இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனாவா. தனிமைப்படுத்தப்பட்டார்.
கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சீனாவில் தோன்றி, இன்று அமெரிக்கா, இந்தியா என பல உலக நாடுகளையும் கொரோனோ வைரஸ் ஆட்டிப்படைக்கிறது. இஸ்ரேலில் 4,213 பேர் கொரோனா பாதிப்பு உள்ளது; மேலும்,16 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது, இன்று உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வேறு இரண்டு உதவியாளர் களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
RNI:TNTAM/2013/50347
கருத்துகள்