முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டுத் தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்யும் சக்தியாக விஜயின் தவெக

தேஜகூ எதிராக தவெக மாற்றாக மட்டுமே திமுக நாம் தமிழர் இதுவே இப்போதைய அரசியல் களம் மாமல்லபுரத்தில்  நடந்த, த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், ஆதவ் அர்ஜுனா பேசும்போது:





தேர்தல் ஆணையத்தில், விஜய் ரசிகர் இருந்து கையெழுத்துப் போட்டதால், நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. தி.மு.க., அமைச்சர்கள், மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், த.வெ.க.வின் 'ஸ்லீப்பர் செல்கள்' இருக்கின்றனர்.


வி சி கட்சித் தலைவர் திருமாவளவன், என்னைத் திட்டிக் கொண்டே இருக்கிறார். அவரது கட்சி மொத்தமாக த.வெ.க.,வுக்கு எப்போதோ மாறி விட்டது. தற்போது, அவருடன் 20 பேர் மட்டும் தான் அங்கு இருக்கின்றனர். திருமாவளவனை அடியாள் போலத்தான் தி.மு.க., பயன்படுத்துகிறது. கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பின், திராவிடம் என்பதற்கு முன், 'திருட்டு' என்பதை இணைத்து, 'திருட்டு தி.மு.க.,'வாகி விட்டனர். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்து விட்டனர்; அதை முறியடிக்கப் போவதாக முதல்வர் மு. க.ஸ்டாலின் கூறுகிறார். த.வெ.க., தலைவர் விஜயின் பெயரைச் சொல்வதற்கே, மு.க. ஸ்டாலின் பயப்படுகிறார்.



வி.சி.கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், தி.மு.க.வை 'ஊழல் செய்யாத கட்சி' எனச் சொல்வர்களா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்பவர் இரண்டு நிமிடம், ஈ.வெ.ராமசாமியைப் பற்றி பேசினால், துாக்கு மாட்டிக் கொள்கிறேன்.  வரும் தேர்தலில், 5,000 கோடி ரூபாயை இறக்கி, ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுப்பார்கள். எனத் தெரிவித்தார் இந்த நிலையில்        தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, விசிக தலைவர் திருமாவளவனை திமுகவினர் அடியாளாக பயன்படுத்துவதாகவும், அக்கட்சியினர் தவெகவில் இணைந்துவிட்டதால் தற்போது 20 பேர் மட்டுமே கட்சியில் இருப்பதாகவும் விமர்சித்தார்





ஆத்திரமடைந்த விசிகவினர் திருத்தணியில் ஆதவ் அர்ஜுனா உருவ பொம்மையை எரித்து  ஆர்ப்பாட்டம் செய்தனர் அதனால் பலன் என்ன? விசிக திருமா கூறிய பா.ம.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று 2011-ஆம் ஆண்டே விசிக சார்பாக முடிவெடுத்து விட்டோம்.

பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளோம். என





திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வி சி கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது.

மருத்துவர் ராமதாஸை கூட்டணியில் இணைப்பது பற்றி தி.மு.க. வின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும்.

கூட்டணியில் மருத்துவர் இராமதாஸ் இணைவது பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது." எனக் கூறினார். பண்ருட்டி இராமச்சந்திரனை வைத்து நடிகர் விஜய் மாஸ்டர் கணக்கு போடுகிறார்! 











தமிழ்நாடு அரசியலில் இப்போது நடந்து வரும் மாற்றங்கள், கட்சிகளுக்குள் மட்டுமல்லாமல், பல வருடங்களாக மக்கள் மனதில் உருவான அரசியல் அடையாளங்களையே மாற்றும் அளவுக்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களுக்கிடையே, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் மீண்டும் அரசியல் லைம்லைட்டுக்குள்ளாக வந்துள்ளார் காரணம்? முன்னால் முதல்வர்கள்

எம்ஜிஆர்,செல்வி ஜெ. ஜெயலலிதா, மருத்துவர் ச.ராமதாஸ், நடிகர் விஜயகாந்த் என கடந்த காலத்தில் மிகச் சிறந்த அரசியல் ஆசானாக இருந்தவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் . அன்றைய காலத்தில் அரசியலில், பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் டெல்லி செல்கிறார் என்றாலே, தமிழ்நாடு அரசியல் களமே கதிகலங்குமாம். அந்த அளவுக்கு சட்டநுணுக்கங்கள்  அணைத்தும் அரசியலில் அத்துப்படியாகத் தெரிந்தவர் மூவர் தான் ஒருவர் முன்னால் அமைச்சர் எஸ். மாதவன், க. ராஜாராம் மற்றொருவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன்.







செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஒரு கடுமையான அதிகாரப் போட்டியால் உடைந்து பல உள்பிரிவுகளாகி அடையாளக் குழப்பங்களைச் சந்தித்தது. அந்தக் காலகட்டத்தில், ஓ.பன்னீர் செல்லம் அரசியல் ரீதியாக நிலைநிறுத்தப்படுவதற்குப் பின்னணியில் செயல்பட்ட முக்கியமான ஆலோசகராக பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் இருந்தார் என்பதை இங்கு நாம் நினைவூட்ட வேண்டியதுள்ளது..

அதனால்தான், உங்களைப் போன்றோர் எங்களுடன் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்லம், வி. கே.சசிகலா நடராஜன் இருவருமே வேண்டிக் கேட்டு பண்ருட்டி எஸ். இராமச்சந்திரனைத் தங்கள் பக்கம் அழைத்துச் சென்றனர். அவரது அரசியல் அனுபவம், சட்ட அறிவு, மற்றும் தேர்தல் வியூகங்களை ஒருங்கிணைக்கும் திறன் போன்றவை அனைத்தும் ஓ. பன்னீர் செல்வத்துக்குத் துணையாக நின்றன. பரமசிவன் கழுத்தில் பாம்மாக இருந்தவர் தோல்விக்கு முக்கியக் காரணம் ஆரம்பத்தில் ஜெயலலிதாவுக்கு இவரை யாரென்று தெரியாது, பின் அவரது பனிவால் வந்த நெருக்கம், அவரை உறுவாக்கிய வி. கே.சசிகலா நடராஜனை விடடு விலகி ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சைக் கேடடதால் வந்த நிகழ்வு தான் இது,




அவரது அமைதியான செயல்பாடு, திரைமறைவு வியூகங்கள், மற்றும் நேரத்த்திற்கு காத்திருக்கும் அரசியல் பாணி கொண்டவர் என்ற பெயரைப் பெற்ற பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் இப்போது நேரடியாக அரசியல் மேடையில் புதிய நகர்வுகளை மேற்கொள்ளத் தயாராகியுள்ளார். இதற்குக் காரணம் ஓ.பன்னீர் செல்லம் தான் என்பதை அவரது ஆதரவாளர்களே மறுக்கவில்லை.

2024 ஆம் ஆன்டு நாடாளுமனற மக்களவைத் தேர்தலில் தேஜக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்லம் அணி இணைந்ததிலிருந்தே, தன்னுடைய அணியின் அடையாளத்தை அவர் இழந்துவிட்டதாக விமர்சனங்கள் கிளம்பின.  இறுதியில் ஒவ்வொருவராக ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து பிற கட்சிகளுக்கு தற்போது தாவிக் கொண்டிருக்கிறார்கள்.







துவக்கத்தில் எம்ஜிஆர் அதிமுக இந்த சூழலில், அரசியல் ஆலோசகராக மட்டுமே இருப்பது தன்னுடைய அனுபவத்துக்கும், அரசியல் பார்வைக்கும் பொருந்தாது என்ற உணர்வு பண்ருட்டி எஸ். இராமச்சந்திரனுக்கு உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. முடிவெடுக்கும் இடங்களில் தன்னுடைய கருத்துகள் முழுமையாகப் பிரதிபலிக்காத நிலை, எதிர்கால அரசியல் பயணம் குறித்து தெளிவில்லாத சூழல் பண்ருட்டியாரையும் இப்போது ஓ.பன்னீர் செல்வம் அணியிலிருந்து விலகத் தூண்டியிருப்பதாகவே தெரிகிறது..

பண்ருட்டி. எஸ். இராமச்சந்திரன் “எம்.ஜி.ஆர் – அ.தி.மு.க.” என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அது உண்மையா தெரியவில்லை. ஒருவேளை உண்மையாயின் சில அரசியல் கணக்குகளை இங்கே காணலாம்.

முதலில், எம்ஜிஆர் என்ற பெயரை மீண்டும் அரசியல் மேடையில் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் முன்வைப்பது, தற்போதைய அதிமுக தலைமையின் மீது மறைமுகமான விமர்சனமாகவும் பார்க்கப்படுகிறது.

எம்ஜிஆரின் பெயரும், பழைய அதிமுக மரபும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த புதிய கட்சியை பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் துவக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது..

