நகர்ப்புற சென்னைப் பகுதிகளில் மட்டுமின்றி, தமிழகத்தில் எங்கும் செல்ல அவசர பயண பாஸ்களைப் பெறலாம்.திருமணம், மருத்துவச் சிகிச்சை, துக்கமான காரியங்கள் உள்ளிட்ட அவசரப் பயணங்களுக் கான அனுமதி பெற உங்கள் பகுதி தாசில்தார்களை அணுகலாம். உரிய காவல்துறை ஆய்வுக்கு பிறகு அனுமதி தரப்படும்.என உத்தரவு.
வெளியூருக்கு செல்வோர் எங்கு "வாகன பாஸ்" வாங்க வேண்டும் என்பது குறித்து ஒரு விளக்கம்
பலரும் காவல்துறை அலுவலகத்தை அணுகின்றனர்
காவல்துறை பாஸ் வழங்குவது இல்லை. சென்னையிலிருந்து வெளியூர் செல்வோருக்க சென்னை பெரு நகராட்சி ஆணையர் மூலம் பெறலாம் சென்னை மற்றும் இதர மாநாகராட்சிப் பகுதிக்குள்ளாக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல மண்டல அதிகாரி ( Zonal Officer) பாஸ் வழங்குவார் மாவட்டத்துக்கு உள்ளாகவே பயணிப்போருக்கு தாசில்தார் மூலமாக பாஸ் வழங்கப்படுகிறது.சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமானால் எங்கிருந்து பயணத்தை துவக்குகிறார்களோ அந்த மாவட்ட ஆட்சியரிடம் பாஸ் வாங்க வேண்டும் மூன்று காரணங்களுக் காக மட்டும் பாஸ் வழங்கப்படு கிறது 1- திருமணம், 2-துக்கநிகழ்ச்சி, 3- உடல்நலம், பொதுமக்களின் குழப்பத்தை அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் இதை செய்தியாக்கி னால் குழப்பம் தீரும்.அதேபோல மற்ற மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் நிலை பற்றி விபரமில்லை.அதை தெளிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உண்டு.
RNI:TNTAM/2013/50347
கருத்துகள்