விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனமாக விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு

பாதுகாப்பு அமைச்சகம் விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனமாக விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம் (AFSCB) தேர்வுஇந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ)  வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் (பொதுத்துறை) 2020”  என்ற பிரிவில்  விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தை (AFSCB) வெற்றியாளராகக் குறிப்பிட்டுள்ளது.

எப்ஐசிசிஐ இந்தியா விளையாட்டு விருதுகள் விழாவில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் என்ற விருது   விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடந்த 8ஆம் தேதி வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி முத்கல் தலைமை தாங்கினார்.

காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த விழாவில், இந்த விருதை  விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏர் கமடோர் அசுதோஷ் சதுர்வேதி, எப்ஐசிசிஐ தலைவரிடம் இருந்து  பெற்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா