தமிழக அரசு, ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன்பாக, நிவாரணம் வழங்குவது குறித்து அறிவித்தது. அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார்.
நிவாரணம் பெறுவதற்காக, ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் சேர்வதைத் தடுக்கும் வகையில், வீடு வீடாக, 'டோக்கன்' வழங்க, வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 2 முதல் 15 ஆம் தேதி வரை, தொடர்ச்சியாக நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் சேர்வதைத் தடுக்கவும், நிவாரண வினியோகத்தை, நேரம் வாரியாக பிரித்து வெளியிடத் திட்டமிடப்பட்டு பொதுமக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், வீடு வீடாகச் சென்று, 'டோக்கன்' வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது ;
தேவையான அளவு, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை, முதலில் கடைகளின் இருப்பு வைக்கப்படும். அடுத்ததாக, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, நிவாரண தொகை பெறப்படும்.
ஒவ்வொரு நாளாக நூறு நபர்களுக்கு மட்டும், கூட்டமில்லாமல், நிவாரணம் வழங்கி முடிக்கப்படும். முன்னதாக, ரேஷன் கடை ஊழியர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து, வீடு வீடாக 'டோக்கன்' வழங்குவர்.அதில், பொருள் வாங்க வரவேண்டிய நாள், நேரம் இருக்கும்.
அதில் குறிப்பிட்ட நேரத்தில், டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுடன் கடைக்கு வந்தால், விரைவாக பெற்றுக்கொண்டு திரும்பி விடலாம். தலா, ஆயிரம் ரூபாயுடன் பருப்பு, எண்ணெயுடன் சர்க்கரையும் பார்சலாக இருக்குமெனக் கூறினர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்