போராட்டம், பேரணிக்கு தடைவிதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு சென்னை உயர்நீதிமன்றம் பதில் முறையற்ற போராட்டங்கள் மற்றும் அனுமதியற்ற பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது, அனுமதியின்றி போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்டவை நடத்த தடை விதித்தும், 5 நாட்களுக்கு முன்னரே அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் ஒழுங்கைகஹ காக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதி தெரிவித்து விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்