தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக் குழு திட்ட அலுவலர் ராஜேஸ்வரி அலுவலகத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார்
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக் குழு திட்ட அலுவலர் ராஜேஸ்வரி அலுவலகத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக இளநிலை உதவியாளர் உமாசங்கர் கைது. தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்குழு மாவட்ட திட்ட அலுவலராக பணி செய்பவர் ராஜேஸ்வரி. மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அவர் பணி செய்யும் அலுவலகத்தில் இன்று வழக்கம் போல பணியாற்றிக் கொண்டிருந்தவரை போடிநாயக்கனூரைச் சேர்ந்த உமாசங்கர் (வயது 56) அலுவலகம் வந்தவர் ராஜராஜேஸ்வரியின் அறைக்குச் சென்று அவரிடம் வாக்குவாதம் செய்தபோது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டியதில் அவருக்கு தலை, கை, கண்ணம் ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு அலுவலக ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள், உமாசங்கரை தடுத்து, அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரின் காரில், ராஜராஜேஸ்வரியை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ...