32 குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள்

பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

32 குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள்இந்தாண்டுக்கான பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள், 32 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், பொதுசேவை, மற்றும் வீர தீர மிக்க துறைகளில் தலை சிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள் கொண்ட குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால சக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய குழந்தைகள் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் இந்த விருதுகளை பெற்றுள்ளனர். கலை மற்றும் கலாச்சார துறையில் 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வித் திறன் சாதனையில் 5 குழந்தைகளும், விளையாட்டு துறையில் 7 குழந்தைகளும் விருது பெற்றுள்ளன. 3 குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான விருதுகளையும், தமிழகத்தில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு  சமூக  சேவைக்கான விருதும் கிடைத்துள்ளது. 

விருது பெற்ற இளம் சாதனையாளர்களை பாராட்டியுள்ள குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், ‘‘பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகளை வெற்றியாளர்களை ஊக்குவிப்பதோடு மட்டும் அல்லாமல், ஆயிரக்கணக்கான இளம் குழந்தைகளையும் கனவு காண செய்யும். நாடு வெற்றியின் புதிய உச்சத்தை தொடவும்,  வளம் பெறவும் நம்மால் முடிந்ததை செய்வோம்’’ என கூறியுள்ளார்.

பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்  விருது பெற்றவர்களுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 ஜனவரி 25 அன்று நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுவார்.

தேசிய பால புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளின் பட்டியலை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கரின் விருதுகள், 2021 க்கு


1.

அமேயா லகுடு-

ஆந்திரப்பிரதேசம்

கலை மற்றும் கலாச்சாரம்

2.

வயோம் அஹுஜா-

உத்தரப்பிரதேசம்.

கலை மற்றும் கலாச்சாரம்

3.

ஹ்ருதயா ஆர் கிருஷ்ணன்-

கேரளா

கலை மற்றும் கலாச்சாரம்

4.

அனுராக் ரமோலா-

உத்தரகண்ட்

கலை மற்றும் கலாச்சாரம்

5.

தனுஜ் சமதார்-

அசாம்

கலை மற்றும் கலாச்சாரம்

6.

வெனிஷ் கீஷம்-

மணிப்பூர்

கலை மற்றும் கலாச்சாரம்

7.

சஹர்த்யா டி-

மேற்கு வங்கம்

கலை மற்றும் கலாச்சாரம்

8.

ஜோதி குமாரி-

பீகார்

துணிச்சல்

9.

குன்வர் திவ்யான்ஷ் சிங்-

உத்தரபிரதேசம்

துணிச்சல்

10.

காமேஸ்வர் ஜெகந்நாத் வாக்மரே-

மகாராஷ்டிரா

துணிச்சல்

11.

ராகேஷ்கிருஷ்ணா கே-

கர்நாடகா

புதுமை

12.

ஸ்ரீநாப் மௌஜேஷ் அகர்வால்-

மகாராஷ்டிரா

புதுமை

13.

வீர் காஷ்யப்-

கர்நாடகா

புதுமை

14.

நமியா ஜோஷி-

பஞ்சாப்

புதுமை

15.

ஆர்க்கிட் ராகுல் பாட்டீல்-

மகாராஷ்டிரா

புதுமை

16.

ஆயுஷ் ரஞ்சன்-

சிக்கிம்

புதுமை

17.

ஹேமேஷ் சடலவாடா-

தெலுங்கானா

புதுமை

18.

சிராக் பன்சாலி-

உத்தரபிரதேசம்

புதுமை

19.

ஹர்மன்ஜோத் சிங்-

ஜம்மு மற்றும்

காஷ்மீர்

புதுமை

20.

மொஹமட் சதாப்-

உத்தரபிரதேசம்

ஸ்காலஸ்டிக்

21.

ஆனந்த்-

ராஜஸ்தான்

ஸ்காலஸ்டிக்

22.

அன்வேஷ் சுபாம் பிரதான்-

ஒடிசா

ஸ்காலஸ்டிக்

23.

அனுஜ் ஜெயின்-

மத்தியப் பிரதேசம்

ஸ்காலஸ்டிக்

24.

சோனிட் சிசோலேகர்-

மகாராஷ்டிரா

ஸ்காலஸ்டிக்

25.

பிரசித்தி சிங்-

தமிழ்நாடு

சமூக சேவை

26

சவிதா குமாரி-

ஜார்க்கண்ட்

விளையாட்டு

27.

அர்ஷியா தாஸ்-

திரிபுரா

விளையாட்டு

28.

பாலக் சர்மா-

மத்தியப் பிரதேசம்

விளையாட்டு

29.

முகமது ரஃபி

உத்தரபிரதேசம்

விளையாட்டு

30.

காம்யா கார்த்திகேயன்-

மகாராஷ்டிரா

விளையாட்டு

31.

குஷி சிராக் படேல்-

குஜராத்

விளையாட்டு

32.

மந்திர ஜிதேந்திர ஹர்கானி-

குஜராத்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்