அரசு விழாவில் சபைநாகரீகமின்றி ஜாதிப் பழமொழி பேசிய சர்ச்சை அமைச்சர்

மதுரை விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய ஜாதிய வார்த்தை  சர்ச்சையாகி எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு யாதவர் இளைஞர் அமைப்பினர், யாதவர் ஒருங்கிணைப்பு குழுவினர், தமிழ்நாடு யாதவ மகாசபை உள்ளிட்ட அமைப்பின் 38 பேர் நேற்று மாலை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து செல்லூர் காவல்துறையினர்  அவர்களைக் கைது செய்ததையடுத்து போராட்டங்களில் ஈடுபட வந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான போராட்டம் குறித்து வழக்றிஞர் ரகுநாத் பேசும் போது, ‘‘மதுரை செல்லூரில் வீரன் அழகு முத்துகோன் சிலை வைத்திட இடம்  மாநகராட்சி அனுமதி கேட்டிருந்தோம். சிலையால் போக்குவரத்து நெரிசல் என்றுகூறி அதே இடத்தில் கபடி வீரர்கள் சிலை வைக்க அமைச்சர் முனைப்பாகச் செயல்பட்டார்.  இப்போது அவதூறாக பேசி மன்னிப்புக் கேட்கிறார். இது கண்டிக்கத்தக்கது'' என்றார்

தூத்துக்குடி அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் : தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் யாதவர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை அந்தந்த தொகுதிகளிலுள்ள யாதவர்களின் வாக்கு வங்கி தான் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது. அவர் மீது தமிழக முதல்வர், துணை முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை மற்றும் யாதவ கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 21ஆம் தேதி மதுரையில் போராட்டம் நடந்த உள்ளதாகத் தகவல் உண்டு.

சங்கரன்கோவில் தேரடித் திடலில் நேற்று யாதவர் சமுதாயத்தினர் திரண்டு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதில் சிலர், அமைச்சர் செல்லூர் ராஜூவின் படத்தைத் திடீரென எரித்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கரன்கோவில் நகர் காவல்துறையினர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.மதுரை பரவை பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிற்கு வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பிறந்த வாழ்த்து பெறச் சென்ற சிறுவன் சிறுவருக்குப் பொன்னாடை போர்த்திப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பரவை பகுதியில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல் பரவையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தையும் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனக்குப் பிறந்தநாள் என்றும், அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் சாக்லேட் கொடுத்து வாழ்த்து பெற வேண்டும் எனக் கூறி சிறுவர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.இதைக் கேள்விப் பட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, அந்த சிறுவரை வரவழைத்து தனது வாகனத்தில் வைத்திருந்த ஒரு பொன்னாடையை அச்சிறுவனுக்குப் போர்த்திப் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து, நினைவுப் பரிசையும் வழங்கினார்.

இந்த பிறந்தநாள் வாழ்த்துகளைச் சற்றும் எதிர்பாராத சிறுவனும் அப்பகுதி மக்களும் அமைச்சரின் செயலை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். சிறுவருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை கொடுத்துச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு பரவை பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.அமைசருக்கு சிறுவர்கள் அமைச்சரை விமர்சிக்கும் வைரல் காணொலி பார்த்தவர்கள் இது இவருக்குத் தேவையா என்ற வினாவும்  வரலாமலில்லை. மதுரையில் மத்தியத் தொகுதியில் கணிசமான அளவு யாதவர்கள் உள்ள தொகுதியாகும் இது சிலப்பதிகாரக்காலத்திலிருந்தே மக்கள் நிலை அதுவே மதுரை யாதவமக்களின் வரலாறு பெரிது.அதை உணராமல் பேசிய அமைச்சர் ஒரு ஜாதியின் வாக்கு வங்கியை எதிர்தரப்புக்கு வாய் மூலம் மடைமாற்றிவிட்டாரே என வருத்தப்படும் கட்சியினர் உண்டு. முதல்வராக எம் ஜி ஆர் இருந்தபோது அமைச்சர்களாக மதியூகி  மந்திரிகளாக நெடுஞ்செழியன், வி.வி.சாமிநாதன், செ.மாதவன்,பன்ருட்டி ராமச்சந்திரன்,போன்ற அறிவார்ந்தவர்கள் வைத்து அரசியல் செயததால் வெற்றி தேடிவந்தது,அவர்கள் அரசியலில் பொது நாகரிகம் அறிந்த தலைவர்கள் அதுபோன்ற நிலை தற்போது இல்லை நமக்கு பரமார்த்த குரு கதை கேட்ட ஞாபகம் தான் வருகிறது என மக்கள் பேசிக்கொள்ளுவது நம் காதில் விழாமல் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா