முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண விலக்கு

துரை மாவட்ட ஆறு சுங்கச்சாவடிகள்  அறுபது  கிலோ மீட்டர் தூர இடைவெளியில்  இருக்கின்றன. இருபத்திஏழு கிலோ மீட்டர் தூர இடைவெளியில் மூன்று  சுங்கச்சாவடிகள் இருகின்றன. நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மதுரையில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வசதிகள் அனைத்தையும் செய்துத்தரும் வரை இந்தத் தடை இருக்கும்        வண்டியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியானது, நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி இருப்பதாக புகார் எழ அத்துடன்  ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தனி வழி  இல்லை என்ற பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்தனர்.
இதன்படி, இன்று காலை 9 மணி முதல் வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது. அடிப்படை வசதிகள் செய்துதரும் வரை கட்டணம் வசூலிக்க தடை இருக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கருத்துகள்