சீர்காழி பெண் காவல் ஆய்வாளர் மாமூல் வாங்கிச் சிக்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம்
சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் தஞ்சாவூர் மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ஸ்ரீபிரியா இவருக்கு சீர்காழி கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த தடுக்கப்பட்ட பகுதியில் பணி வழங்கப்
பட்டது . இவரின் கணவர் சோமசுந்தரம் என்பவர் நாகை மாவட்டத்தில் காவலராக பணியாற்றியபோதே பணியிலிருந்து நீக்கப்பட்டவர். நீதிமன்ற உத்தரவால் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிக்குச் சேர்ந்து இன்று வரை மருத்துவ விடுப்பில் உள்ளார்.
தற்போது திருவெண்காடு பகுதியில் ஆய்வாளர் இல்லை என்பதால் கூடுதல் பொறுப்பாக ஆய்வாளர் ஸ்ரீபிரியா கவனித்து வந்தார்,
இந்நிலையில் மேற்படி ஆய்வாளரும் கணவரும் சீருடையில் சொந்த ஸ்விப்ட் காரில் சீர்காழி தென் பாதியில் உள்ள. ஸ்டார் மளிகை , காவேரி டிபார்ட்மன்டல் ஸ்டோர், மெடிக்கல் ஷாப் ஆகியவற்றை மூட சொன்னாராம் பின்பு திருவெண்காடு அருகே மங்கைமடம் சென்று உள்ளனர்.ஆய்வாளர் காரில் இருந்த போது சோமசுந்தரம் இறங்கிச் சென்று கல்யாணி மெடிக்கல் கடையில் இருந்த உரிமையாளர் மூர்த்தியிடம்.
மிரட்டியும் கடையில் வேலை பார்த்த இரண்டு பணிபுரியும் பெண்களையும் போட்டோ எடுத்ததுடன் 2,000 மாமூல் வாங்கியுள்ளார், அருகில் இந்தியன் மளிகை , உதயம் மளிகை , குமார் பூக்கடை ஆகிய இடங்களிலும் வாங்கிய பின் கல்யாணி மெடிக்கல் உரிமையாளர் மூர்த்தியிடம் மாமூல் கேட்கவே பா ஜ க பொறுபப்பாளரான அவர் தகவலை மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்திடம் கூற, அவர் காவல்துறை மேலிடத்திற்குத் தெரிவிக்க
அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு சம்பவம் உண்மை என அறிந்து தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் ஆய்வாளர் ஸ்ரீபிரியாவையும் அவரது கணவர் சோமசுந்தரத்தையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்