சிறு மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் விவசாய நிலங்களில் மலைப் பயிர்களான வாழை, பலா, எலுமிச்சை, சௌசௌ உள்ளிட்ட பயிர்களை விளைவிக்கும்
இவர்கள் குதிரைகளில் ஏற்றி பழையூர், புதூர், அகஸ்தியர்புரம், வெள்ளி மலை, தென்மலை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வருகின்ற. விவசாயிகளுக்கு உதவும் குதிரைகளை இன்று குளிக்க வைத்து வண்ண வண்ண கலரில் பொட்டும் வைத்து, மாலை அணிவித்து, சலங்கை கட்டி அலங்காரம் செய்து அவை உண்பதற்கு பொங்கல் வைத்து வழிபட்டனர், வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரைப் பொங்கல் விழா
கொண்டாடப்படும். அதன்படி இன்று கிராம மக்கள் குதிரை பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். இங்கு மா, பலா, எலுமிச்சை, சௌசௌ, அவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.திண்டுக்கல் அருகே சிறுமலையில் சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களில் வேளாண்மை இடுபொருட்கள், விளைபொருட்களைக் கொண்டு செல்ல குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, விவசாயிகள் குதிரைகளை வளர்த்து வருகின்றனர். இதனால் மாட்டுப் பொங்கல் தினத்தில் விவசாயிகளுக்கு உதவிடும் குதிரைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குதிரைப் பொங்கல் கொண்டாடினர்.
அதன்படி, குதிரைகளைக் குளிக்க வைத்து, வண்ணம் தீட்டி, அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர், குதிரைகளுக்கு உணவாக பொங்கல் கொடுத்து, மலை வயல்களில் மேய விட்டனர். சிலர் குதிரை இல்லாத நிலையில் கோவேறு கழுதைகளையும் பயன் படுத்தி வருகின்றனர். தலைமுறைகள் பல பேசும் அன்பின் குதிரை மற்றும் காளை! லயமும், பட்டியும் கொண்டாட பொங்கல் விழா, உங்கள் கால் தடம் எங்கள் வாழ்வின் வரலாறு என குதிரை பொங்கல் விழா நடந்தது.
குதிரைக்கு தமிழில் பல பெயர்கள் பரி, புரவி, அயம், இவுளி, வாசி, துரகம், கோணம், கந்துகம், மா உள்ளிட்ட பல உண்டு குதிரையை புறநானுறு கூறும்
அயம், இவுளி, உண்ணி, கண்ணுகம், கந்துகம், கலிமா, கிள்ளை,குந்தம், கூந்தல், கொக்ஃகு, கொய்யுளை, கோடகம், கோடை, கோணம், பரி, பாடலம், பாய்மா, புரவி, மண்டிலம், மா, மான், வயம், வயமா, வன்னி, வாசி,, குரகதம், துரகம், துரங்கம், தூசி, எனப் புறநானூறு, கு.சோ. உலாவெனும் நுலில் இருந்து காணலாம்.
பல நூறு ஆண்டுகள் நம்முடன் பங்காளியாய் நின்ற நிலையில்
இனியும் மக்கள் வாழ்வோடு ஐயனாராக, பெரிய கருப்பராகவே உறவாக உடனிருங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வானம் உங்களுக்கு பசுமை வயல்களை அள்ளித் தரட்டும்! வான்மழை உங்களுக்கு முத்தமிடட்டும்!
உழவனின் கரம் உங்கள் முதுகில் எப்போதும் அன்போடு தடவட்டும்
உழவு தொழிலின் உண்மையான நாயகர்கள் வாழ்க "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீனில் உண்டு களித்தோரை நிந்தனை செய்வோம்" பாரதி வழியில் உழவர் திருநாள் என்ற பெயரில் பறவைகள், விலங்குகளை அடித்து உண்ணும் மக்கள் சமீபத்தில் அதிகரிக்கும் நிலையில்
அதுகுறித்த விழிப்புணர்வுக் கோலம் பார்வையாளர்களைக் கவர்கிறது...










கருத்துகள்