அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கடந்த இரு தேர்தல்களாக சுருங்கியதால் இப்போது கலகக் குரல்கள் எழும் நிலை. சோனியா காந்தியின் தலைமையை எதிர்த்து குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த சர்மா, முகுல் வாஸ்னிக், மணீஷ் திவாரி உட்பட 23 தலைவர்கள் ஒன்றாகி ‘கட்சிக்கு தேர்தெடுக்கப்பட்ட, முழு நேரமும் பணியாற்றக் கூடிய செயல்பாடுகள் நிறைந்த தலைமை வேண்டுமென தலைமைக்குக் கடிதம் எழுதி. தகவல் காங்கிரஸ் செயற்குழுவுக்கு முதல் நாளில் ஆங்கில மீடியாக்களில் பிரதிபலிக்கவே. ஆளுங்கட்சி பாஜக, ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ (காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்) எனச் சொல்லி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இப்படி மூத்த தலைவர்களின் போர்க்கொடிகள் கிளம்பவே ஆகஸ்ட் 24 ஆம் தேதி கூடிய செயற்குழுவில் கடிதம் எழுதியவர்களில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்க காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் சிலர் மட்டும் காங்கிரஸ் தலைமையகத்தில் இருக்கவே கூட்டத்தில் கலந்துகொண்டு கடுமையான விமர்சனங்களை சந்தித்த குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் ஆகியோர் மீண்டும் தலைமை மீது விமர்சனங்களை வைக்கத் தொடங்கியுள்ளனர். கட்சி குறித்த விமர்சனங்களை செயற்குழுவில்தான் வைக்க வேண்டும், ஊடகங்களிலோ பொதுவெளியிலோ அல்ல என்று ஆகஸ்ட் 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுவில் கண்டிப்பாக அனைவருக்கும் சொல்லப்பட்ட பின் குலாம் நபி ஆசாத், ‘உட்கட்சித் தேர்தல் நடத்தவில்லை என்றால் காங்கிரஸ் இன்னும் 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்குமென்று பேட்டி கொடுத்து அதில் ’எங்கள் கடிதம் கண்டு கொள்ளப்படவில்லை. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறதென்று பாஜக மீது நாம் குற்றம் சாட்டுகிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் அரசியலமைப்பு சாசனமே பின்பற்றப்படுவதில்லையே?’ எனப் பேட்டி வர அந்த 23 தலைவர்களின் குரல் மாறத் தொடங்கிய நிலையில் காங்கிரஸ் செயற்குழுவில் குலாம் நபி ஆசாத்தை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகள், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு செயற்குழு உறுப்பினரிடம் இருந்து புறப்பட்ட கேள்விகள் அன்று கூட்டத்தையே உலுக்கியெடுத்தனவாமென டெல்லி அரசியல் தரப்பில் பேசும் நிலை. ‘ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தலைமைக்குக் கடிதம் எழுதிய 23 பேரையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் கண்டித்ததாகவும். அம்பிகா சோனியோ அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனக் கூறினாரென தகவல் உண்டு. இந்தச் செயற்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், கிருஷ்ணகிரி எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான டாக்டர் செல்லகுமாரும் கலந்துகொண்டு. அவர் பேச்சில் ராகுலும், சோனியாவும் மற்ற தலைவர்களுமே கூட அதிர்வாகவே செல்லகுமாரை யாரும் தடுத்து நிறுத்தவில்லையாம். பத்து நிமிடம் வரை பேசிய