வித்யாபாலனுடன் இணைந்து நடித்த நடிகை ஆர்யா பானர்ஜி மர்ம மரணம்

இறந்து போன  நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை திரைப்படமாக  எடுத்த ‘தி டர்ட்டி பிக்சர்’ திரைப்படத்தில் வித்யாபாலனுடன் இணைந்து நடித்த நடிகை ஆர்யா பானர்ஜி என்ற நடிகை மர்ம மரணம்


  இத்திரைப்படம் மட்டுமல்லாது ஒரு சில இந்திப்படங்களிலும் நடித்திருக்கும் ஆர்யா பானர்ஜி மாடலிங் செய்வதிலும் கவனம் செலுத்தியுள்ளார். காலம்சென்ற  சிதார் கலைஞர் நிகிலோபந்தோபாத்யாயா மகளான ஆர்யா பானர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தில்  அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருகிறார். அவரது வீட்டின் படுக்கையறையில் நேற்று நடிகை ஆர்யா பானர்ஜி இறந்த  நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஆர்யா பானர்ஜி வீட்டின் பணிப்பெண்  சனிக்கிழமை வழக்கமாக வேலைக்கு வந்துள்ளார். அப்போது காலிங் பெல் அடித்தும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அந்தப் பெண் அக்கம் பக்கத்தில் இருப்போரை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தனது படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார் ஆர்யா பானர்ஜி.மேலும் ஆர்யா பானர்ஜியின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல்துறையைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை திரட்டி சோதனை செய்து வருகின்றனர்.அத்தோடு அப்பார்ட்மெண்டில் ஆர்யா பானர்ஜி மட்டும் தனியாக வசித்து வந்ததாக வீட்டு பணிப்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பெங்காலி நடிகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா