மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜக-சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக,மும்பை மாநகராட்சியை இக்கூட்டணி கைப்பற்றுகிறது. மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றிய பாஜக
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் நிலைமை:
மும்பை: பாஜக கூட்டணி: 118, காங்கிரஸ்: 12 தாக்கரே பரிவார்: 70,
புனே: பாஜக கூட்டணி: 90, காங்கிரஸ் : 20 தாக்கரே பரிவார்: 10
நாக்பூர்: பாஜக கூட்டணி: 104, காங்கிரஸ் : 38 தாக்கரே பரிவார்: 01
கல்யாண் டோம்பிவெளி: பாஜக கூட்டணி: 56, காங்கிரஸ் : 0, தாக்கரே பரிவார்: 5.
நவி மும்பை: பாஜக கூட்டணி: 57,காங்கிரஸ் : 0, தாக்கரே பரிவார்: 3.
தானே : பாஜக கூட்டணி: 25, காங்கிரஸ் : 3, தாக்கரே பரிவார்: 1,
மிரா பயாந்தர்: பாஜக கூட்டணி: 39, காங்கிரஸ்: 8, தாக்கரே பரிவார்: 1,
உலாஸ் நகர் : பாஜக கூட்டணி: 42 காங்கிரஸ் : 0, தாக்கரே பரிவார்: 0
பன்வல்: பாஜக : 26, காங்கிரஸ் : 4, தாக்கரே பரிவார்: 0, சோலாபூர் :பாஜக கூட்டணி: 61, காங்கிரஸ்1, தாக்கரே பரிவார்: 0
சாங்கிலி மிராஜ்: பாஜக கூட்டணி: 29, காங்கிரஸ் : 9, தாக்கரே பரிவார்: 0
சந்திரபூர் :பாஜக கூட்டணி: 15, காங்கிரஸ்: 20, தாக்கரே பரிவார்: 5
அமராவதி: பாஜக கூட்டணி: 14, காங்கிரஸ் : 10, தாக்கரே பரிவார்: 1
ஜால்னா: பாஜக கூட்டணி: 34, காங்கிரஸ் : 4, தாக்கரே பரிவார்: 0,
அகோலா: பாஜக கூட்டணி: 32, காங்கிரஸ் : 6, தாக்கரே பரிவார்: 1
லாத்தூர்:பாஜக கூட்டணி: 22, காங்கிரஸ் : 43, தாக்கரே பரிவார்: 0 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை,புனே, தானே,நவி மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில்,இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.மதியம் நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 2,869 வர்டுகளில் பாஜக-சிவ சேனா கூட்டணி 1,145 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.சிவ சேனா(UBT)-மகாராஷ்டிரா நவ நிர்மாண்(MNS)கூட்டணி 136 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.காங்கிரஸ் 179 வார்டுகளிலும்,சரத்பவாரின் என்சிபி 111 வார்டுகளிலும்,ஏஐஎம்ஐஎம் 41 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.தலைநகர் மும்பையில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் பாஜக-சிவ சேனா கூட்டணி 118 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றன.இதில்,பாஜக 89 வார்டுகளிலும்,சிவ சேனா 29 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன்மூலம்,மும்பை மாநகராட்சியை இந்த கூட்டணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.சிவ சேனா(UBT)-எம்என்எஸ் கூட்டணி மும்பையில் 77 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
இதில்,சிவசேனா(UBT)71 வார்டுகளிலும் MNS 6 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.மும்பையில் காங்கிரஸ் 7 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.நவி மும்பை மாநகராட்சியையும் பாஜக -சிவசேனா கூட்டணி கைப்பற்றுகிறது.இக்கூட்டணி மொத்தமுள்ள 111 வார்டுகளில் 100 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. இதில்,பாஜக 72,சிவசேனா 28 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றன.இங்கு சிவ சேனா(UBT)2 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.கடைசியாக 2017-யில் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.ஏறக்குறைய 26 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை ஒருங்கிணைந்த சிவசேனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில்,
தற்போது அது பாஜக-சிவசேனா கூட்டணி வசம் சென்றுள்ளது.தானே நாஷிக்,புனே,பிம்ப்ரி சின்ச்வாட்,பன்வெல்,கல்யாண்-டோம்பிவல்லி,மீரா பையாந்தர்,உல்ஹாஸ்நகர் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் பாஜக -சிவசேனா கூட்டணியே முன்னிலை வகிக்கிறது.மகாராஷ்டிரா உள்ளாட்சித்தேர்தல்:மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜக - சிவசேனா கூட்டணி‘இந்தமுறை குண்டு இலக்கை தவறவிடாது’சிவசேனை உத்தவ் தாக்கரே பாஜக அண்ணாமலைக்கு எதிராக மொழி இன வன்மம் பேசி எப்படியாவது வெற்றியை தக்க வைக்க வேண்டும் எனப் போராடி இருக்கிறார்
ஆனால் மும்பை மாநகர மக்கள் தமிழ் மராட்டி பிரிவினைவாதப் பேச்சுகளை புறந்தள்ளி தேசியவாதத்தை முன்னெடுக்கும் பாஜகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளனர். பாஜக அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என உத்தவ் சிவசேனா கண்டனம் தெரிவித்த காரணம்
தாராவி வாழும் பாஜகவின் ஆதரவுத் தமிழர்கள் மும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அங்கு பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவர் "மும்பை மராட்டியர் நகரமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்" எனப் பேசியது மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள உத்தவ் சிவசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், மராட்டிய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திய அண்ணாமலை மீது தேசத்துரோக வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார், ஆனால் தமிழர் பகுதியில் ஆதரவு பெருகியது, மும்பை மாநகராட்சிக்கு நேற்று 15 ஆம் தேதி நடந்த தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பா.ஜ.க-சிவசேனா(ஷிண்டே) கூட்டணி தனியாகவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கூட்டணி தனியாகவும் போட்டியிட்டன.
