முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசத்தின் ஊழல் ஒழிக்கும் உத்தமத்தலைவன் மூத்த தலைவர் டாக்டர் சுவாமி பிறந்தநாள்

இந்திய அரசியலில் நாரத முனி என பலரும் பேசக் காரணம் நாரதர் சரஸ்வதியின் புதல்வர், பெரும் அறிவாளி. ஆனால் ஓரிடத்தில் நிற்பவரும் அல்ல, அவரால் ஏற்படாத கலகமும் அல்ல என்றாலும் அவரின் கலகமெல்லாம் நன்மையிலே முடியும். ஊழல் ஒழிப்பில் தனி ஒரு மனிதனாக ஏகபட்ட தர்மங்களை மீட்டெடுப்பவர் அவர், புராணங்களில் தர்மம் வென்றது போல இப்போது அவர் தலையீடு செய்த இடமெல்லாம், நியாயம் செழித்த இடமெல்லாம் அவரின் பங்களிப்பு இருக்கும் அப்படி இந்திய அரசியலில் மிகப் பெரும் அறிவாளியும், பெரும் விவகாரங்களை இங்கு செய்வித்து நாட்டுக்கு மகா முக்கிய பங்களிப்பினை செய்தவர் தான் டாக்டர் சுவாமி அவரது தந்தை பெயர் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மதுரை சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பூர்வீகமானாலும் சென்னையில் சாந்தோமில் தான் பிறந்து வளர்ந்தது கல்வி அவருக்கு இயல்பாய் வந்தது, எதிரும் புதிருமான கல்விப் பிரிவுகளை அனாயாசமாகக் கடந்தார் அவருக்கு புள்ளியல் கணிதம் பொருளாதாரம் என எல்லாமும் அழகாய் புரிந்தது, அந்த பெருமையுடன் டெல்லி ஐ.ஐ.டியில் பேராசிரியரானார் டாக்டர் மன்மோகன் சிங், டி.என் சேஷன் மற்றும் பெனாசீர் பூட்டோ,ப.சிதம்பரம், போன்ற பெரும் பிம்பங்களுக்கெல்லாம் பாடம் நடத்திய குருநாதர் அவர் அப்படியே ஊழலுக்கு ஜால்ரா தட்டி சமத்தாக !? இருந்திருந்தால். சந்தேகமின்றி மன்மோகன் சிங்கின் இடம் சுவாமிக்குத்தான் கிடைத்திருக்கும், காங்கிரசுக்கு ஜால்ரா அடித்து நாட்டைப் பற்றி யோசிக்காமல் இருந்திருந்தால் மிகபெரும் இடத்தை சுப்பிரமணியன் சுவாமி பெற்றிருப்பார் ஆனால் அவருக்கு நாட்டுபற்று இருந்தது, பணமதிப்பினை இந்திரா காந்தி குறைத்த பொழுது அதைக் கண்டித்த முதல் நபர் சுப்பிரமணியன் சுவாமி அந்த மோதலில் இந்திரா காந்தி ஒரு பெரும் அநியாயம் செய்தார் , உண்மையைச் சொன்ன சுவாமியை ஐ.ஐ.டி விட்டு விரட்டினார் அல்லவா. இந்திராவினை மிக தைரியமாக எதிர்கொண்ட முதல் நபர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியே. இந்திராவின் ஏகாதிபத்திய மனநிலையினை முதலில் கண்டு சொன்னதும் அவர்தான் பின் சுவாமி அகில உலகப் பிரபலமானார், உலகின் மிகபெரும் பல்கலைகழகமெல்லாம் அவரை கொண்டாடின காலம் அது, அமெரிக்கா முதல் ஜப்பான் வரை எல்லாப் பல்கலைகழகங்களும் அவரை உரை நிகழ்த்த அழைத்தன‌ தமிழன் உலகெல்லாம் மிகபெரும் கல்விமானாக, ஞானவானாக வலம் வந்தார். அவருக்கென தனி இடமிருந்தது துர்வாச முனிவர் போல யாருக்கும் அடங்காமல் நியாயத்தை மட்டும் பேசிவந்த அவரை ஜனசங்கம் அதாவது பாரதீய ஜனசங்கம் தான் அடையாளம் கொடுத்து மேல்சபை எம்பி ஆக்கியது, பின் ஜனதா கட்சியில் இருந்த சுவாமி