மன்னார்குடி ஆன்மிக வரலாறு மற்றும் இயற்கை அழகு நிறைந்த நகரம்,
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்தது. தெற்கின் துவாரகை என அழைக்கப்படுகிறது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர்களால் இசை ஊக்குவிக்கப்பட்டதற்கான சான்றுகள் உண்டு. சோழர் காலத்தில் அமைத்த ஒரு பிரம்மாண்டமான வைணவ ஸ்தலமாகும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி திருக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பொது ஆண்டு 1072 முதல்1122 வரை உள்ள காலத்தில் கட்டப்பெற்ற வைணவத் திருக்கோயிலாகும்.
ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலமாகும். இக்கோயில், குலோத்துங்க சோழ விண்ணகரம் என அழைக்கப்படுகிறது இத்திருக்கோயில் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான திருக்கோயில் 154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாகும். கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்களுப், நவதீர்த்தங்களும், இரண்டு மரத்தேர்களைக் கொண்ட புகழ்மிக்க திருக்கோயிலாகும் ராஜகோபாலசாமி கோவிலின் யானை செங்கமலம் தனது பாப் கட்டிங் முடியால் உலகப் புகழ்பெற்றது. பழமையான கோயிலில் ஜனவரி மாதம் 28ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு, மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் பகுதி ஒன்றியங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை ஈடு செய்ய பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ள நிலையில்,ஒரு வரலாற்றுப் பார்வை:- ஏசு கிருஸ்து பிறப்புக்கு முன் முதலாம் நூற்றாண்டு அல்லது கி.மு. 2 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் வெண்ணிப் பறந்தலை எனும் தற்போது கோயில்வெண்ணி போர் என்பது, சங்க காலத்தில் சோழ மன்னன் கரிகாலனுக்கும், சேர மன்னன் பெருஞ்சேரலாதன், பாண்டியன், பதினொரு வேளிர்கள் உள்ளிட்ட கூட்டுப் படைகளுக்கும் நடந்த பெரும் போராகும்; இதில் கரிகாலன் வென்றான், ஆனால் சேரலாதன் முதுகுப் புண்ணால் நாணமடைந்து வடக்கிருந்து உயிர் துறந்தான். இது சோழர் வரலாற்றில் ஒரு முக்கியமான போர், கரிகாலனின் இளமையிலேயே நடந்ததாகக் கூறும் பொருநராற்றுப்படை. கரிகால சோழன் (சோழர்), தாய்வழிப் பூர்வீகம் வெண்ணிப் பறந்தலை (தற்போது கோயில்வெண்ணி எனப்படுகிறது), மன்னார்குடி, நீடாமங்கலம் அருகில் அமைந்துள்ள ஊர், அப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டு குலதெய்வ ஆலயங்கள் உண்டு, கரிகாலன், எதிரிகளை வெல்லும் வகையில் தனது வலிமையைக் காட்டினான்; சேரலாதன் மார்பில் பாய்ந்த அம்பு முதுகுப் பக்கமாக வெளியேறியது.
முடிவு: கரிகாலன் வெற்றி பெற்றான். சேரலாதன் முதுகுப் புண்ணுக்காக வெட்கமடைந்து, மேலும் போரிட விரும்பாமல் வடக்கிருந்து உயிர் துறந்த நிலை,
சங்ககாலப் பெண்பாற் புலவர் வெண்ணிக் குயத்தியார் கரிகாலனின் வெற்றியையும், போரின் சிறப்பையும் தனது ஒரே ஒரு பாடலின் மூலமாக வெளிப்படுத்துகிறார். அதன் மூலம்
இப்போர் நிகழ்ந்த ஊர் வெண்ணி. இவ் வெண்ணி என்ற சொல்லுக்கு மலர் என்ற பொருளுண்டு. தற்காலத்தில் நந்தியாவட்டை என அழைக்கபடும் மலர் தான் அக்காலத்தில் வெண்ணி மலராகும்
மேலும் இப்போர் குறித்த செய்திகளை வெண்ணிக்குயத்தியார் பாடல், அகம் 55 மாமூலனார்
பாடல் புறம் 65 கழாத்தலையார் பாடல் மற்றும் புறம் 66 மூலம் அறியலாம்.
இப்போர் கரிகாலனுக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குமிடையே வெண்ணிப் பறந்தலையில் நடந்தது.இப்போரில் சோழன் எய்திய அம்பு சேரனின் மரணம் கணவனை இழந்த மனைவி உடன்கட்டை ஏறுதல் போலத் தாமும் வடக்கு இருந்து உயிர் துறந்தனர் என்கிறார் புலவர். இதனை அகநானூற்றில் செவிலி ஒருத்தி, தம் மகளாகிய தலைவி உடன் போக்கு மேற்கொண்டதைக் கேட்டவுடன்
கரிகால் வளவனோடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது நாணிய சேரலாதன்
அழிக்கள மருங்கில் வாள் வடக்கி ருந்தென,
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் 3
என மாமூலனார் தனது அகம் 55 பாடல் மூலமாக எடுத்துரைக்கின்றார்.
