குற்றப் பின்னணி வழக்குரைஞர்கள் பார் கௌன்சில் தேர்தலில் போட்டியிடத் தடை கேட்ட வழக்கு விரைவில் விசாரணை
குற்றப் பின்னணி வழக்குரைஞர்கள் பார் கௌன்சில் தேர்தலில் போட்டியிடத் தடை
மற்றும் SC/ST சமூக வழக்கறிஞர்களுக்கு ரோஸ்டர் முறை இட ஒதுக்கீடு உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்க, பாஜகவின் வழக்குரைஞர் ஏற்காடு A. மோகன்தாஸ் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறாத நிலையில்!.
2025 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம், உடனடியாக அனைத்து மாநில பார் கவுன்சில் தேர்தல்களை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
2018 இம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு, குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தும், தேர்தலில் போட்டியிடும் வழக்குரைஞர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினரின் 10 ஆண்டுகால வருமானம் சொத்து விவரம், மற்றும் குற்றப் பின்னணி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும்.
இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பு வகித்தவர் மீண்டும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதித்தும்.
வழக்கறிஞர் சங்கத்தின் பதவிகிப்பவர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பதவியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தும்.
மாநில பார் கவுன்சில் தேர்தலை முறையாகவும், எந்த ஒரு பனபலம், ஆள் பலம் மற்றும் அடியாள் பலம், ஓட்டுக்கு பணம் மற்றும் இலவசங்கள் இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து முன்னாள் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர், மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சந்திரமோகன் உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்று. அந்த மேல் முறையிட்டு வழக்கு இன்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வழக்கறிஞர் சந்திரமோகன், ஏற்கனவே முன்னாள் திமுக மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவின் தூண்டுதலால் அப்போது நீதி அரசர் ரகுபதியிடம், ஒரு குற்றவாளியின் முன் ஜாமின் வழக்கில் முன் ஜாமின் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பதற்கு முயற்சித்து முடியாத நிலையில் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், அவர் அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இப்ராஹிம் கலிஃபுல்லா மற்றும் எம்எம் சுந்தரேஷ் அடங்கிய நீதிமன்ற அமர்வு தலையீட்டால், பார் கவுன்சில் சேர்மன் பொறுப்பு மற்றும் உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றை இழந்தார்.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வழக்கறிஞர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள்.
அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் பி கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர் அய்யாவு ஆகியோர் பல குற்ற வழக்கில் ஈடுபட்டுள்ளனர்.
பார் கவுன்சில் உறுப்பினர் அய்யாவு கடத்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றவாளியாக உள்ளார்.
தமிழ்நாடு பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன் குட்கா வழக்கில் குற்றவாளியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்.
இந்த நிலையில் 2023 ஆம் வருடத்தில், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா ஏழு வருடத்திற்கும் மேற்பட்ட தண்டனைக்குரிய குற்ற வழக்கில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதித்து சட்டம் இயற்றியதை அக்டோபர் 2025 ஆம் ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து பார் கவுன்சில் ஆப் இந்தியா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது.
இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் ஏற்காடு A. மோகன்தாஸ் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மூலமாக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நீதிமன்ற உத்தரவின் பேரில் பார் கவுன்சில் ஆப் இந்தியா குற்றப் பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
ஏதாவது ஒரு குற்ற வழக்கில் ஏழு வருடத்திற்கும் மேற்பட்ட தண்டனைக்குரிய குற்றப் பின்னணி உள்ள நபரை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடவும், உறுப்பினராக தேர்ந்தெடுக்கவும் தடை விதிக்க வேண்டுமென்றும்.
நீதியரசர் கிருபாகரன் அடங்கிய அமர்வு 2018 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பார் கவுன்சில் தேர்தலில் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வருமானம் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமென்றும்.
இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவி வகித்தவர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டுமென்றும்.
பார் அசோசியேசன் தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகிப்பவர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும்.
பெண்களுக்கு பார் கவுன்சில் தேர்தலில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது போல பட்டியல் மற்றும் பழங்குடியின வழக்கறிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட வேண்டுமென ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

.jpeg)


கருத்துகள்