பின் பாஜகவில் இணைந்து இன்று மிகபெரும் சக்தி மிக்கவராக வலம் வருகின்றார் சுவாமி நினைத்திருந்தால் அமெரிக்காவின் பலகலைகழக பேராசிரியராக அமர்ந்து இன்று கமலா ஹாரிஸை விட பெரிதாக அந் நாட்டில் வலதுகரம் ஆகியிருக்கலாம் இந்திராவுக்கு அடிபணிந்திருந்தால் இங்கு சோனியா காலத்தில் பிரதமாராகியிருக்கலாம். அட ரிசர்வ் வங்கியின் நிரந்தர ஆளுநரகாகியிருக்கலாம், பாஜகவுக்கு ஜால்ரா தட்டி யிருந்தால் இந்நேரம் மாநிலக் கவர்ணர், உள்துறை அமைச்சரென கம்பீரமாகவே கூட வலம் வரலாம் ஆனால் சுவாமி அப்படி அல்ல, அவர் மனதில் பட்டதை மகேசனே முன் நின்றாலும் அஞ்சாமல் கூறும் சிங்கம் இதனால் அரசியலுக்கு அவர் தேவையில்லை என்பது பலரின் முடிவு, ஏனெனில் இப்போது நடப்பது வியாபார அரசியல் அது அறத்துக்கு அப்பாற்பட்டது ஆனால் சுவாமி அறம் ஒன்றே தர்மம் என தனித்து நிற்பவர், அந்த அறமே இன்று அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது இன்றும் மோடிக்கு எதிரான தலைமை இல்லை எனும் நிலையில் சாமி ஒருவர்தான் அவருக்கும் சில நேரம் குடைச்சல் கொடுக்கின்றார் அதுதான் சுப்பிரமணியன் சுவாமி, அதுதான் நாட்டுபற்று சுவாமியின் சாதனைகள் ஏராளம் உண்டு. இந்திராவின் பொருளாதார திட்டத்தை எதிர்த்து நின்றது முதல் அவர் ஈழத்தில் தலையிட்டு புலிகளை வளர்த்தது வரை துணிச்சலாக எதிர்த்தவர் சுவாமி காஷ்மீர் முதல் தமிழகம் வரை எங்கெல்லாம் தேச ஒருமைபாட்டுக்கு குந்தகம் விளையுமோ அங்கெல்லாம் சுவாமி முதல் ஆளாக இருப்பார் அப்படியே இந்துக்களின் நலன் காக்கவும் அவர் முதல் ஆளாக நின்றார் சேது பாலத்திற்கு தடை வாங்கியது, மானசரோவர் செல்ல சீன அரசிடம் அனுமதி பெற்றதென ஏராளம் உண்டு திருப்பதிக் கோவிலுக்குள் தங்க கவசம் பொருத்தும் முயற்சியை அவர் தடுத்ததிலும் விஷயம் இருந்தது கீழ் விஷாரத்தில் கொடுமைப் படுத்தப் பட்ட இந்துக்களின் நிலையை சுப்ரீம் கோர்ட்டுக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு தனி பஞ்சாயத்து பெற்றது.அரசாங்கத்தின் பிடியிலிருந்து இந்துக் கோவில்களை மீட்க வழக்கு போட்டிருப்பது என்பதெல்லாம் குறிப்பிடதக்கவை திருப்பதி கோவில் சொத்துக்களை மத்திய தணிக்கை துறை ஆய்வு செய்ய உத்தரவு பெற்றவர். முல்லை பெரியாறு அணையில் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி 1997 ஆம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு 9 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி அணையில் 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதே தீர்ப்புதான் இன்றும் 142 அடியாக உயர்த்தத் தடையில்லை என்று கூறப்பட்டுள்ளது. தேவர் திருமகன் சிலை நாடாளுமன்றத்தில் நிறுவினார். தர்மம் எப்பொழுதும் அதர்மத்துக்கு எதிராய் ஒரு சக்தியினை நிறுத்தி அதை காத்தும் நிற்கும், அப்படி திமுக அதிமுகவின் அராஜகங்களை தனி மனிதனாக