அடுத்து இப்போர் குறித்த புறம் 66 இல் வெண்ணிக்குயத்தியார்
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உறவோன் மருக 9
என்கிறார். அதாவது காற்றின் திசை அறிந்து கடலில் கலத்தைச் செலுத்தக்கூடிய அறிவில், அறிவியலில் சிறந்த சோழ அரசர்களின் வழித்தோன்றல் கரிகாலன் என்கிறார்.
களி இயல் யானைக் கரிகால் வளவ!
இதே கருத்தைக் கடியலூர்
உகுத்திரங் கண்ணனார் பட்டினப் பாலையில்
வெளி லிளக்குங் களிறு போலத்
தீம் புகார்த் திரை முன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை 10
என்று சோழர் புகார் நாட்டுத் துறைகளில் களிறு போல அசையும் இயல்பை உடைய மரக்கலங்கள் நின்றிருத்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார். இது கரிகாலனின் முன்னோர் தொடங்கி அவன் வரையிலும் நாவாய் கொண்டு திரைகடலோடி திரவியம் தேடிய பெருமையைப் பறைசாற்றும்.
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே 5
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?
இப்பாடலில் அவர் எவரை பாடவந்தாரோ அவரை விடுத்து அவரது பாடலின் கருப்பொருளாக இருந்தது சேரனின் மாண்பும் அவன் மான உணர்வும்தான்
எனவேதான் அவர் சோழனின் வெற்றியைக் கொண்டாடாது சேரனின் மாண்பையும் அவனது மான உணர்வையும் அவன் வடக்கிருந்து உயிர் துறந்ததையும் தான் போற்றிப் பாடப்பட்டிருக்கிறது. எனவே வெண்ணிப் பறந்தலைப்போர் சோழனைக் காட்டிலும் சேரனுக்கு மிகுந்த புகழ் ஈட்டி தந்தது எனில் தகும்.
மேலும் அவர் இப்பாடல் மூலம் மிக முக்கியமான ஓர் விடயத்தை கோடிட்டுக் காட்டுகிறார் அதுதான்
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே 5
அதாவது மாபெரும் யானைப்படையைக் கொண்ட கரிகால் வளவா ! நீ உனது சோழர்களுடைய ஆற்றலை வெளிப்படுத்தும் முகமாக அப்போருக்குச் சென்று வென்றோய், ஆயினும் அப்போரில் நாணி வடக்கிருந்த சேரன் உன்னைவிட நல்லவன் அன்றோ,என உரைக்கிறார். ஆக இந்த போரைத் திட்டமிட்டு ஆரம்பித்தவன் கரிகாலன்தான் என்பது புலனாகிறது. அதற்கான காரணம் அக்கால பகுதியில் இருந்து சுமார் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக சேரர்களுடைய மாந்தையே கீழ்த்திசை ,மேல்த்திசை நாடுகளினுடனான பெருவணிகத்தில் ஈடுபட்டு வந்த கோநகராக விளங்கியது. அதன் சிறப்பை பிற்கால சிலப்பதிகார வரிகளில் கூட
நாகநீள் நகரொடு நாகநாடதனொடு போகநீள் புகழ்மன்னு புகார் என்கிறது.
