முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னையிடம் சக்திவேல் வாங்கிய நாளே தைப்பூசம் விழா உலகம் முழுவதும் விழாச் சிறப்பு

அன்னையிடம் சக்திவேல் வாங்கிய நாளே தைப்பூசம் 



சூரியனின் 7ஆம் பார்வை மகர ராசி வீட்டில் விழும் நாளே தைப்பூசம், அல்லது  பூச நட்சத்திர வழிபாடு.      தைமாதம் அது  தைப் பூசத் திருநாள். சூரியன் சிவாம்சம் கொண்டவர். தை மாதத்தில் வடதிசைப் பயணத்தை தொடங்குவதை உத்ராயண புண்ணிய காலம்  இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார்.  சக்தியின் அம்சமாக திகழ் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இது  அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும்.





அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.



தைப்பூசத்திருவிழா, பழநியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எம்பெருமான் சிவன் நடராஜராக நடனமாடிய மார்கழித் திருவாதிரை. சிவனும், அம்பிகையும் இணைந்தாடிய நாள் தைப்பூசம். அதை மஹாலக்ஷ்மி கண்டு கழித்த ஆனந்தத் தாண்டவம் இவ்வகையில், தைப்பூசம் சிவசக்திக்குரிய நாளாகிறது.ஆறுபடை வீடுகள் மற்றும் முருகன் ஆலயங்களில், மயிலாப்பூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா நடந்த நிலையில் தற்போது பழனியில் மட்டும் விழா பிரசித்தமாகி விட்டது. பழனி மலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன், அம்பாள் சந்நிதியின் நடுவில் முருகன் சந்நிதி உள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் எதிரில் உள்ளதால் கோயிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனை வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சந்நிதி எதிரிலுள்ள கொடிமரத்தில் தைப்பூசத் திருநாள் கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான சுவாமி மலை முருகனுக்கு முக்கியத்துவம் தந்து வழிபட்டனர். காலப்போக்கில், தைப்பூசத்திருநாள் முருகனுக்குரியதாகவே மாறி விட்டது. தற்போதும் தைப்பூசவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருள்கிறார்.  ஆனாலும், பக்தர்கள் மலை மேல் வீற்றிருக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி மீது கொண்ட பக்தியால் அங்கே குவிகின்றனர்.




தைப்பூசம் தைக்கத் தக்கவை.  தையென்னேவல், தாளக்குறிப்பினொன்று, மகர ராசி, பூசநாள் என்பனவாகும். தைப்பூசத் திருநாள் சிறப்புபை பாவலர் பெருமான்,  தைப்பூசம் வியாழக்கிழமையோடு கூடும் சித்தயோக தினம் வர, அன்று மத்தியானத்திலே, ஆயிர முகத்தையுடைய பானு கம்பர்  ஆயிரஞ்சங்கூத, ஆயிரந் தோணுடைய வாணாசுரன் குடாமுழா ஒலிப்பிக்க, பஞ்ச துந்துபி ஒலியும் வேத ஒலியும் கந்தர்வருடைய  கீதஒலியும் மிக்கெழ ஞானசபையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு நின்று ஆனந்த நிருத்தஞ் செய்தருளினார். வியாக்கிரபாத  முனிவர் பதஞ்சலி முனிவர் என்னும் இருவரும், பிரம்மா விஷ்ணு முதலிய தேவர்களும், திருவுடையந்தணர் மூவாயிரவரும், பிறரும்  சிவபெருமானுடைய திருவருளினிலே, ஞானக் கண்ணைப் பெற்று, அவருடைய ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்து, உரோமஞ் சிலிர்ப்ப,  நெஞ்சு நெக்குருக, கண்ணீர் பொழியச் சிவானந்தக் கடலில் மூழ்கினார்கள். பதஞ்சலி முனிவர் எம்பெருமானே, இந்த ஞான சபையிலே  உமாதேவியாரோடு இன்று முதல் எக்காலமும் ஆன்மாக்களுக்கு ஆனந்த நிருத்தத்தைப் புலப்படுத்தி யருளும் என்று வேண்டிக்  கொண்டார். அதற்குச் சிவபெருமான் உடன்பட்டருளினார்.




