என்னதான் ஆயிற்று தமிழகத்துக்கு என்று தெரியவில்லை? அடிப்படை அறிவோ? அல்லது எதை பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பாத தற்குறியெல்லாம் எல்லாற்றிற்கும் நீதி சொல்கிறார்கள். குடியரசு தினத்தில் தமிழக சார்பாக கொண்டு வரப்பட்ட ஐயனாருக்கு எப்படி பூணூல் வந்தது என நக்கல் செய்து கொண்டுள்ளது ஒரு கும்பல்.இவர்கள் வாழ்நாளில் என்றாவது ஐயனார் கோவிலுக்கு போயிருப்பார்களா என்று தெரியவில்லை. Iconography என்ற ஒன்று இருப்பது இவர்களுக்கெல்லாம் தெரியுமா? தெரியாதா? என புரியவில்லை.எல்லா தெய்வங்களுக்கும் உள்ள அடையாளங்கள்,தோற்றங்கள் சேகரித்து வைத்துள்ளார்கள்.தமிழ்நாட்டில் மிக பழமையான 8-10 ம் நூற்றாண்டு ஐயனார் சிலைகள் கூட கிடைத்துள்ளது. ஐயனார் கிழக்குத் திசை நோக்கி பார்த்திருப்பார் பெரும்பாலும்.மார்பில் பூணூல் அணிந்திருப்பார்.இளைஞராக இருப்பார் இதற்கு பொருள் சிலப்பதிகாரம் சொல்கிறது.மாலதி என்னும் அந்தணப் பெண்ணினால் ஒரு குழந்தை இறந்து போக,அவள் பாசண்ட சாத்தனான ஐயனாரை வேண்டுகிறாள். அவள் துயர் துடைக்க அந்தச் சாத்தன் குழந்தையாக அவதரித்து,பின் அந்தணச் சிறுவனாக வளர்ந்து,அதன் பின் கண்ணகியின் தோழியான தேவந்தி என்பவளை மணந்து அவளுக்கு மட்டும் தன் ‘மூவா இளநலம் காட்டி’ என் கோவிலுக்கு நாள்தோறும் வா! என்று கூறித் தீர்த்த யாத்திரை செல்வது போல நீங்கியது பற்றிய செய்தி உள்ளது.இதுதான் அவரின் நீங்காத இளமையை குறிப்பது. கீரிடம் தலையில் இருக்கும்.வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார் மற்றும் சிவனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார்.சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடது கையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருந்து இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார் இதை "உத்குடிகாசனம்" என்று ஆகமமே வரையறுக்கிறது.குதிரை அல்லது யானை மீதோ அமர்ந்திருப்பார்.எனவே,ஐயனாருக்கு சைவ படையல்தான் கால காலமாக.அவருக்கு பூஜை செய்பவர்கள் வேட்குயவர் எனும் வேளார்கள் அல்லது ஆசாரிகள் தான் அவர்களும் அவரைப் போவவே பூணூல் அணிந்திருப்பர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்