மும்பை மாநகராட்சியை சிவசேனா கடந்த 25 ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் இப்போது சிவசேனா இரண்டாக உடைந்தது. கட்சி, சின்னம் தலைவர்கள் என அனைத்தையும் இழந்த நிலையில் உத்தவ் தாக்கரே நிராயுதபாணியாக உள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த உத்தவ் தாக்கரே மும்பை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் தற்போது தோல்வியைச் சந்திக்கிறார்.
இதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கீரியும் பாம்புமாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரேயுடன் இந்தத் தேர்தலில் ஒன்று சேர்ந்திருந்தார்.
இத்தேர்தலில் யாருக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தாக்கரே சகோதரர்கள் இருக்கின்றனர்.குறிப்பாக தாக்கரே அடையாளத்தை மும்பையில் நிரூபித்துக் காட்டவேண்டிய கட்டாயத்தில் உத்தவ் தாக்கரே இருந்தாலும் தோல்வியடைந்தது இழப்பு
ஏக்நாத் ஷிண்டேயும், அவருடன் இருப்பவரகளும் பணத்தை வாங்கிக்கொண்டு பால் தாக்கரே குடும்பத்திற்குத் துரோகம் செய்ததை மும்பை மக்கள் இன்னும் மறக்கவில்லை" என்றாலும்
இது குறித்து மும்பை பா.ஜ.க தமிழ் பேசும் .பகுதி கேப்டன் தமிழ் செல்வத்திடம் பேசியபோது, தாக்கரே சகோதரர்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகவும், தாக்கரே அடையாளம் இனி எடுபடாது என்றும், மும்பையில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்குத்தான் மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தார். தாராவியில் மோதும் தமிழ், மலையாள வேட்பாளர்களில்
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் உள்ள 185 மற்றும் 188வது வார்டில் இம்முறை கடுமையான போட்டி ஏற்பட்டது.
இந்த இரண்டு வார்டுகளில்தான் தமிழர்கள் கணிசமாக இருக்கின்றனர். 185 வது வார்டில் தாராவி தமிழர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் சயான் பகுதியைச் சேர்ந்த ரவிராஜா என்பவருக்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுத்து இருக்கிறது
ரவிராஜா 30 ஆண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். அதோடு கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். தாராவியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது உள்ளூர் பா.ஜ.க தலைவர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. ஆனால் அனைவரும் தனக்காகப் பாடுபட்டு வருவதாக ரவிராஜா தெரிவித்தார்.
இதே போன்று தாராவியில் உள்ள மற்றொரு வார்டான 188வது வார்டில் முன்னாள் சிவசேனா கவுன்சிலரான மாரியம்மாள் முத்துராமலிங்கம் திடீரென காங்கிரஸ் கட்சிக்குத் தாவி அந்தக் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார். ஆனால் அந்த வார்டில் தமிழர்கள் மட்டுமல்லாது கணிசமான அளவு முஸ்லிம்களும் இருக்கின்றனர்.
தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்க காங்கிரஸில் சீட் கிடைக்காமல் சாலமோன் ராஜா என்பவர் சுயேச்சையாகப் போட்டி இதுதவிர மாறன் என்பவரும் சுயேச்சையாகப் போட்டி, இருவரும் தமிழர்கள் மட்டுமல்லாது கணிசமான அளவு முஸ்லிம்களும் இருக்கின்றனர
அண்ணாமலையும் இதற்கு முன்பு கவுன்சிலராக இருந்துள்ளார். மூன்று பேருமே கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளனர். அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், கட்சி தனித்தனியாக போட்டியிடுகின்றன. 188வது ஆம் ஆத்மி கட்சி சார்பாக வழக்கறிஞர் மஞ்சுளா என்ற தமிழ்ப் பெண் வழக்கறிஞரும் போட்டியிட்டார்.மும்பை மாநகராட்சித் தேர்தலின் 35-வது வார்டில் யோகேஷ் வர்மாவுக்கு ஆதரவாகத் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை உத்தவ் தாக்கரே எதிர்த்த நிலையில் தற்போது வெற்றி பெற்றார்.

















கருத்துகள்