சிவபெருமான் பணித்தருளியபடியே தேவர்கள் அந்த நிருத்தஸ்தானத்தை  வளைத்து உயர்ந்த பொன்னினாலே ஒரு மகாசபை செய்தார்கள். சிவபெருமான் அன்று தொடங்கித் தேவர்களும் வியாக்கிரபாத முனிவர்,  பதஞ்சலி முனிவர் முதலாயினோரும் வணங்கச் சிவகாமியம்மையாரோடும் கனகசபையிலே எக்காலமுந் திருநிருத்தத்தைத்  தரிசிப்பித்தருளுவாராயினர்.தைப்பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை மகர ராசி வீட்டில் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த  நிலையாகும். சூரியனால் ஆத்மபலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. தை மாதத்தில் பவுர்ணமி சேரும் பூசநாள் மிகவும்  விசேஷமானதாகும். 

 இந்நாளின் சிறப்புப் பற்றிப் பூம்பாவைப் பதிகத்தில் ஞானசம்பந்தரும்.

"மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்

நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்"....

எனக் கூறுகிறார்.





தில்லையில் மூவாயிரவர்களுக்கு மநு மகன் இரணியவர்மனுக்கும் தில்லை நடராசர் தரிசனம் கொடுத்த  தினமும் இதுவேயாகும். மேலும், புத்தர் ஞானோதயம் பெற்று, இமயமலைச் சாரலிலே இருந்த நாளில் ஈழநாட்டைப் பற்றி  நினைத்ததும் இதுதான் என்பர். எனவே இத்தினத்தைச் மலேசியா சிங்கப்பூர், இங்கிலாந்தில் லண்டன், அமெரிக்காவில் சிறப்புடன் கொண்டாடி இறைவனருள் பெறுகின்றனர், வடலூர் வள்ளலார் அருள் ஜோதி மற்றும்

 மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, பத்துமலை முருகன்  வெள்ளி ரதத்தில் கோலாகலமாகப் பவனி வருகிறார்     திருச்சிராப்பள்ளி மாவட்டம் வயலூர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி, கடலூர் மாவட்டம்                  வடலூர் வள்ளலார் அருள் ஜோதி வடிவமான இறைவனை தரிசிக்க வேண்டுமானால் மனிதர்களை இயக்கும் ஏழு சக்திகளையும் ஒவ்வொன்றாக அகற்ற வேண்டும். இதன் அடையாளமாகவே சத்திய ஞானசபையில் ஏழு திரைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இந்தத் திரைகளை நீக்கிவிட்டால் ஜோதி தரிசனம் பெறலாம்.

மாயை என்னும் அறியாமை இருளை அகற்றினால் இறையருள் ஜோதி வடிவாக நம் கண் முன்னே தரிசனப்படும் எனும் பெருந்தத்துவத்தின் விளக்கமாக சத்திய ஞான சபையிலே ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது


கறுப்பு - மகாமாயை

நீலம் - மாயா சக்தி

பச்சை - கிரியாசக்தி

சிவப்பு - பராசக்தி

மஞ்சள் - இச்சாசக்தி

வெண்மை - ஞானசக்தி

கலப்பு - ஆதிசக்தி

கரைவின் மா மாயைக் கரும் பெருந் திரையால்

அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பேருறு நீலப் பெருந் திரை அதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பச்சைத் திரையால பரவெளி அதனை

அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

செம்மைத் திரையால் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பொன்மைத் திரையால பொருளுறு வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

