மரம் அறக்கட்டளையுடன் ரோட்டரிசங்கம் இணைந்து கே.வி.கோட்டை பள்ளியில் மரம் நடும் விழா, புதுக்கோட்டை மாவட்டம் 16 டிசம்பர் 2020 ல் கே.வி.கோட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆலங்குடி ரோட்டரி சங்கமும் பள்ளியின் தேசிய பசுமைப்படையும் இணைந்து மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை நடத்தியது. பள்ளித் தலைமை ஆசிரியர் ம. தங்கராசு தலைமையில் ரோட்டரியனும்,பட்டதாரி கணித ஆசிரியருமான என். செல்வக்குமார் பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளரும்பாரத சாரண மாவட்ட அமைப்பு ஆணையரும் செயலாளருமான ஆலங்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வரவேற்றார். விழாவிற்கு அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் தமிழக அரசின் இராதா கிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியருமான கே திராவிடச் செல்வம் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்
விழாவிற்கு புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் நிறுவனரும் பிரபலமான மரம் நடும் சமூக சேவையாளருமான புதுக்கோட்டை மரம் இராஜா சார்பில் 2000 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியதுடன் விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அறந்தாங்கி மாவட்டக் கல்வி பள்ளித்துணை ஆய்வாளர் சி. செல்வம், ஆலங்குடி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ரோட்டரியனும், மின் செயற் பொறியாளருமான செல்லக்கணபதி கே.வி.கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மங்களம் மெய்யர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் ஹக்கீம்,உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். விழா நிகழ்வுகளை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் எஸ்.நாகரெத்தினம், ஏ.அந்தோணி ரோஸ்லின், சுதாபிரியா , ஆர்.திருப்பதி, உடற்கல்வி ஆசிரியர் எஸ்.வின்சென்ட்
ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ரோட்டரி சங்கப் பொருளாளர் ரோட்டரியன்,அதையொட்டி வின் ஸ்டுடியோ ஆர் சந்திரசேகர் நன்றி கூற இனிதாய் மரம்நடும்விழா அமைந்தது.
கருத்துகள்