ஆனால் அதேசமயம், நடிகர் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே மூத்த தலைவர் கே. ஏ.செங்கோட்டையன் தவெகவில் உள்ள நிலையில், பண்ருட்டியாரின் இந்த அணுகுமுறையானது, தவெகவுக்கு கூடுதல் பலத்தை தரும் என்று நம்பப்படுகிறது.

பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர், தவெகவுக்கு அரசியல் ரீதியான முதிர்ச்சியையும், தேர்தல் வியூகங்களையும் வழங்கக்கூடியவர் என்பதை மறுக்க முடியாது.

தன்னுடைய ஒவ்வொரு மேடையிலும் எம்ஜிஆர் பற்றின பேச்சை விடாமல் தானே நடிகர் விஜய் பேசுகிறார் என்றாலும், எம்.ஜி.ஆர் – அ.தி.மு.க என்ற பெயரில் கூட்டணி வைப்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் + அதிமுகவின் அதிருப்தி தொண்டர்களையும் இழுக்க முடியும். அதாவது பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பாத பாரம்பரிய ரத்தத்தின் ரத்தங்கள் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன்- நடிகர் விஜய் பக்கம் வர வாய்ப்புள்ளது... இது அதிமுகவுக்கு பெருத்த பாரம்பரிய வாக்குகளை சிதறடிக்கக்கூடும். பழைய அதிமுக தொண்டர்களும் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரனை நாடி வரலாம்.

அதுமட்டுமல்ல, பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் போன்ற மூத்த தலைவர்களுக்கு முக்கிய பதவி தருவதன் மூலம், வன்னியர்களை சமாளிக்கவும், வன்னியர்களின் ஆதரவை தவெகவால் எளிதாகவே பெற முடியும்..

அன்று பண்ருட்டியார் நடிகர் விஜயகாந்த்திடம் இருந்தவரை தேமுதிக என்ற கட்சி கம்பீரமாகவே காட்சி தந்தது. பண்ருட்டியாரை விட்டு விஜயகாந்த் விலக்கியதுமே, அந்தக் கட்சி கரைந்து காணாமல் போய்விட்டது என்பது தான் உண்மை, இன்று பிரேமலதாவிடம் உள்ள சாறு நீங்கிய கரும்புச் சக்கைகள் மட்டுமே இது தமிழறிந்த மக்கள் கண்ட உண்மை. தற்போது புதிய கட்சியைத் துவங்கி, விஜயுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில், பண்ருட்டியாரின் அறிவும், அனுபவமும் தவெகவுக்கு கண்டிப்பாக வழிகாட்டக்கூடும் என்றே மதிப்பிடப்படுகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியது ஒரு சாதாரண நிர்வாக நடைமுறை போலத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு மிகப்பெரிய அரசியல் சதுரங்க வேட்டை ஒளிந்திருப்பதாகத் தெரிகிறது. நாம் இந்த சின்னம் தான் கிடைக்கும் என்பதை கடந்த ஆண்டிலேயே கூறினோம் 

இந்தியத் தேர்தல் ஆணையம் தவெக-விற்கு 'விசில்' சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது. இந்தச் செய்தியை கட்சியின் சமூக வலைதளப் பக்கங்கள் கொண்டாடினாலும், கட்சியின் தலைவர் விஜய் மாமல்லபுரம் கூட்டம் தவிர பொதுவெளியில் தோன்றி அந்தச் சின்னத்தை அறிமுகப்படுத்தவில்லை என்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடி இருந்தது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 ன் விதிகளின் கீழ் தங்களுக்கு ஒரு தேர்தல் சின்னத்தை ஒதுக்கக் கோரி இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) மனு அளித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் முதல் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது வேட்பாளர்களுக்கான பொதுத் தேர்தல் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை  அணுகி இருந்தார். த வெ க இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், விசில், ஆட்டோ ரிக்‌ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலுடன், தேர்தல் சின்னங்கள் ஆணை, 1968-ன் கீழ், விண்ணப்பத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் சமர்ப்பித்தார். இந்தச் சின்னம் விவகாரத்தில் "டெல்லி" விஜய்க்கு எதிராக கேம் ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்க்கு இந்த சின்னம் கிடைத்துள்ளது. 

