ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதி பிரிவு உபசார விழா வேண்டாமெனக் கடிதம் ஆகஸ்ட் 31, 2020 உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தனக்கு பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மனசாட்சி இடம் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். கொரானாவால் ஏற்பட்டுள்ள துயர நிலை காரணமாக பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மனசாட்சி இடம் தரவில்லையென உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி ஓய்வு பெறும் நீதிபதிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பிரிவு உபசார விழா அளிப்பது வழக்கம் இதனடிப்படையில் அவருக்குப் பிரிவு உபசார விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவருக்கு, நீதிபதி அருண் மிஸ்ரா எழுதிய கடிதம் வெளியானதில், நீதித்துறையின் தாயாக வழக்கறிஞர் சங்கத்தை எப்போதும் கருதி வருகிறேன். பிரிவு உபசார விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது. ஆனால், கொரோனோவால் ஏற்பட்டுள்ள தீவிரமான சூழல், துயர நிலையால் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மனசாட்சி இடமளிக்கவில்லை. எனவே பிரிவு உபசார விழாவில் பங்கேற்க இயலாமைக்கு பொறுத்தருள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, இயல்புநிலை நிலவும்போது, வழக்கறிஞர் சங்கத்துக்கு வருகை தந்து எனது மரியாதையை செலுத்துவேன், என தெரிவித்துள்ளார். பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் லேபிள்கள் சமூகம் பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்