முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிட்-19 இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை-பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி

கோவிட்-19 இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை-பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி
கொரானோ தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள சாவக்காட்டு பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதா வது:-கொரானோ தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரானோ தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார். இரண்டாயிரம் கணித ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகின்றனர். நாளை மறுதினம் ஆடிட்டர் தேர்வுக்கு ஆன் லைன் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10-ம் வகுப்புத் தேர்வு உறுதியாக நடைபெறும். கொரோனா நோய் தொற்றுக்கு தீர்வு காணப்பட்ட வுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனையின் பேரில் உயர் மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். பள்ளிகள் திறந்ததும் மாணவ- மாணவிக ளுக்கு சமூக இடைவெளி குறித்து கற்றுத்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துகள்