எஸ்பி.பி, சாலமன் பாப்பையா, உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள்

 உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு 

எஸ்பிபி, சுப்பு ஆறுமுகம், சாலமன் பாப்பையா, பம்பாய் ஜெயஸ்ரீ, ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள்
இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

முன்னாள் ஜப்பான் பிரதமர் திரு ஷின் சோ அபே, மறைந்த பின்னணிப்பாடகர் திரு எஸ். பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷணும், 102 பேருக்கு பத்ம ஸ்ரீயும் வழங்கப்படுகின்றன.

பல்வேறு துறைகளை சேர்ந்த தமிழகத்தின் 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் விவரம் வருமாறு:

மறைந்த திரு எஸ். பி. பாலசுப்ரமணியம் - கலை - பத்ம விபூஷண்

திருமிகு பி. அனிதா - விளையாட்டு - பத்ம ஸ்ரீ

திரு சுப்பு ஆறுமுகம் - கலை - பத்ம ஸ்ரீ

திரு சாலமன் பாப்பையா - இலக்கியம் மற்றும் கல்வி- பத்திரிகை துறை - பத்ம ஸ்ரீ

திருமிகு பாப்பம்மாள் - விவசாயம் - பத்ம ஸ்ரீ

திருமிகு பம்பாய் ஜெய ஸ்ரீ ராம்நாத் - பத்ம ஸ்ரீ

மறைந்த திரு கே சி சிவசங்கர் - கலை - பத்ம ஸ்ரீ

திரு மராச்சி சுப்புராமன் - சமூக பணி - பத்ம ஸ்ரீ

மறைந்த திரு பி சுப்பிரமணியன் - வர்த்தகம் மற்றும் தொழில் - பத்ம ஸ்ரீ

மறைந்த டாக்டர். திருவேங்கடம் வீரராகவன் - மருத்துவம் - பத்ம ஸ்ரீ

திரு ஸ்ரீதர் வேம்பு - வர்த்தகம் மற்றும் தொழில் - பத்ம ஸ்ரீ

பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு வாழ்த்துக்களை பலரும் உரித்தாக்கிவருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்