எதிர் கொண்டு நின்று வென்றவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி எல்லோரும் வாய்பேச அஞ்சிய காலத்தில் புலிகளை கிழித்தவர் அவர்தான், ராஜிவ் பற்றி புலிகள் வெளியிட்ட அறிக்கையினை உன்னிப்பாக கண்டவர், அக்கொலை நடந்ததும் இதை செய்தது புலிகள் எனத் தெளிவாக சொன்னார் புலிகள் இந்தியாவினை நம்பி இருக்க வேண்டியவர்கள் என அவர்களை கணக்கில் எடுக்கா விசாரணை குழு பின் புலிகள்தான் குற்றவாளி என கடைசியாக கண்டறிந்தது இந்த அதீதமான முன்னெச்செரிக்கைதான் சுவாமி மு.க. அழகிரியின் அராஜகம் மதுரையில் வளராமல் முதலில் எதிர் கொண்டவரும் அவரே, ஜெயலலிதாவின் ரவுடிக் கூட்டத்தால் சந்திரலேகா மீது அமிலம் ஊற்றபட்ட காலங்கலில் உயிர் ஆபத்தினை சந்தத்தவரும் அவரே கருணாநிதி என்பவர் ஜெயலலிதாவினை பலவீனபடுத்த சில வலுவில்லா வழக்குகளை தொடுத்திருந்ந்தார், அதிமுக பலம் குறைய வேண்டுமே அன்றி அழிய கூடாது எனும் அரசியல் அதில் இருந்தது சுப்பிரமணிய சுவாமி தொடுத்த வலுவான வழக்கே பின் ஜெயாவுக்கும் சசிகலாவுக்கும் தண்டனை ஆனது, இல்லையேல் இன்று சசிகலா முதல்வராக வீற்றிருப்பார். 2000 க்கு பின் டெல்லியில் மிகபெரும் ஊழலை செய்த திமுகவினைக் கேட்க யாருமற்று இருந்த நிலை ஸ்பெக்ட்ரம் எனும் அலைக்கற்றை ஊழல் மிகபெரிய முறைகேட்டினை சுவாமி தான் வெளிக் கொண்டு வந்தார். தமிழகம் என்றல்ல கர்நாடாகவிலும் 1988 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சியில் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்பதாக சுவாமி தொடர்ந்த வழக்கில் ஹெக்டே ராஜினாமா செய்தார் இன்றும் காங்கிரஸின் தூக்கத்தை கெடுக்கும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் வழக்கினை வெளி கொண்டுவந்தவர் அவர் தான் அலகாபாத் நீதிமன்றம் இராமர் கோவில் கட்ட இறுதியில் தீர்ப்பு வழங்கியிருந்தது, அதை விரைவுபடுத்த உயர்நீதி மன்றம் சென்றவர் சுவாமிதான், அந்த வழக்குத்தான் வெற்றியாய் முடிந்தது ஒரு மனிதன் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் எதிராக ஒரே நேரத்தில் இயங்கமுடியுமென்றால் அவரிடம் 100 சதம் உண்மை இருக்க வேண்டும், அது சுவாமிக்கு உண்டு என்பது கடந்த மூத்த தலைவர்களில் இன்று சாமிக்கு பிறந்த நாள். வாழ்த்துக்கள் கூறுமிடத்து நாம் பலவற்றை நினைவு கூறக் காரணம் அவர் தான் ஊழல் ஒழிப்பில் நம் மானசீகமாக குரு நான் பேசியபோது பல மேடைகளில் எனது பேச்சை முடிக்கும் வரை யாரும் குறுக்கிடாமல் சுவாமி பலநேரம் காத்திருந்த நிகழ்வு உண்டு இதில் திருமதி சந்திரலேகா அவர்கள் மோதலில் கூட முடிந்த காலகட்டத்தில் அவர் நம் மீது தனி அக்கறை கொண்டவர் எத்தனையோ முனிகள் இருந்த பாரதத்தில் துர்வாசருக்கு தனி இடம் உண்டு. அவர் கோபக்காரர் என்பார்கள், ஆனால் அவருக்கு நியாயமான விஷயங்களில்தான் கோபம் வரும், அந்தக் கோபம் உலகுக்கு நன்மையாய் முடியும் அப்படி