மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலைகாரனுக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மரண தண்டனை

மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலைகாரனுக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மரண தண்டனை
.   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது மகிளா நீதிமன்றம்.

அறந்தாங்கி அருகே ஏழு வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்யப்பட்ட பதைபதைக்கும் சம்பவம் குறித்து அப்போது  தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிகழ்வு உண்டு 

இக் கொலை வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போகவே  அருகில் உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று பெற்றோர்கள் கருதி தேடிய நிலையில் இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்சி அடைந்த  பெற்றோர்கள் மேலும்  உறவினர்களின் வீடுகள், அருகில் உள்ள இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் சிறுமியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து,  மோப்ப நாயின் உதவியுடன் தேடியநிலையில் சிறுமியின் உடல் அப்போது  கிராமத்திற்கு அருகே ஒரு ஏரியில் கருவேல மரங்கள் நிறைந்தப் பகுதியில் காட்டுப்பகுதியில் கண்டுபிடியக்கப்பட்டதையடுத்து, சிறுமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை பிரேதப் பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் அப்போது  ஈடுபட்டனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபரைக் கைது செய்து விசாரிக்க உண்மை வந்தது.அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து காவல்துறை சாட்சியங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வழக்கு  புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றதில் நேற்று தீர்ப்பு அளித்த நீதிமன்றம்  சிறுமி பாலியல் வன்கொடுமை கொலைகாரன் ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.               முன்பு 

மருத்துவப் பரிசோதனைக்காக காவல்துறை  பாதுகாப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் ராஜா சேர்க்கப்பட்டார். திடீரென காவல்துறையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜா ஜூலை 16 ஆம் தேதி தப்பி ஓடிவிட்டார்.

சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சாமுவேலுக்கு மூன்று பிரிவுகளில் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

மேலும் குற்றம் நடந்து ஆறுமாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு என வரவேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா