தமிழக முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு பேசும் படம்..'குயின்' தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுதம் மேனன் பதில் மனு தாக்கல் உயிருடன் இருந்த காலத்தில்
ஜெயலலிதாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறிய தீபாவுக்கு வழக்குத் தொடர எந்தத் தகுதியும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கணா ரணாவத் நடிக்கும் 'தலைவி' என்ற தமிழ்ப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அதேபோன்று, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 'குயின்' என்ற இணைய தளத் தமிழ்த் தொடரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். தன்னுடைய அனுமதியில்லாமல் வெளியாகும் 'தலைவி', 'ஜெயா', 'குயின்' ஆகிய படங்கள்,மற்றும் இணையதளத் தொடருக்குத் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா அண்ணன் ஜெயகுமாரின் திருமணமான மகளான தீபா உரிமையியல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை யடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.
வழக்கு இன்று நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில், தீபா வழக்குத் தொடர்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் எனக் கூறும் தீபா பலமுறை ஜெயலிதாவை தான் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்தக் கதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் ஏற்கெனவே 'தி குயின்' என்ற பெயரில் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது். இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்