ஆரம்பத்தில், தவெக தரப்பில் ஒருவித தயக்கம் நிலவியது. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் 'கரும்பு விவசாயி' சின்னம் பறிபோனது போல, தங்களுக்கும் கடைசி நேரத்தில் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்று விஜய் தரப்பு அஞ்சியது. சின்னம் மோசமாக இருந்தால், அது 2026 தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் விஜய் ஒரு துணிச்சலான Plan B-ஐ கையில் எடுத்ததாகக் கூறப்படுகிறது.  தவெக  தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்தில் தவெக வேட்பாளர்களைக் களம் இறக்கலாம் என்ற ஒரு வியூகம் அக்கட்சியின் உயர்மட்ட ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது உங்கள் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று சொன்னால் காங்கிரஸ் வந்துவிடும் என்பதால் தவெக இப்படி ஒரு குதர்க்கமான திட்டத்தை கையில் எடுத்ததாம்.

இது காங்கிரசுக்கு பெரிய ஆதரவாக இருக்கும் என்பதால் தவெக அதற்காக காய் நகர்த்தியது.

இந்த விபரம் டெல்லியில் பாஜக மேலிடத்தை எட்டியபோது, அங்கு ஒருவித பதற்றம் நிலவியதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜயின் ரசிகர் பட்டாளமும் காங்கிரஸின் தேசிய அடையாளமும் இணைந்தால், அது தமிழகத்தில் பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தலாம்

என்பதால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய ரத்தம் பாய்ச்சும்










பாஜகவின் "காங்கிரஸ் இல்லாத பாரதம்" என்ற முயற்சிக்குத் தென் மாநிலங்களில் முட்டுக்கட்டை ஏற்படும். வாக்குகளை ஒருங்கிணைத்து, தற்போதைய அரசியல் சமன்பாடுகளைத் தலைகீழாக மாற்றும்.

சின்னம் கிடைத்த வேகம் இந்த 'காங்கிரஸ்-விஜய்' கூட்டணி அமைந்தால் அது தங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த டெல்லி மேலிடப் புள்ளிகள், சில நகர்வுகளை மேற்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதன் விளைவாகவோ என்னவோ, அடுத்த சில நாட்களிலேயே எந்தத் தடையுமின்றி தவெக-விற்கு 'விசில்' சின்னம் அதிகாரப்பூர்வமாகவே ஒதுக்கப்பட்டது.

விஜய் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம், காங்கிரஸ்-விஜய் மெகா கூட்டணி உருவாவது இப்போதைக்குத் தவிர்க்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு இது ஒரு சாதகம்.












சின்னம் கிடைத்துவிட்டாலும், 2026-ல் விஜயின் வருகை யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்பது தான் தற்போதைய விவாதம். விசில் சத்தம் தமிழ்நாடு அரசியல் களத்தில் யாருக்கு வெற்றியைத் தரும், யாருக்கு வேட்டு வைக்கும் என்பது இன்னும் சில மாதங்களில் தெரியும்.   தாவேக எதிர் தேஜகூ என்பது திமுகவை அதிர்ச்சி அடைய வைக்கும், அதன் வெளிப்பாடு தற்போது தெரிகிறது, இவையல்லாது ராஜரிஷி விஷ்வாமித்ரரின் திரிசங்கு நிலையில் திணறிக் கொண்டிருக்கிறார், தேமுதிக தலைவி பிரேமலதா!  

பேராசை அரசியலின் உச்சம் தொட்டதன் விளைவு இது ! மதில்மேல் பூனை போல 

அப்படியுமில்லாமல், இப்படியுமில்லாமல் இரண்டுங்கெட்டான் நிலைமை!

பாஜகவின்  ‘ஐடியாலாஜி’க்கு மைலாப்பூர் ஆடிட்டர் ஆலோசனைக்கு மிகவும் இணக்கமானவர் என்பதால் எப்படியும் தங்கள் பக்கம் அவர்கள் கட்சி வந்துவிடும் பாஜக என நினைத்தது.

நடிகரும் முன்னால் எதிர்கட்சித் தலைவரமான காலஞ்சென்ற விஜயகாந்த் முனனால் முதல்வர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் மீது பெரிய மரியாதை வைத்திருந்தவர் என்ற வகையில், ஒரு கட்டத்தில் அதிமுக தொண்டர்களும் தேமுதிகவோடு நெருங்கிவிட்டார்கள். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினர் தேமுதிகவின் வெற்றிக்காக மிகவும் தீவிரமாக ராஜேந்திர பாலாஜி செயல்பட்டதைக் கொண்டேனும் தங்கள் பக்கம் தேமுதிக பிரேமலதா வரலாம் என அதிமுக எதிர்பார்த்தது.

நடிகர் விஜயகாந்த் மகனுக்கும் அதிமுக கூட்டணியில் இணைவது தான் ஆசையாம். அந்த அளவுக்கு அவருக்கு விருதுநகர் தொகுதியில் வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் அளவுக்கு களத்தில் வேலை பார்த்த அதிமுக மீது இயல்பாகவே ஒரு விசுவாசம் ஏற்பட்டது.

