சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரைச் தனலட்சுமி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில், அவருடைய மகனின் படிப்பிற்காக பல்லாவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்ததாகவும், அவர் அங்கிருந்து படித்து வந்த நிலையில், மாடியிலிருந்து தனது மகன் கீழே விழுந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை தன்னை அழைத்ததாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னை மூன்று வெவ்வேறு லாட்ஜ்களில் வைத்து காவல்துறையினர் மிரட்டியதோடு ஆபாசமான வார்த்தைகளைக் கூறி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பழவந்தாங்கல் காவல்நிலையத்தின் அப்போதைய பெண் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்திருந்தார். இதனை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இந்த வழக்கில் மனித உரிமை மீறல் நடந்து அது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை 8 வார காலத்திற்குள் இழப்பீடாக வழங்க வேண்டுமெனஇந்த தொகையை பழவந்தாங்கல் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட காவலர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சமூகத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இயலாத மக்களிடம் காவல்துறையினர் அதிகாரத்தைக் காட்டக்கூடாதெனவும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமெனவும், அவர்கள் குற்றவாளிகளாக ஆகாத வகையில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசைக் கட்டுப்படுத்துமென்பதால், அவற்றை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு.
மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளை விசாரிக்கும் மாநில மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைத்து மாநில அரசுக்கு பிறப்பிக்கும்
உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில். மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசைக் கட்டுப்படுத்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதைத் தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா ? இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்குமாறு, நேரடியாக மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா ? என்பது போன்ற வினாக்களுக்குத் தீர்வு காண, இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் மற்றும் எம்.சுந்தர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்ததன் படி, இந்த வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகளின் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், ‘மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு என்பது அரசைக் கட்டுப்படுத்தக்கூடியது. அதை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும். மேலும், மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தத் தவறினால், ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம். எக்காரணத்தைக் கொண்டும், மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளைத் தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. அதே நேரத்தில், ஆணைய உத்தரவுகளை எதிர்த்து, அரசும் நீதிமன்றத்தை நாடலாம். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்படும் உத்தரவில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே இழப்பீட்டை வசூலித்துக் கொள்ளலாம். எவ்வளவு தொகை மற்றும், கால நிர்ணயம் குறித்தும், உரிய நோட்டீஸ் அனுப்பி முடிவு செய்து கொள்ளலாம். மனித உரிமை ஆணையம் பரிந்துரையின் பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாம்’ என உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் தற்போது மனித உரிமை ஆணையம் பல நல்ல தீர்ப்புகளை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆணையத்தின் பணிகளாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும்,
மனித உரிமைகள் சம்பந்தமாக ஆய்வுகள் நடத்தி, கல்வியறிவினை மக்களிடையே பரப்புவது,
ஊடகங்கள் மற்றும் கருத்தரங்கம் மூலமாகவும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
மனித உரிமைகள் மீறப்படும்போது பாதிக்கப்பட்டவர்கள் மனு செய்தாலோ அல்லது ஆணையம் தானாகவே முன் வந்து பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் கீழ்க்கண்டவற்றிற்கு முன்னுரிமை வழங்கி பணியாற்றுகிறது.
மக்களின் வாழ்வியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும்,
மனித உரிமைகளுக்கு எதிராக கொண்டுவரப்படும் சட்டத்தினை ஆய்வு செய்யவும்,
காவல் துறையினரின் வன்முறை மற்றும் கற்பழிப்பு மற்றும் பஞ்சமா பாதகங்கள் போன்றவற்றை அகற்றுவது சம்பந்தமாகவும் , அடித்தள மக்கள் குறைகளை களைவதற்கும்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னுரிமை வழங்குகிறது.
கருத்துகள்