நாற்பது விவசாய அமைப்புகளுடன் நாளை மதியம் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

போராட்டத்தில் ஈடுபடும் விவசாய அமைப்புகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் 30ஆம் தேதி புதன்கிழமை மதியம் இரண்டு மணிக்குப் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகள் கலந்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அழைப்பு  விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்பது குறித்து விவசாய அமைப்புகள் விரைவில் முடிவெடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகள் பங்கேற்று வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டு டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவர் எதிர்பார்ப்பு அது நாளை புதன்கிழமை தெரியவரும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா