வடகொரியா அதிபர் கிம் ஜங் உன்னிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் அடுத்த அதிபராக அவரின் தங்கையான கிம் யோ ஜங் வருவார் என்ற நிலை
அறுவை சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தில்
வடகொரிய அதிபர் ஜிம் ஜங் உன்னின் உடல்நிலை மோசமாக உள்ளதாக அமெரிக்க உளவுத் துறை தகவல் உள்ளது. இந்தத் தகவலை வடகொரிய அரசு உறுதிப்படுத்தவில்லை.
அதிபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் வேகமாகப் பரவி வருவதையடுத்து 31 வயதான அவரது இளைய சகோதரி கிம் யோ ஜங் நாட்டில் அடுத்த தலைவராக உருவெடுத்துள்ளார். அது அந்நாட்டினரை ஆச்சரியப்படுத்தவில்லை. கடந்த மாதம் ராணுவ பயிற்சியின் போது பயம் கொண்ட நாய் குரைக்கத்தான் செய்யும் என தென்கொரியா கிம் யோ ஜங் கடுமையாக விமர்சனம் செய்தார் அனைவரும் அதை அறிவர். இதுகுறித்து ஆய்வாளர் யங்ஷிக் பாங் கூறுகையில் தென் கொரியாவுக்கு எதிராக அத்தகைய கடுமையான கருத்தை முன்வைக்க தங்கைக்கு அனுமதி கொடுத்ததே அண்ணன் கிம் ஜங் உன்தான்.
அவருக்கு மாற்றாக தங்கை கிம் யோ ஜங் வளர்ச்சியை அவர் அனுமதித்துள்ளார். 31 வயதாகும் கிம் யோ மிகவும் புத்திசாலி. அனைத்தையும் வேகமாக கற்றுக் கொள்வார். அனேகமாக அவரது அண்ணனின் உடல்நிலை குறித்த கேள்விகள் தொடர்பாக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
அது போல் வடகொரிய நாட்டின் மூத்த பேராசிரியர் லியோனிட் பெட்ரோவ் கூறுகையில் கிம் ஜங் உன்னை நேரடியாக தொடர்பு கொள்ள அவருக்குச் செல்வாக்கு உள்ளது. ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுடன் கிம் யோவுக்கு நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் அவருக்கு அனைத்தும் தெரியும். இவர் ஒரு நம்பகமான அரசியல்வாதியாவார். தென் கொரியர்கர் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் அண்ணனின் நேர்மறையான பிம்பத்தை பாதுகாக்க உதவியவர் இவர்தான் என்றார்.
கிம் ஜங் உன்னைவிட 4 ஆண்டுகள் இளையவரான இவர் தனது சகோதரருடன் சேர்ந்து சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றவர். உன்னுக்கு மிகவும் நெருங்கியவர். இவர் வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் பிரச்சாரத் துறையின் இணை இயக்குநராக உள்ளார். இவர் பிரச்சாரத் துறையில் மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். எனவே வடகொரியாவில் பதவியில் இவர் அமருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்