புகார் சோழனது காலத்து துறைமுகம் அதே காலப்பகுதியில் இருந்த சேரனது துறைமுகம் மாந்தை அதனையே நாகநாட்டுத் துறைமுகம் என விளிக்கிறது. ஏனெனில் மாந்தை சேரர்களுக்கு முன்பிருந்தே நாகநாட்டு துறைமுக விளங்கி வந்திருந்தது. அத்தகைய பெருவணிகம் சேரர்களுடைய கையில் திகழ்ந்தமையால் அவர்கள் பெரும் செல்வச் செழிப்போடு பல நூறு பெரிய வங்கங்களையும் உருவாக்க முடிந்தது , வணிகத்திற்கு தடையாக இருந்த கடம்பர்களை அழித்து இமயம் வரை படையெடுத்து பழந்தமிழக நிலப்பரப்பில் வணிகத்தை தமது கையில் மாத்திரமே வைத்திருக்க முடிந்தது. இந்த நிலையில் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய அந்திம காலம் வயது தளர்ந்த ஓர் முதியவன். இருப்பினும் அவனே சேரநாட்டு வேந்தன். சோழனுக்கு இந்த சந்தர்ப்பம் நழுவ விட்டால் தனது சோழவரசு பழந்தமிழக வணிகத்தை கைப்பற்றுவதும் பெரும் புகழை எய்துவதும் இயலாத ஒன்று. எனவே இளைஞனாக இருந்த கரிகாலன் முதியவராக இருந்த சேரன் மீது படையெடுத்துச் சென்றான் என்பதே பொருந்தும் அதனையே வெண்ணிக்குயத்தியாரும் தனது பாடல் மூலமாக
"களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே" 5
என்கிறார். இந்த போர் இடம்பெற்ற ஊர் வெண்ணிப்பறந்தலை என்ற சங்ககால தமிழகத்தில் இருந்தது. அதனை சோழநாட்டு கோயில் வெண்ணி என்ற இடமாக ஊகித்து கொண்டதனால் தான் அந்த போரை சேரன் வலிந்து மேற்கொண்டதாக உரையாசிரியர்கள் கருதினர். அவ்வாறு சேரன் முக்கியமான கருவூரின் வஞ்சியில் சேரனது துணையரசனாக விளங்கிய பல்யானை செல்கெழுகுட்டுவன் அல்லவா போரில் மாண்டிருக்க வேண்டும். ஆக இந்த போர் இடம்பெற்ற இடம் சங்ககால தமிழக நிலப்பகுதிக்குள் இருந்த சேரர்களுடைய குடநாட்டிற்குள் இருந்த வெண்ணிப்பறந்தலையில் அந்த குடநாடு எதுவென்பதை இப்பாடல் தெளிவுபடுத்தும்.
"விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
தட மருப்பு எருமை தாமரை முனையின், முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர் மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே."
என விளிப்பதை காண்க.
அகம் 91(மாமூலனார்)
குட்டுவன் காக்கும் குடநாடு எது என்பதை அறியலாம்
அந்த குட்டுவனது குடநாட்டு கோநகர் மாந்தை என்பதனையும் உணரலாம்
"ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இவ் ஊரே!
முனாஅ தியானை உண் குருகின் கானலம்
பெருந்தோட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை அன்னஎம்
குழைவிளங்காய் நுதற்கிழவனும் அவனே”
- (குறுந்தொகை: 34)
அது மாந்தையை கோநகராக கொண்டது எனவும் தெளிவாக உரைப்பதைக் காண்க
அதே போல் அந்த மாந்தை
“தண்கடல் படுதிரை பெயர்தலின் வெண்பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்
ஊரோ நன்றுமன் மாந்தை
ஒருதனி வைகின் புலம்பாகின்றதே”
- (குறுந்தொகை: 166)
எனவும் அது நெய்தல் நிலப்பகுதியைச் சேர்ந்தது எனவும் தெளிவாக விளிப்பதையும் காண்க.
ஆகவே இந்த கரிகாலனுடைய போர் இடம்பெற்ற சங்ககால
தமிழ் பேசும் நிலப்பகுதியாக திகழ்ந்த குட்டுவன் காக்கும் குடநாட்டு மாந்தைக்கு கிழக்கே மேலைக்கடலுக்கும் கீழைக்கடலுக்கும் இடைப்பட்ட மையப்பகுதியாக விளங்கும் இன்றைய அநுராதபுரமாகும். ஆகவே இந்த கரிகாலனுடைய போர் நடவடிக்கை சோழ தேய குணகடலில் இருந்த புகார் துறைமுகத்தின் இருந்து குடநாட்டு குணகடலில் இருந்த திருகோணமலையை வந்தடைந்து தரைவழியாக நகர்ந்து மாந்தையை நோக்கி வருகையில் இதனை அறிந்த சேரலாதன் தனது வேளிர் பதினொரு படைகளோடு இடையில் அதாவது அநுராதபுரத்தில் அதனைத் தடுத்து நிறுத்தி மேற்கொண்டான். அவ்விடத்திலேயேதான் அவன் வடக்கிருந்து உயிர் துறந்தான். அதனால் தான் அவனுடைய கல்லறை அவன் கூடவே வடக்கிருந்து இறந்த சான்றோர்கள் என அனைவருக்கும் பொதுவான இடமாக திகழ்ந்தது. இதனையே இன்று நாம் எல்லாளன் சமாதி என்கிறோம். எல்லாளன் என்பதன் பொருள் சேரெல்லா(த)லன்.அதனால்தான் அதனை "பட்டிமாகர" என அழைக்கப்படுகிறது. இன்றுவரை வேதாரண்யம் ஆலயம் இலங்கை ஒரு பகுதி சமஸ்தான நிர்வாகம் கொண்டதைக் காணலாம்.
.jpg)



.jpg)





கருத்துகள்