நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாத மேடையில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பங்கேற்றுப் பேசிய நபர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் நடிகை விஜயலக்ஷ்மி சார்ந்த பாலியல் வழக்கில் மன்னிப்புக் கேட்டதை சுட்டிக்காட்டிப் பேசினார்,
அதற்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சித் துரைமுருகன்,அப்படி ஒரு மன்னிப்பை எங்க அண்ணன் கேட்கவே இல்லை, அப்படி மன்னிப்புக் கேட்டதை நிரூபித்தால்,நான் இனி நாம் தமிழர் சார்பாக எங்கேயும் பேச மாட்டேன் எனக் கூறினார்.
ஆனால் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்புக் கேட்டு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் தீர்ப்பு வந்த தினம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் Breaking News ஆக வந்தது தான்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவே இல்லை என எப்போதும் போல நாம் தமிழர் கடசி துரை முருகன் பேசியது தவறு என்பதை
நீதிமன்றத்தில் சீமான் அவரது கையெழுத்திட்டு தாக்கல் செய்த மன்னிப்பு Affidavit! மக்கள் பார்வைக்கு.
இதில் தெளிவாக முதல் பத்தி,
"மனுதாரரான நான் (Respondent no-2) அதாவது விஜயலட்சுமிக்கு எனது செயலாலும்,வார்த்தைகளாலும் ஏற்படுத்திய வேதனைக்கு (Unconditional apology)அதாவது நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோறுகிறேன்"
எனத் தெளிவாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதே போல இரண்டாவது பத்தியில்
"நான் விஜயலட்சுமிக்கு எதிராகப் பேசிய அனைத்து வார்த்தைகளுக்கும் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோறுகிறேன்"
எனவும் தெளிவாக மன்னிப்புக் கேட்டுத் தாக்கல் செய்த பிரமாணம் ஆதாரம் உள்ள போதே பொது மேடைகளில் பொய் கூறும் பேச்சாளரை வைத்து நேர்மை அரசியல் செய்வதாக சீமானால் எப்படி பொது மேடைகளில் பேச முடிகிறது என்பது மக்கள் தரப்பு எழுவினா.





கருத்துகள்