முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9 ஆளுநர்கள் மாற்றமும் நியமனமும்

தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதிலாக கேரளம் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காள மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதன்படி, தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


ஹிமாசலப் பிரதேச ஆளுநரான ஷிவ் பிரதாப் சுக்லா தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம்.

டில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக தரன்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்     தெலங்கானா மாநில ஆளுநரான ஜிஷ்னு தேவ் வர்மா மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம்.

நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமனம்.

பிகார் மாநில ஆளுநராக (ஓய்வு) லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா நியமனம்,.லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர கவிந்தர் குப்தா ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமனம்.

லடாக் துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் அந்தந்த, மாநில லோக்பவன் அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதிகளிலிருந்து அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டதுமத்திய அரசு மேற்கு வங்காள ஆளுநரான ஆனந்த போஸை ராஜினாமா செய்யச் சொல்லியதாக மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவியை மேற்கு வங்காள மாநிலத்திற்கு பதவி உயர்வு தந்து மாற்ற இருப்பதாகவும் தகவல் வந்த நிலையில் 

இது குறித்து மத்திய அரசுக்கு நெருக்கமான உயர் அதிகாரிகள் தரப்புக் கூறிய 

"மேற்கு வங்காள ஆளுநரோடு, லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரான கவிந்தர் குப்தா, உள்ளிட்ட மூன்று ஆளுநர்களை மத்திய அரசு ராஜினமா செய்யச் சொல்லியதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், மேற்கு வங்காள மாநில ஆளுநரை மட்டுமே ராஜினாமா செய்துள்ளார்.



மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஏற்பட்ட சில கருத்து மோதல்களே இந்த ராஜினாமாவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது" என்கிறார்கள்.

அதே நேரம் மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளதால், தங்களுக்கு ஏற்ற ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதனாலே ஆர்.என்.ரவியை மேற்கு வங்காள மாநில ஆளுநராக மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. மற்றொருபுறம், கேரளம் மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழ்நாடு கூடுதல் ஆளுநர் பொறுப்பைக் கவனிக்கும் உத்தரவும் வெளியாகியுள்ளது.

அதோடு தெலங்கான மாநில ஆளுநராக இருந்த தேவ் வர்மாவை மஹாராஷ்ட்ரா மாநில ஆளுநராகவும், இமாச்சல மாநில ஆளுநராக இருந்த பிரதாப் சுக்லாவை தெலுங்கானா மாநில ஆளுநராகவும் மாற்றம் செய்துள்ளது மத்திய அரசு.

அதே போல், டெல்லி, லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேச மாநிலங்களின் துணை நிலை ஆளுநர்களும் மாற்றப்பட்டுள்ளார்கள். இதற்கான அறிவிப்பை முறைப்படி ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.

கேரளம் மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு ஆளுநராகச் செயல்படுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தமிழ்நாடு ஆளுநர் தேர்வை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் தமிழ்நாடு ஆளுநர் யார் என்பதை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் அறிவிக்கும் எனலாம் மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள். மேற்கு வங்காள மாநில ஆளுநரின் ராஜினாமாவைத் தொடர்ந்தே இத்தனை ஆளுநர் மாற்றங்களையும் மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது..பதவிக்காலம் முடிவு பெறுவதை யொட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் மேற்கு வங்கத்துக்கு மாற்றப்படுகிறார் என்றாலும், அவர் தமிழ் நாட்டை விட்டுச் செல்வது சற்று பப்ளிக் ஜஸ்டிஸ் வாசகர்கள் மத்தியில் வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. 

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் சந்திக்கக்கூடிய பல பிரச்னைகளைச்  சந்திக்க நேர்ந்தபோதும், திரு.  ஆர்.என். ரவி அவற்றை திறம்படச்  சமாளித்தார். 

தமிழ்நாடு அனுபவங்களின் நினைவு அவருக்கு மனக்கசப்பை அளித்திருக்கலாம். எனினும்,  எந்த சந்தர்ப்பத்திலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், பொறுமையுடன் கடமையாற்றிய சிறப்புக்குரியவர்,  விடை பெறும் ஆளுநர். 

தன்னால் ஏற்க முடியாத சர்ச்சைக்குரிய மசோதாக்களைத் தவிர, மற்ற அனைத்து மசோதாக்களுக்கும் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கினார். உண்மைக்கு மாறானது என்று அவர் கருதிய ஆளுநர் உரையின் வாசகங்களை அப்படியே வாசிப்பது தர்மசங்கடமானது என்பதால், அவர் அதைத் தவிர்த்தது புரிந்து கொள்ளக் கூடியதே. 

அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள், அவமானங்கள்  அவருக்கு மிகுந்த மன சங்கடத்தை அளித்திருக்கும். அவர் சட்டசபையிலிருந்து வெளியேறியபோது, பின்னாலிருந்து ஒரு அமைச்சர் காட்டிய சைகை முதற்கொண்டு,  'Who are you? You are a postman.'  என்பது போன்ற விமர்சனங்கள் வரை எதற்கும்,  அதே பாணியில் சாமானியன் போல எதிர்வினையாற்ற விரும்பாத பெரிய மனிதராகவே  செயல்பட்டார்.


' கெட் அவுட் கவர்னர் ' என்றாலும், ' அவரே கவர்னராக நீடிக்கட்டும் ' என்றாலும், இரண்டையும் சமமாக ஏற்ற ஸ்திதப் பிரங்ஞனாக அவர் விளங்கினார். சுயம் சேவகர் 

தமிழ்நாட்டில் தான் இப்படி நடத்தப்பட்டாலும், பொது மேடைகளில் தன் மாநிலத்தை விட்டுக் கொடுக்காமல் அதன் சிறப்புகளைப் போற்றியே  பேசினார்.

கம்பரை வியந்து போற்றினார் கம்பர் நினைவிடத்தில் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அவரிடம் தம்பி பரத் நூல் வழங்கிய நிகழ்வும் உண்டு, 


உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் இத்தனை முதிர்ச்சிகளைக் காண்பது மகிழ்ச்சிக்குரியது. ஆர்.என். ரவி அவர்களிடம் இத்தகைய பண்பாடுகள் மிகுந்திருந்தன. நம்மைப் பொறுத்த வரை அவர் ஒரு ஜென்டில்மேன். பாராட்டுகிறோம்.

வரும் காலத்தில் இதை விட உயர்ந்த பதவிகளைப் பெறும் தகுதி அவருக்கு இருக்கிறது. வாழ்த்துகிறோம்.

அவரது எதிர்காலம் சிறப்பாக அமையட்டும். சென்று வருக, Honourable His Excellency Governor Sri R.N. RAVI. என்பதே


நம் மாநிலத்திலிருந்து சற்று பெரிய மாநில ஆளுநராகச் செல்லும் முன் தலைமை நீதிபதி நல்லநேரத்தில் பதவி ஏற்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...