கொரானாவை விட கொடூரமானது, சூதாட்டம்,மது எப்படி ஒரு மனிதனை உடல் ரீதியில் அழிக்குமோ அதைவிட அவனை பொருளாதாரம் உள்ளிட்ட பல வகையில் வீழ்த்தும் ஆயுதம் சூது மஹாபாரதத்தில் பாண்டவர்கள் நிலை தான். அண்மையில் தொலைபேசியை எடுத்தால் நாம் கேட்காமல் நமக்கு தானே வந்து தொல்லை தரும் விளம்பரம் யாரும் தெரியாமல் கைவைத்து விட்டால் அது தானே வந்து ஒட்டிக்கொண்டு திரும்பச் செல்ல மறுக்கும் படி அதை வடிவமைத்து புகுத்தப்பட்ட ஒரு புதிய வைரஸ் தான் இந்த ஆன்லைன் ரம்மி
ஊரடங்கு முடியும் பொழுது பலரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தைக் ஆன்லைன் ரம்மி எனும் அனகொண்டா கொண்டு போய்விடும் அபாயம்.
பொதுமக்களை ஆண்டியாக்கிப் போண்டி ஆக்கும் விபரீதமது இந்திய மக்களின் வாழ்வை கடுமையாக பாதிக்கும்
இந்தியாவின் சட்டப்படி பணம் வைத்து சீட்டு விளையாடுவது தண்டனைகுரிய குற்றமாகும்.
மேல்தட்டு மக்களின் கிளப்புகள்,பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து விளையாடுவது கூட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதி வழங்கும் நம் நாட்டில் சிறு பிள்ளைகளும் வைத்துள்ள தொலைபேசி செயலியில் இதை புகுத்தி பணம் பறிக்கும் வஞ்சகம் தடுக்கப்பட வேண்டும்.அப்படி இல்லை என்றால் விரும்பாமல் தானாகவே வந்து முன் நிற்கும் செயல்களாவது தடுக்கப்பட வேண்டும்.
இப்போது சமூக வலைத்தளங்களில் எங்கு நோக்கினும் ஆன்லைன் ரம்மி விளையாட அழைக்கும் விளம்பரங்கள்
இவ்விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் இடுவது வர்த்தகம் ஏன்றாலும் அது தானாகவே வருவது கொடுமையிலும் கொடுமை
ஆன்லைனில் எப்படி பணம் பறிபோகிறது
பார்க்கலாம்.
ஆன்லைனில் விளையாட உங்கள் வங்கி கணக்கிலிருந்து தான் நெட்பேங்கின் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும்
நீங்கள் உடனே ரம்மி விளையாடுங்கள் உங்களுக்கு உடனடி போன்ஸ் 50 ரூபாய் என்று துண்டில் இடுவதும்.
தெரியாமல் யாரேனும்
விளையாட ஆரம்பித்தவுடன் உங்களுக்கு 50 ரூபாய் போனஸ் கிடைத்துள்ளது என்று ஒரு மெஜெஜ் அனுப்பி உங்களுக்கு வலைவிரித்ததும்
வங்கிகஹ கணக்கு விபரத்தை அனுப்புவதும்.
அப்போதே உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்பதை ஒரு "சிறப்பு சாப்ட்வேர்" மூலமாக ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம் அறிந்து கொள்ளும் தந்திரமும் இதில் உண்டு.
உங்கள் அக்கவுண்டில் சுமார் ஒரு இலட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் விளையாட ஆரம்பித்தவுடன் 1000,5000..10,000 ரூபாய் என உங்களுக்கு கிடைக்கும்படி செய்வார்கள்.
நீங்கள் ரம்மி விளையாட்டில் பெரிய 'கில்லி' அல்லது அறிவு சார் சாணக்கியன் என நினைத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடுவீர்கள்.
அப்போதுதான் ஆபத்து ஆரம்பிக்கும். நீங்கள் எவ்வளவு திறமையாக விளையாடினாலும்..தோற்றுக் கொண்டே இருப்பீர்கள். வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் போய்விடும்.
இதுதான் இன்றைய நிலைமை
ஆன்லைன் ரம்மியின் ஆபத்து குறித்தும்.அது இந்தியாவில் சட்ட விரோதம் என அதை தடை செய்ய வேண்டும் எனவும் பலரும் பலமுறை பதிவுகள் வந்த போதும்
பா ம க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டும் ஆன்லைன் ரம்மியால் விளையும் ஆபத்து குறித்துக் கூறி.அதனைத் தடை செய்ய வேண்டும் என அறிக்கை கொடுத்தார்.
அச்சு ஊடகங்களும். காட்சி ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.
மத்திய..மாநில அரசுகளும் ஆன்லைன் ரம்மியால் விளையப் போகும் ஏதிர்கால ஆபத்துகஹ குறித்து உணரவில்லை என்றே தோன்றுகிறது.
தற்போது ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ள நேரத்தில் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருப்பதால் விபரம் தெரியாமல் இந்த ஆன்லைன் ரம்மி என்ற விபரீதக் கும்மியை அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊரடங்கு முடியும் பொழுது பொதுமக்கள் ஆன்லைன் ரம்மியால் நிச்சயம் போன்டி யாகிவிடுவார்கள்.
எனவே,சமூக அக்கறையோடு.. ஆன்லைன் ரம்மி எனும் தொலைபேசிச் சூதாட்டத்தைத் தடை செய்யக்கோரியும் அதன் ஆபத்து குறித்து அச்சு ஊடகங்களும்.. காட்சி ஊடகங்களும் செய்தி வெளியிட வேண்டும்.என அண்ணன் மூத்த பத்திரிக்கையாளர் திரு இராஜன் அவர்கள் கருத்து என்பதால்.
அரசியல் காட்சிகள்,அமைப்புகள்,இயக்கங்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளை வழியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மியை இந்தியாவில் தடை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கொரோனாவை விடக் கொடியது ஆன்லைன் ரம்மி அது இந்தியாவில்.. தமிழகத்தில் பல வீடுகளுக்குள் நுழைந்து விட்டது.
நம் சமூகச் சீரழிவுகளின் துவக்கம் .
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்