தொடங்குவதா?
சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் சேவையை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படுமென பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளி வந்த நிலையில் மற்றொரு பக்கம்
எங்களிடம் லஞ்சம் கேட்டு வி சி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் பாலாஜி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறாரென கோவளம் பகுதியில் செயல்படும் உலங்கு வானூர்தி நிறுவனம் சார்பில், சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் வட்டம் கோவளம் கிழக்குக் கடற்கரைச் சாலைச் சந்திப்பு சாலையருகே, ஏரோடான் எனும் தனியார் நிறுவனம் சார்பில், சுற்றுலா உலங்கு வானூர்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி உலங்கு வானூர்தி சுற்றுலா சேவை துவக்கப்பட்ட போது சில சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அது நிறுத்தப்பட்டது.
அதையடுத்து 'ரோடான் சாப்பர் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து மீண்டும் ஜனவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா. மோ.அன்பரசன் துவக்கி வைத்தார், உலங்கு வானூர்தியில் இந்த 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும். 5 நிமிடப் பயணத்திற்கு ஒரு நபருக்கு, 6,000 ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது,
ஒரு நாளைக்கு 50 சவாரிகள் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவளத்திலிருந்து உலங்கு வானூர்தியில் பயணியரை ஏற்றிச் சென்று கோவளம், திருவிடந்தை, கேளம்பாக்கம், முட்டுக்காடு கடற்கரைப் பகுதி என, 20 கிலோமீட்டர் தூரம் வரை வானில் சுற்றிக் காட்டப்படுகிறது. இந்த உலங்கு வானூர்தி 1,000 மீட்டர் உயரம் வரைக்கும் பறக்கிறது. அதேபோல், உலங்கு வானூர்தி மையத்தில் திறந்த வெளித் திருமண அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் மணமக்கள் வந்திறங்கி, விழா மேடைக்குச் சென்று திருமணம் செய்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்ட நிலையில், ஏரோடாம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் நிஷா தமிழ்நாடு சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுவிடம் புகார் மனு அளித்துள்ளார். எஸ். எஸ் பாலாஜி வி சி கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திருப்போரூர் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வி சி கட்சி சார்பில் வெற்றி பெற்ற முதல் வன்னியர். 2021 ஆம் ஆண்டு டாக்டர் சர்மிளாவைத் திருமணம் செய்தார் இவர் வன்னியர் தான் இவர் மீது பலவித வழக்குகள் இருக்கிறது. அதில் வி சி கட்சியினர் போட்ட சில வழக்கும் உண்டு,அதில் தப்பிக்க விசிகவிலேயே சேர்ந்தது மட்டுமல்ல, இவருக்கு 2 மனைவிகள். இரண்டாம் மனைவி டாக்டர் சர்மிளாவின் 3 வது கணவர் தான் எஸ். எஸ்.பாலாஜி. சென்னை கோவளத்தில் தனியார் ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனத்தினரை மிரட்டி லஞ்சம் கேட்டதாகவும் , குண்டர்களை வைத்து தங்களை அலுவலகத்திற்க்குள் சிறை வைத்ததாகவும் வி சி கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மீது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தமிழ்நாடு சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுவிடம் புகார் அளித்ததாக செய்தியைக் குறித்து கேட்டதற்கு, அந்த உலங்கு வானூர்தி இயக்கும் பைலட்டுக்கு லைசென்ஸ் உள்ளதா, அந்த உலங்கு வானூர்தி எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது? அதற்கு காப்பீடு உள்ளதா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாததால் தான் இந்த நிலை என சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.பாலாஜி கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் அனுமதியோடு செயல்படும் நிறுவனத்தை கேள்வி கேட்டு மிரட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. மேலும், மிரட்டி லஞ்சம் கேட்பதும், துன்புறுத்துவதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி பெருங் குற்றம். இது குறித்து சபாநாயகரிடம் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது? காவல்துறையினரிடம் எந்தவித புகார் மனுவை அளிக்கவில்லையா? அல்லது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கமளிப்பதோடு, துரித விசாரணை நடத்தி சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிய உத்தரவிட வேண்டும்.
சட்டம், ஒழுங்கை சட்டமன்ற உறுப்பினர்களே சீர்குலைக்கும் அளவிற்கு திராவிட மாடல் திமுக ஆட்சியில் தமிழகம் தடுமாறிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு."எனப் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தெரிவித்துள்ளார்.
"திரும்பத் திரும்ப எங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார் பாலாஜி. பைலட்டுக்கு உரிமம் இருக்கானு கேக்குறாரு. நீங்க சம்பாதிக்கிறீங்க எனக்கு என்ன லாபம்னு கேக்குறாரு”.. விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி மீது ஏரோடான் நிர்வாக இயக்குனர் செல்வகுமாரின் குற்றச்சாட்டு அரசியலா அல்லது ஊழல் எதிர்ப்பா என்பது விரைவில் தெரியும்



































கருத்துகள்