இன்று யார் வலையிலும் சிக்காமல் தனக்கென தனிப்பாதை வகுத்து கிட்டதட்ட 80 வயது கடந்து ஆளும் கட்சி எதிர்கட்சி என எல்லோருக்கும் சிம்ம சொப்பணமாய் வலம் வரும் சுப்பிரமணியன் சுவாமி ஒரு அதிசயம் அவர்பற்றிப் படிக்காதவர்கள் படிக்க வேண்டிய அத்தியாயம் 4 வார்த்தை மொழி ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தாலே மேதாவி எனக் கருதும் பதர்கள் இருக்கும் உலகில் ஐ.ஐ.டி பேராசிரியர், அகில உலக பேராசிரியர் என்ற நிலையில் இருந்தும் பணிவாக நிற்கும் பொருளாதார மேதை சுவாமி ஒரு அதிசயம் 10ம் வகுப்புத் தாண்டினாலே தான் இந்தியாவில் இருக்க கூடாதவன் அமெரிக்காவில் குடியேற தகுதியுள்ளவன் என கருதுவோர் மத்தியில் அமெரிக்க பல்கலைகழக வேலையினை விட்டு வந்த சுவாமி ஒரு அதிசயம் படிப்பும் சம்பாதிக்க, அரசியலும் சம்பாதிக்க என நினைக்கும் உலகில் இரண்டும் நாட்டு மக்களுக்காக என வந்து நிற்கும் சுவாமி அரசியல் வாதிகளின் ஒரு அதிசயம் அரைகுறை படிப்போடு வெளிநாட்டுக்கு சென்று விட்டால் ஏதோ பிரிட்டிஷ் பரம்பரை போல் அங்கேயே தங்கிவிடும் இந்தியர் மத்தியில், இந்தியாவினை மறப்போர் மத்தியில், விசா இன்றியே அந்நிய நாடுகளில் தங்கிவிடுவோர் மத்தியில் பெரும் வாய்பிருந்தும் அதை புறந்தள்ளி தேசம் என வந்து நிற்கும் சுவாமி அதிசயம் தன், தன்வீடு, தன் படிப்பு , தன் குடும்பம் என்போர் மத்தியில் நாடு, நாட்டு மக்கள் தேசியம் என நிற்கும் சுவாமி அதிசயம். மிகபெரும் படிப்பிருந்தும் , பல்கலைகழகமே நடத்தும் தகுதி இருந்தும் அதையெல்லாம் தூக்கி எறிந்து நல்ல சமூகம் உருவாக, அது உண்மை தெரிந்து தேசியத்தில் கலந்து வளர பாடுபடும் சுவாமி ஒரு அதிசயம் கவுன்சிலர் தேர்தலில் வென்ற நினைப்பில் அவனவன் முதல்வர் பதவிக்கு குறிவைக்கும் காலத்தில் பதவிக்கு ஆசைபடாத அவர் ஒரு அதிசயம் உண்மை பேசாமல் இருக்க மந்திரி பதவி, கொள்ளையடிக்க மந்திரி பதவி என கொள்கை கோட்பாடு எதுவுமன்றி சம்பாதிப்பவர் மத்தியில் பதவி வேண்டாம், நாட்டில் சத்தியம் நிலைக்க வேண்டும் என பாடுபடும் சுவாமி ஒரு அதிசயம் புலிகள் இருக்கும் பொழுது ஒரு நிலப்பாடும், அவர்கள் அழியும் போது ஒரு நிலைப்பாடும் எடுப்போர் மத்தியில் கடைசிவரை புலிகளை தேசவிரோதிகள் என சொல்லி நின்ற அந்த தைரிய சுவாமி ஒரு அதிசயம் முன்னால் மத்திய சட்ட அமைச்சர் இன்னால் நாடாளுமன்ற மாநிலங்களின் அவை உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் மிக மிக அரிதானவர்கள், அப்படி ஒருவர் கிடைக்க இத்தேசம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் திராவிட இம்சைகளின் தமிழகத்தில் அவரின் பெருமை ஒரு காமெடியன் போல சித்தரிக்கபட்டிருக்கலாம் ஆனால் யாருக்கும் இல்லா மிகபெரும் பெருமையும் ஆளுமையும் அறிவும் நாட்டுபற்றும் மத அபிமானமும் அவருக்கு உண்டு சுவாமி மதவெறியர் அல்ல மத நெறியர், ஆம் அவரது