டாக்டர் செல்லகுமாரின் கேள்விகள் குலாம் நபி ஆசாத்தை உலுக்கி விட்டதாம். அப்படி என்னதான் பேசினார் ‘காங்கிரஸை வைத்து நேரு குடும்பம் அனுபவித்தது கொடுமைகளும், துயரங்களும்தானாம். நேரு குடும்பத்தின் தலைவர்களை வைத்துதான் காங்கிரஸும், நாடும் நன்மைகளை அனுபவித்து வந்திருக்கின்றன. கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீரில் 370 ஆவது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மத்திய அரசால் மாநிலமாகவும், லடாக் யூனியனாகவும் பிரிக்கப்பட்ட மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட எல்லா கட்சித் தலைவர்களையும் மோடி அரசு கைது செய்து இன்று வரை கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஆனால், உங்களை மட்டும் (குலாம் நபி ஆசாத்) மட்டும் மோடி அரசு கைது செய்யாமல் டெல்லிக்குச் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில் என்ன மர்மம்? இத்தனைக்கும் 370 ஆவது சிறப்பு அந்தஸ்தை காஷ்மீருக்கு வழங்கியதே காங்கிரஸ்தானே. காஷ்மீரை துண்டாடி விட்டார்களென்று இன்னமும் காஷ்மீரிலும், காஷ்மீருக்கு வெளியேயும் உரக்கப் பேசுவது காங்கிரஸ்தானே. இந்த காங்கிரஸைச் சேர்ந்த காஷ்மீரின் முன்னாள் முதல்வரான உங்களை மட்டும் மோடி அரசு கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது எப்படி? உங்களுக்கெல்லாம் டெல்லியில் 5 ஏக்கரில் பத்து ஏக்கரில் பங்களா வேண்டும். ராஜ வாழ்க்கை வேண்டும். அதெல்லாம் இருந்தால் சோனியா காந்தி வேண்டும் என்பீர்கள். ராகுல் காந்தி வேண்டும் என்பீர்கள். அதெல்லாம் கிடைக்காத போது கட்சி நினைவு வந்துவிடும். தலைமையை மாற்ற வேண்டும் என்பீர்கள். காங்கிரஸின் முதல் குழந்தை நேரு குடும்பத்தில் தான் பிறக்கிறது. நாமெல்லாம் அடுத்த குழந்தைகள் தான்’ என செல்லகுமாரின் பேச்சு செயற்குழுவில் புயலைக் கிளப்ப ராகுல் இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்க. காஷ்மீர் விஷயத்தில் அமித் ஷா, குலாம் நபி ஆசாத்தை ஏன் மென்மையாக நடத்தினார் என்ற கேள்வி இன்று வரை அரசியல் அரங்கில் எழுப்பப்படாத கேள்வியானது. அதை கடந்த 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுவிலேயே செல்லகுமார் கேட்டதும் குலாம் நபி ஆசாத் முகம் மாற்றம் கண்டதாம். அவருடைய அடுத்தடுத்த தாக்குதல்களுக்கு இதுவே காரணமாகச் சொல்லப்படுகிறது. செயற்குழுக் கூட்டம் முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் டெல்லியின் மூத்த பத்திரிகையாளர்களுக்கு இந்தத் தமிழக அட்டாக் பற்றிய தகவலே கிடைத்த விபரம் ஒரு தலைவர் மூலம் தெரியவரவே. காஷ்மீர் விஷயத்தில் பாஜகவுடன் குலாம் நபி ஆசாத் ஏதேனும் சமரசம் செய்துகொண்டாரா? அதன் விளைவாகத்தான் இந்த கடிதமும் அதற்கடுத்த பேட்டிகளும் அரங்கேறுகின்றனவா என்ற சந்தேகத்தில் இருக்கிறதாம் காங்கிரஸ் தலைமை. இன்னும் இந்த விவகாரம் வெடிக்கும் என டெல்லி வட்டாரத்தில்” ஹாட் நியூஸாகிரது. மராட்டிய சரத்பவார்,மேற்கு வங்க மம்தா அசாம் சங்மா ஆந்திராவில் ராஜசேகரரெட்டி மகன் போல காஷ்மீருக்கு ஒரு குலாம் நபி ஆஷாத் எனப் பேச்சு துவக்க நிலை தானே. கடைத்தெருவர கத்தரிக்காய் முற்ற வேண்டும்.அதுவரை காத்திருக்கலாமே.

கருத்துகள்