கலப்புத் திரையால கருது அனுபவங்களை

அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! எனலாம் மேலும் இலங்கை கண்டி கதிர்காமம் உள்ளிட்ட ஊர் ஆலயங்கலிலும், மேலும் அமெரிக்காவில் 25,000 பேர் நடை பயணம் செய்த தைப்பூசம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகே  கண்கா ட்   என்னும் ஊர் உள்ளது அந்த ஊரில் சிவா முருகன் ஆலயம் உள்ளது அண்மையில் அதனுடைய குடமுழுக்கு நடைபெற்றது அமெரிக்காவிலே கட்டப்பட்ட முதல் இந்து கோயிலாகும் அமெரிக்காவில்  5 வண்ணம் பூசப்பட்ட ராஜகோபுரத்தைக் கொண்ட  முதல் கோவிலாகும்.  தைப்பூசத்தின் போது இக்கோவிலுக்கு நடை பயணம் மேற்கொள்கின்றனர் .ப்ரீமாண்ட் என்னும் இடத்தில் இருந்து இரண்டு நாட்கள் 43 மைல்  நடக்கின்றனர் இந்த ஆண்டு அதில் 8000 பேர் பங்கு பெற்றுள்ளனர் இரண்டாவது நாள் அருகிள்ள ஊரிலிருந்து நடைபயணம் மேற்கொள்ளுகின்றனர் இதில் 17000 பேர் நடந்துள்ளனர். மொத்தம் 25 ஆயிரம் பேர் தைப்பூசத்திற்கு நடை பயணமாகச் சென்றுள்ளனர், நடைப் பயண பாதைக்கு அரசு  அனுமதி பெற வேண்டும் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும் கழிப்பிட வசதி செய்ய வேண்டும் என்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் .வழியில் அவர்களுக்கு காலை உணவு மதிய உணவு சிற்றுண்டி பானங்கள்  அன்னதானம். கொடுக்கப்படுகிறது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சேவை செய்து வருகின்றனர் நடைப்பயணம் முடிந்து  சேர்ந்த அன்று காலை இட்டலியம் கவுனி அரிசியும்   கொடுத்துள்ளனர் மதியம் சாம்பார் சாதம் தயிர் சாதம் வழங்கியுள்ளனர் மாலை சிற்றுண்டி இரவு சப்பாத்தி வழங்கி  உள்ளனர்.காலை இட்லி வழங்குவதற்காக அங்குள்ள உணவு விடுதி  ஒன்றின் சமையலறையை எடுத்து 32 ஆயிரம் இட்டலிகள் அவித்துள்ளனர்.சில உணவு வகைகளை  நகரத்தார் பெண்மணிகள்  சமைத்துள்ளனர். சிலவற்றை வெளியில் வாங்கி உள்ளனர் கடல் கடந்து அமெரிக்காவில்  இவ்வாறு  செயல்படுவது  பாராட்டுக்குரியது இன்றைக்கு தைப்பூசத்தின் போது  காவடி ,பால்குடங்கள் எடுக்கப்படுகின்றன மதியம் திருக்கல்யாணம் இரவு வள்ளி மயில் வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானை வலம் வருவதும் நடைபெற உள்ளது 

இக்கோவில் 90 சதவீதம் நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டிருக்கிறது பல்வேறு ஆன்மீக பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர் இந்தியா சேர்ந்தவர்களும் வழிபாட்டிற்கு வருவதோடு   நன்கொடைகளும் வழங்கி வருகின்றனர் சிலர் பிரீ மாண்டில் இருந்து நடந்து வந்தார்கள் மற்றும் தொண்டராக சேவை செய்து வருகிறார்கள். உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது அதேபோல்



காரைக்குடி ஸ்ரீ வைத்தியநாத சுப்பிரமணிய தண்டாயுதபாணி திருக்கோவிலிலும் சிறப்பாக தைபூச விழா விரிசையாக நடத்தினர்   கோவிலில் 01.02.2026 காலை 6.30 மணிக்கு அபிஷேகமும் வெள்ளி அங்கவஸ்திரம் சாத்தி அலங்காரத்துடன் காட்சியளித்தார் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது  . ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீ முருகப் பெருமான் உதித்த வைகாசி மாதம் விசாகம்,

அறுவரும் ஒருவரான திருக்கார்த்திகை, அன்னைபாய்வதி தேவியிடம் வேல் வாங்கிய தைப்பூசம்,

அசுரரை அழித்தாட்கொண்ட நாள்  ஐப்பசி மாதம் சஷ்டி,

வள்ளியை மணம் புரிந்த பங்குனி மாதம் உத்திரம்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...