அதே சமயம் அதிமுகவிடம் தேமுதிக பிரேமலதா வைத்த நெருக்கடி தான் அந்தக் கட்சியின் தலைவர்களை அதிர வைத்தது. 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு நடாளுமன்ற இராஜ்ய சபா சீட்டும் எதிர்பார்த்துள்ளார். அத்துடன் மிகப் பெரிய அளவில் – நிறைவேற்றவே முடியாத அளவுக்கு ‘தேர்தல் செலவு தொகையும் கேட்டதாகத் தகவல்.

அதிமுகவுக்கு தற்போதுள்ள வகையில் இரண்டு ராஜ்யசபா உறுப்பினர் மட்டுமே வாய்ப்புள்ளது. அதில் ஒன்றை பாமகவும், மற்றதை தமாகா (மூ) ஜி.கே.வாசனும் கேட்டு நிர்பந்திக்கும் நிலையில், மற்ற ஒன்றையேனும் அதிமுகவுக்கு வைத்துக் கொள்வதில் அவர்கள் உறுதிகாட்டுவதால் ராஜ்ய சபாவுக்கு இப்போது வாய்ப்பில்லை. 18 தொகுதிகளும் தருவதற்கு இயலாது என தெளிவுபடுத்திவிட்டனர்.

தகுதிக்கு மீறிய பேராசையாக இருப்பதால்  பாஜகவும், அதிமுகவும் தேமுதிகவை கை கைவிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்களாக வந்தால் பார்க்கலாம் என விட்டுவிட்டனர்.

எனவே, திமுக தரப்பில் ஒருமுறை பேசினர். அங்கு ஏற்கனவே கூட்டணிக் கட்சிகள் அதிகம். மேலும், 15 தொகுதிகள் கேட்டு அவர்கள் கொடுப்பதை ஒன்று அல்லது இரண்டு வாங்க முயலும் மக்கள் நீதி மையமும், பத்து தொகுதிகள் கேட்டு மூன்று தொகுதி தருவதை ஒப்புக்கொள்வதற்கு முன் மருத்துவர் ராமதாஸ் அணி விசி கட்சியுடன் சம்மதம் பெறுவதை வேறு எதிர்பார்க்கிறார்கள். பழைய கூட்டாளிகள் யாருக்கும் தொகுதியைக் குறைக்க முடியாது. திமுக தன் தொகுதிகளைக் குறைத்துத் தான் தேமுதிகவை கூடுதலாக சேர்க்க இயலும். ஆகவே ஆறேழு  தொகுதி தான் தர இயலும் என்றவுடன் தேமுதிக பிரேமலதாவுக்கு அதிர்ச்சி. காரணம் அவர்கள் சுயபலம் என்ன என்பதே தெரியாது . விஜயகாந்த் காலமானபோது அஞ்சலி செலுத்த வந்த கூட்டமெல்லாம் வாக்குகள் என நினைக்கிறார்,







அதே சமயம் தேர்தல் செலவுக்கு அதிமுக கூட்டணியை விடவும் திமுக கூட்டணி பணத்தை தாராளமாக அள்ளிக் கொடுப்பார்கள் என தேமுதிக எதிர்பார்ப்புகள் உள்ளதில் நிறைவேறலாம் என்றாலும், காங்கிரஸ் கட்சி வெளியேறினால் தான் அங்கு கூடுதல் சீட்டை நிர்பந்திக்கலாம். அது வரை அமைதியாக இருந்து கொண்டு அதிமுக மற்றும் பாஜக சார்ந்த என்டிஏ கூட்டணியை திசை திருப்பலாம் என்றுள்ளாராம். அதுவே அவருக்கு கொடுக்கப்பட்ட செயல் திட்டம்

ஆனால், அதிமுக பாஜகவை பொருத்த வரை பிரதமர் நரேந்திர மோடி தமிழ் நாட்டிற்கு வரும் முன்பே தேமுதிக வந்திருந்தால் கூட ஒரு மரியாதையை அவர்கள் தந்திருக்கலாம். ஆனால், பெரிய டிமாண்ட் வைப்பதால், அப்படியே காத்திருப்பில் விட்டுப் பார்க்கலாம் என விட்டுவிட்டனர்.

நடிகர் விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போதே இந்தக் கட்சி வீழ்ச்சியின் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்ததை 2016 ஆம் ஆண்டுத் தேர்தல் துல்லியமாகக் கணித்துக் காட்டியது. விஜயகாந்த் நோய்வாய்ப்பட்டு வீழ்ந்த நிலையில், தேமுதிக இன்னும் தேய்பிறையானது. 








