புதுக்கோட்டை மாநகர் திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கேவில் கும்பாபிஷேக விழா சிறப்பு திரளான பக்த கோடிகள் பங்கேற்பு
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பிச்சைக் குருக்கள் தலைமையில் யாகசாலையில் கணபதி பூஜை வாஸ்து பூஜை அனுக்ஞை கோ பூஜை லட்சுமி பூஜை நடத்தி புனித நீர் வைக்கப்பட்ட குடங்களுக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க அக்னி குண்டத்தில் மங்களப் பொருட்களை யிட்டு பூஜை செய்து வந்தனர்
காலை முதல் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் வைக்கப்பட்ட கலசங்களுக்கு பூஜை நடத்தப்பட்டு சிவாச்சாரிகள் புனித நீர் வைக்கப்பட்ட கலசங்களை யாகசாலையில் இருந்து ஊர்வலமாக கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர் காலை சுப வேளையில் 9.30 மணிக்கு மூலகோபுரம் மற்றும் ராஜ கோபுரத்தில் புதப்பித்து வைக்கப்பட்ட கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கற்பூர தீபம் காட்டினர்.
அப்பொழுது கோவிலைச் சுற்றி இருந்த ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு மெய் சிலித்து மகமாயிக்கு அரோகரா, முத்துமாரி அம்மனுக்கு அரோகரா,ஓம் சக்தி, மகா சக்தி என்று கோஷமிட்டு வழிபட்டனர் தொடர்ந்து கோவில் கருவறையில் உள்ள முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று முத்துமாரியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் மாநில அமைச்சர்கள் க.ரகுபதி மற்றும் மெய்யநாதன் திமுக மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தித் தொண்டைமான் முன்னால் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானவர்களும் பக்தர்களுடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை நகரக் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான காவலர் கள் பணியில் ஈடுபட்டனர், 25 ஆம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட் டத்தில் புகழ்பெற்ற சக்தி ஸ்தலங்களில் ஒன்றான திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நீண்ட காலமாக நடந்து வந்தன.
பணிகள் நிறைவடைந் ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் வரும் 28ஆம்தேதி நடக்கிறது. விழாவினை முன்னிட்டு கோயிலில் வரும் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 24 ஆம் தேதி கணபதி யாகம், அங்குரார்ப்பணம் 25
தேதி மகாமாரி ஸ்நபநயாகம் நடந்தது.அன்று மாலை முதற்கால யாக சாலை பூஜைகள், 26ஆம் தேதி 2ஆம் காலம், 3ஆம்கால யாக சாலை பூஜைகளும் நடந்த நிலையில் இன்று காலை புனிதநீர் குடங்கள் புறப்பட்டு 9.45 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது,யாகசாலை நிகழ்ச்சிகளை பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில் நடைபெற்றன. விழாவினை முன்னிட்டு அரசு சார்பாக பல குறைகள் இந்துசமய அறநிலையத்துறை செய்த போதிலும் மாரி அருளால் சிறப்பாக குடமுமுழுக்கு நடந்தது.












கருத்துகள்