சார்பு ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
நடத்தி லேப்டாப், செல்போன், வங்கி கணக்குப் புத்தகங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் ஜனவரி மாதம் எட்டாம் தேதி பணியிலிருந்த சிறப்புக் காவல் சார்பு ஆய்வாளர் வில்சன் பயங்கர வாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காஜாமொய்தீன், ஜாபர் அலி, அப்துல் சமது ஆகியோர் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தேசியப் புலனாய்வு முகமை அதாவது என்.ஐ.ஏ.வுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நேற்று நான்கு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
நெய்வேலி டவுன்ஷிப் ஏழாவது வட்டம் பெரியார் சாலையில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் காஜாமொய்தீன். இவரது முதல் மனைவி இந்திரா காந்தி. என்.எல்.சி. பொதுமருத்துவமனையில் செவிலியராக பணியில் இருக்கிறார். என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நெய்வேலியில் உள்ள காஜாமொய்தீன் வீட்டுக்கு வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத இந்திராகாந்தி திகைத்து நின்றார். பின்னர் இந்திரா காந்தி, இவரது மகன் முஜாஹிதீன், அவரது மனைவி பிரியதர்ஷினி, இந்திரா காந்தியின் தாயார் யசோதா ஆகியோரிடம் விசாரணை நடத்தி. வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு முடிவடைந்தது. சோதனையில் வீட்டில் இருந்த 3 செல்போன்கள், ஒரு லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனை மற்றும் விசாரணை அனைத்தும் கேமராவில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளுமேடு கிராமம் புதுத்தெருவில் காஜாமொய்தீனின் மூன்றாவது மனைவி பத்தா உன்னிசாவின் வீடு உள்ளது. இங்கும் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு சாகுல் ஹமீத் தலைமையில் டெல்லி சப்-இன்ஸ்பெக்டர் சுனில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பத்தா உன்னிசாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
காலை 11 மணிக்கு விசாரணை முடிந்து வந்த அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்த செல்போன், வங்கி கணக்கு புத்தகங்கள், காஜா மொய்தீன் தமிழில் எழுதிய கவிதைகள், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா பாலவாய் கிராமத்தில் காஜாமொய்தீன் பெயரில் உள்ள நிலத்துக்கான பத்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர். பத்தாஉன்னிசாவுக்கு அப்துல்லா. 8வயது ஒசாமா.6வயது என்ற இரு மகன்கள் உள்ளனர்.
காஜா மொய்தீனின் கார் டிரைவர் ஜாபர் அலி. சொந்த ஊர் நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டம்பாக்கம் ஆகும். காஜாமொய்தீனுடன் இவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் பிரான்கோ தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
காலை 6 மணியளவில் தொடங்கிய சோதனை 9.30 மணி வரை நடந்தது. அப்போது வீட்டில் இருந்த ஜாபர் அலியின் தாயார், தம்பி மற்றும் தங்கை ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை முடிவில் அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதேபோல் பரங்கிப்பேட்டை மதினா நகரில் காஜாமொய்தீனின் கூட்டாளி அப்துல்சமதின் வீடு அமைந்துள்ளது. இங்கு தற்போது அவரது தாய் அபினுனிஷா, தம்பி பகது ஆகியோர் வசித்து வருகின்றனர். இவரது வீட்டுக்கு தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் அம்னேஸ்வரி தலைமையிலான குழுவினர் நேற்று காலை ஆறு மணிக்கு சோதனை நடத்தினார். பின்னர் அவர்கள், அப்துல்சமதின் தாயார், தம்பியிடம் விசாரணை நடத்தியதோடு, அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றினர். கடலூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் வில்சன் இறப்புக்கு நீதி கிடைக்க நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்