மகள் இஸ்லாமியரைத்தான் திருமணம் செய்தார், அதை சுவாமி வரவேற்றார் இதுதான் சுப்பிரமணியன் சுவாமி இன்றும் தேசவிரோத சக்திகளுக்கு சிம்ம சொப்பமணமாகவும், ஆளும் கட்சி தவறான முடிவெடுத்தால் மண்டையில் கொட்டி ஆலோசனை சொல்லும் ராஜகுருவாகவும் அவரே விளங்குகின்றார் மாரிதாஸ் மேல் திமுக வழக்குகளை தொடுப்பதை கண்ட சுவாமி, மாரிதாஸுக்கு ஆதரவாக ஒரே ஒரு டிவிட் போட்டதில் திமுக மகா அமைதி ஆம், சுவாமியின் பலம் அவர்களுக்கு தெரியும். அதுதான் சுவாமி இன்று 80 வயதைக் கடக்கும் சுப்பிரமணியன் சுவாமி , இன்னும் நீண்ட ஆயுளுடன் தேசத்துக்கு மகத்தான தொண்டுகளைச் செய்ய வாழ்த்துக்கள் சுவாமியிடம் ஒவ்வொரு இந்திய மாணவனும் கற்றுகொள்ள வேண்டிய விஷயம் நிறைய உண்டு அவரின் கல்வி, தைரியம், நாட்டுபற்று, பதவிக்கு ஆசைபடா தன்மை, பணபற்று இல்லாமை மகா முக்கியமாக அவரின் ஒழுக்கம் இன்றுவரை தனிபட்ட ஊழலோ இல்லை இதர விவகாரங்களிலோ சிக்காத மிகபெரிய கண்ணியவான் அவர், அதனை அவரின் எதிரிகளும் மறுக்க முடியாது எவ்வளவு எதிர்ப்புகள்? எவ்வளவு மிரட்டல்கள்? எவ்வளவு ஆபத்தான சவால்கள்? சுவாமி அதை எப்படிக் கடந்தார்? உண்மையினை பேசுவோர் மதுரையிலும் சென்னையிலும் இன்னும் பல இடங்களில் வெட்டியும் , சுட்டும் கொல்லபடும் நாட்டில், வெடிகுண்டிலோ விஷ உணவிலோ கொல்லபடும் நாட்டில் சாமி இதுகாலமும் எப்படி தப்பி வந்தார்? தர்மம் அவரை காத்து வருகின்றது, அவர் காத்த உண்மைகள் சத்தியமாய் அவரை காத்து நிற்கின்றன. சுப்பிரமணியன் சுவாமியின் வாழ்வும் தொண்டும் ஒவ்வொரு பள்ளியிலும் போதிக்க வேண்டிய பாடம் சமயநூல்கள் உண்மையினை சொல்லும் என்பது போல, சுவாமியின் வார்த்தைகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மை என்பதுதான் அவரின் பலம், மிகபெரும் பலம் நாட்டுக்காய் வாழும் ஒரு தவமுனியின் அந்த வார்த்தைகள் எக்காலமும் உண்மை ஒன்றே சுமந்து வந்தன,வருகின்றன இன்னும் வரும் ஒரு காலம் வரும், அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மிகபடித்த அறிவாளி, மிகபெரிய கல்விமான் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைபடாமல், வளமான வாழ்க்கைக்கும் சுகமான வாழ்க்கைக்கும் ஆசைபடாமல் , உயிரை பணயம் வைத்து உண்மை பேசினான் என்றால் அப்பொழுது சுப்பிரமணியன் சுவாமியினைத்தான் தேசம் கைகாட்டும் காமராஜர், கலாம் போலவே தமிழரின் மிகபெரும் அடையாளம் சுப்பிரமணியன் சுவாமி சுப்பிரமணியன் என்றால் காக்கும் தெய்வம் என பொருள் அப்படி தேசத்தின் மிகபெரிய காவல்காரனுக்கு , ராஜ குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பெரு மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றது தேசம்மும் பப்ளிக் ஜஸ்டிஸ் இதழும் வாழ்க நீ எம்மான்.. இந்நாடு பயனுற அடுத்த தலைமுறை வாழ்வாங்கு வாழ்வதற்கே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...