மேலும் கடந்த பத்தாண்டுகளாக ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர் பதவியே கூட இல்லாத நிலையில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களிலும் செல்லுபடியாகாமல் ஓரம் கட்டப்பட்டுவிட்டது. இந்தச் சூழலிலும் தேமுதிக பிரேமலதா ‘பேர’ அரசியல்  செய்வதில் காட்டும் பிடிவாதத்தை ஆச்சரியமாகவே பார்க்கிறது அரசியல் களம்.

சமீபத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் பிரேமலதாவின் தம்பி சுதீஸ், ‘’ஆமாம், நாங்க பேரம் தான் பேசுகிறோம். என்ன தப்பு? எங்க கிட்ட 20 லட்சம் தொண்டர்கள் இருக்கும் போது நாங்கள் பேசக் கூடாதா? இன்னும் சொல்லப் போனால் எங்களோடு கூட்டணி வைக்கும் கட்சி மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். வருங்காலத் துணை முதல்வராவார் என் அக்கா’’ எனக் கூறியதும், விஜயபிரபாகரன் சகட்டுமேனிக்கு மரியாதை இல்லாமல் பேசியவையும் இரு பெரிய  கூட்டணிகளும் இந்தம்மாவுடன் மிக எச்சரிக்கையாக விலகி நின்று பேச வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்துவிட்டது.

’’ஆத்தாடி, இது ஆதரிக்க வருபவர்களிடம் அள்ளிச் செல்லும் குடும்பக் கட்சியாக உள்ளதே", எனப் பெரிய கட்சிகளே தேமுதிகவிடமிருந்து விலகி நிற்கும் போது நடிகர் விஜயின் தவெக கட்சி எப்படி இவர்களை கூட்டணிக்கு விரும்பி அழைப்பார்கள்?

எப்படிப் பார்த்தாலும் இந்தக் கட்சிக்கு 20 லட்சம் வாக்குகள் இருக்க வாய்ப்பே இல்லை! ஒரு நான்கைந்து மாவட்டங்களில் கொஞ்சம் வாக்குகள் இருந்தது. அதுவும் இப்போது உள்ளதா எனத் தெரியவில்லை, தற்போது தங்களைப் பகடையாக்கி தேமுதிக பிரேமலதா உருட்டி பேர அரசியல் செய்வது தொண்டர்களுக்கும் நன்றாகவே தெரிய வருகிறது.

ஜனவரி மாதம் 9 ஆம் தேதி மாநாட்டில் நிச்சயம் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பல முறை கூறிவிட்ட பிறகு,  ‘ஜகா’ வாங்கி மேன்மேலும் முடிவுறா பேர அரசியலில் மூழ்கி முத்தெடுக்கப் பார்க்கும் தேமுதிக பிரேமலதாவின் அரசியல் தொண்டர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் சங்கோஜப்படும் மனநிலையை எப்போதோ கடந்துவிட்டார் தேமுதிக பிரேமலதா என்று தான் தோன்றுகிறது.

அரசியல் என்பதை மக்கள் தொண்டாகப் பார்த்த, பெருந்தலைவர் கு காமராஜர்  கால சகாப்த அரசியல் தற்போது பிரேமலதா போன்ற தரகு அரசியல் காரணமாக சமாதி நிலைக்குப் போய்விட்டது…!

மக்களை மண்டாக வைத்திருந்து, 

தொண்டர்களை அடிமையாகப் பழக்கப்படுத்தி, 

மக்களை  இலவசங்களை எதிர்பார்க்கும்  சுயமரியாதையற்ற பிண்டங்களாகவே ஆக்கியுள்ளது.

இன்றைய சூதாட்ட அரசியல் களத்தில், தேமுதிக பிரேமலதாவின்  சுயநலம் சார்ந்த  கொள்கைக்கு துளியும் இடமற்ற அரசியலில் நேர்மை இல்லாததைக் கண்டு பிரமிக்க வேண்டாம். NDA கூட்டணியின் இறுதிப்  பட்டியலில்."

பாஜக, அதிமுக, பாமக, தமிழ் மாநிலக் காங்கிரஸ்(மூ), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு சிறு கட்சிகள் சார்பாக ஐ.ஜே.கே பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் திருமாறன்.ஜி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் புதய நீதிக்கட்சி ஏ.சி சண்முகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சேர்ந்து கூட்டணி நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றுள்ளனர். மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஒரே மேடையிலும் தோன்றியுள்ளனர். 

