பல்லாவரம் காவல் நிலையத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் திரைப்படப் பாடலுக்கு நடனமாடிய ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்;
நடனத்தைக் கைதட்டி ரசித்த 21 காவலர்களை ஆயுதப் படைக்கு மாற்றி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவுபொங்கல் நிகழ்ச்சி நடத்தி காவல் நிலையத்தில் நடனமாடிய காவல்துறை அலுவலர்கள் பணியாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். பல்லாவரம் காவல்நிலையத்தில்
பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தி நிகழ்ச்சியில் காவலர்கள் காவல்நிலையத்திலேயே நடனமாடிய காணொளிக் காட்சி பரவியது இந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது தாம்பரம் மாநகரக் காவல் துறை ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனவரி 13 ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் பதுவாஞ்சேரியிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதில் காவல்துறை ஆணையகத்திற்குப்பட்டு அனைத்துக் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவைக் கொண்டாடினர். மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் தனித்தனியாக பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக குரோம்பேட்டை, பல்லாவரம் காவல் நிலையங்களில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியின் போது ஆண், பெண் காவலர்கள் சிலர் நடனமாடினர். இதை மற்ற காவலர்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். இந்தக் காணொளிக் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது
இந்த நிலையில், இந்த கணொளிக் காட்சிகள் தாம்பரம் காவல்துறை ஆணையர் கவனத்திற்கும் சென்ற நிலையில் பல்லாவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் பழனிவேல், குரோம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயால் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அதே போல் இரண்டு காவல் நிலையங்களிலும் பணிபுரிந்த ஐந்து காவல் உதவி ஆய்வாளர்களும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும் 4 காவல் ஆய்வாளர்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கும் பணியிட மாற்றம் செய்து தாம்பரம் மாநகரக் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள காவலர்கள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. பொங்கல் நிகழ்ச்சியின் போது நடனமாடிய காவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் வேடிக்கை பார்த்தவர்கள், மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேதனை அளிப்பதாக சில காவலர்கற் தெரிவித்த போதிலும், இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கத்தவறியதும் குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை, எனலாம் உயர்நீதிமனற உத்தரவுப்படி திருவிழாக்களில் நடைபெறும் ரிக்காட் டான்ஸ் எனும் ஆடல் பாடல் நிகழ்ச்சி தடை செய்த நிலை உள்ளது, காவல் நிலையத்தில் ஆடுவது எந்தவகையில் நியாயம் என்பதை அவர்கள் உணரவில்லை, மேலும் மக்கள் கலாச்சாரம் பாதுகாக்க வேணடிய காவல்துறை தாங்களே இதுபோல நடந்து கொள்வது தவறு.
இது குறித்து உயர் காவல்துறை அலுவலர்கள் நிர்வாக காரணங்களால் மட்டுமே காவல்துறை ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.
பின் அதை ரத்து செய்த நிகழ்வும் பேசப்படுகிறது.







கருத்துகள்