தற்போது அதிமுக கூட்டணிக்கு புதிதாக கட்சிகள் வந்துள்ளதால், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்து சென்ற பிறகும் ஒரு சில கூட்டணி கட்சிகள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 

100 தொகுதியில் வலுவான கட்சி புதியதமிழகம் என அதன் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமியின் கருத்து, 

ஆனால் 2021 ஆம் ஆண்டு எந்தக் கட்சியுடனும் கூட்டணியில்லாமல் அவர் நின்ற தொகுதியில் அதாவது ஓட்டப்பிடாரத்தில் தனித்து நின்று டாக்டர் கிருஷ்ணசாமி வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 6,544 மட்டுமே, அதே தேர்தலில்

நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்த நிலையில் அவர்கள் 22,413 ஓட்டுகளைப் பெற்றது, இவர் நான்காமிடம் தான் பெற்றார், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் மதுரையில் மாநில மாநாட்டினை நடத்தியதில் கூட்டணி ஆட்சி என்ற முறையில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி எனத் தீர்மானம் வேறு நிறைவேற்றப்பட்டது.

ஆனால் எந்த கட்சியும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டு கொள்ளாததால், அந்தத் தீர்மானத்தை கைவிட்டு விட்டார். இவரும் மைலாபபூர் ஆடிட்டர் ஆதரவாளராகவே பார்க்கபபடும் நிலை இருப்பினும், அதிமுக கூட்டணியில் சேர எடப்பாடி கே.பழனிசாமியிடம் இருந்து பச்சைக் கொடி காட்டப்படாததால், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட் டத்தில் அவர் பங்கேற்கவில்லை. 




இதேபோல திமுகவும் இந்த உணமையைத் தெரிந்து கண்டுகொள்ளாத தால், தவெகவோடு கூட்டணி சேரலாம் என கணக்குப் போட்டு தூது விட்ட நிலையில் நடிகர் விஜயும் அவரைக் கண்டுகொள்ளவில்லையாம். எந்த நிபந்தனையுமின்றி கூட்டணியில் சேரத் தயார் என அவர் அறிவித்த நிலையிலும், முக்கியக் கட்சிகள் எதுவும் அவரை அழைக்காமல் தனித்து விடப்பட்டதால், 'யாராவது கூட்டணிக்கு கூப்பிடுங்க?' என வழியே புலம்பும் நிலை . இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "100 தொகுதிகளில் நாங்கள் தான் ஸ்ட்ராங். நாங்களின்றி தென் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது. எனவும் ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக கூறுகிறார். பலமன சமூகம் ஆனாலும் அவர்கள் அணைவரும் இவர் பினபாக இல்லை என்பதே,

தாமாகா (மூ) GK வாசன் 

கட்சிக்கு 12 தொகுதி வேண்டுமாமாம், அவரும் அவரது கட்சியையும் பாஜகவில் இணைந்து விடலாம்,அய்யோ பாவம். பத்து ஊர்களுக்கு ஒருவர் தேறுவார்கள் 

நேற்றுவரை ஆட்சியில் பங்கு என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதை தற்போதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதால் ஆட்சியில் பங்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை தரும் தொகுதி தாருங்கள்

என்ன தான் பதிலுக்கு பதிவு செய்தாலும் இந்த கோயமுத்தூர் காரரை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

தொண்டர்கள் இல்லாத நடிகர் கமலஹாசன் திமுக கூட்டணி 15 தொகுதிகளில் போட்டி என்கிறார், 

அரசியல் தெரியாத மருத்துவர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி  தமிழ்நாட்டையே ஒரு கலக்குக் கலக்குவோம் என்கிறார்.

90 வயதில் புதிய கட்சி தொடங்க பண்ருட்டி இராமச்சந்திரன் தேர்தல் ஆணையத்திற்கு தேடி வருகிறார்   கேரளாவின் 

நடிகை அம்பிகா, ஆந்திராவின் நடிகை கௌதமி, ஓய்வு பெற்ற நடிகை கஸ்தூரி, நடன நடிகை காயத்ரி,  பாஜக நடிகை குஷ்பூ, அதிமுக நடிகை விந்தியா உள்ளிட்ட பலரும் சடட மனற உறுப்பினராக வரவே ஆசைக் கனவு கண்டு அலையும் நிலை, இவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அரசியல் சேவையாளர்களில்லை, தஙகளுக்கு சம்பாதித்து கிடைத்த அறிமுகம் மற்றும் புகழை விற்பனை செய்யத் துடிக்கும் வியாபாரம் 

ஜனநாயகத் தேர்தலை கொஞ்சம் கூட சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், இப்படி கேலிக்கூத்தாகும் வகையில் நடந்து கொண்டால் எப்படி என்பது  தான் மக்கள் மத்தியில் எழுவினா? இருந்த போதும் மக்கள் கோபம் ஆண்ட கட்சி ஆளும் கட்சி மீது கோபத்திலிருக்கும் மக்கள், பாதிபுகளுக்கு உள்ளாகும் இளையதலைமுறையினர், ஊழல் காரணமாக நிர்வாகத் திரமில்லாத ஆட்சி அதிகாரத்திற்கு எதிரான திக்கற்ற மக்கள் ஆதரவு நடிகர் விஜய் தான் போக்கிடம், ஆகவே தனித்து நின்றாலும் நடிகை விஜய் மீனவர்கள், கிருஸ்தவ சிறுபான்மையினரின், மற்றும் அடித்தட்டு மக்கள், ரசிகர்கள், மிதக்கும் வாக்குகள் என 29 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி தொல்வியை நிர்ணயம் செய்யும் சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதே உண்மை. இருந்தாலும் அங்கு நடக்கும் ஙில நிகழ்வு பாதிப்பை உறுவாக்கும்.வி சி கட்சியிலிருந்து மாறி தவெக வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு, தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆதவ் அர்ஜுனா தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம் ஒன்று வைத்திருப்பதால், த.வெ.க., வியூக வகுப்பு பிரிவில், ஏற்கனவே இருந்த ஜான் ஆரோக்கியசாமிக்கு அடுத்த இடம் அவருக்குக் கிடைத்தது. அதனால், துவக்கத்திலிருந்தே இருவருக்குமிடையில் தொழில் ரீதியாக யார் பெரியவர் என கருத்து மோதல் ஏற்பட்டது. எனவே, வியூக வகுப்பு, கூட்டணி உள்ளிட்ட பணிகளை ஜான் ஆரோக்கியசாமியும்; பூத் கமிட்டிப் பணிகளை ஆதவ் அர்ஜுனாவும் கவனிக்க வேண்டுமென, நடிகர்ஃவிஜய் உத்தரவிட்டார். ஆனாலும், இருவருக்குமிடையிலான மோதல் நீடித்தது.




அ.ம.மு.க., டி. டி. வி. தினகரன், தே.ஜ. கூட்டணியில் இணைவதாக ஜனவரி மாதம் 21 ஆம் தேதி வெளியான செய்திக்கு, 'எல்லா ஆடுகளும் வெட்டப்படுவதற்காகவே வாங்கப்படுகின்றன' என ஆதவ் அர்ஜுனா பேட்டியளித்தார்.

அன்றிரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், 'தேவையில்லாத பேச்சாலேயே கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது; உங்களுக்கு கொடுத்த வேலையை நீங்கள் பார்க்கவில்லை' என, ஆதவ் அர்ஜுனாவிடம் ஜான் ஆரோக்கியசாமி கொந்தளித்துள்ளார்.

அதற்கு ஆதவ் அர்ஜுனா, 'உங்களால், ஒரு கட்சியைக் கூட கூட்டணிக்குள் கொண்டு வர முடியவில்லை. இது தான் உங்களின் வியூகமா?' என ஆதவ் அர்ஜுனா கேட்க, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது நள்ளிரவு வரை நீடித்துள்ளது.

இதை மனதில் வைத்துத் தான்,  மாமல்லபுரத்தில் நடந்த கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில், 'கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டுமென, நடிகர் விஜய் எச்சரித்துப் பேசினார். அதன் பின்பும், ஜான் ஆரோக்கியசாமிஃ மற்றும் ஆதவ் அரஜுனா இடையேயான மோதல் தொடர்கிறது. இதனால், கட்சியின் தேர்தல் பணிகள் பாதிக்கப்படுகின்றன. என தவெக வட்டாரங்கள் பேசுவது நம் காதிலும் விழுகிறது. மேலும் விசி கட்சி ஆதவ் கொடும்பாவி கொளுத்தியது இப்போது பேசு பொருள். நடிகர் விஜய் அரசியல் நிகழ்வு சினிமா கலந்தது என்ற நிலையில்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட உயர்நீதி மனறத்தின் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ள இரண்டு நீதிபதிகள் அமர்வு,வழக்கின் விசாரணையை மீண்டும் தனி நீதிபதிக்கே இப்போது அனுப்பி வைத்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...